Tuesday, 15 January 2013

தும்பிக்கையில்லா யானை சச்சார் கமிட்டி அறிக்கை?


யானை விலங்குகளில் மிகப் பிரமாண்டபமானது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் தும்பிக்கை யானையின் தற்காப்பிற்கும், உணவினை அள்ளி உயிர் வாழ்வதற்கும் இன்றியமையானது என்பதினை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அதேபோன்று இந்திய துணைக் கண்டத்தின் விடுதலைக்காக பாடுபட்டு பரங்கியரை விரட்டிவிட்டு, பரங்கியரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் நாடு துண்டாடப் பட்டு, இந்திய முஸ்லிம்கள் மைனாரிட்டி என்ற நிலைக்குத் தள்ளபட்டனர்.
நாடு சுதந்திரம் அடைந்து அறுவதினைத் தாண்டிய பிறகு முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி ஆகியவற்றில் நிலை என்ன என்று ஆராய புது டெல்லி முன்னாள் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஆறு போர் கொண்ட குழுவினை பாரதப் பிரதமர் 2005 ஆம் ஆண்டு நியமித்தார்.
அந்தக் குழு சுமார் இருபது மாதங்கள் கழித்து 403 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையும் 30.11.2006 யில் பாராளுமன்ற மக்களவையில் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில் பதினெட்டு சதவீத முஸ்லிம் மக்கள் கொண்ட அமைப்பு இந்தியாவில் பதினெட்டு சதவீத சலுகையுடன் இருக்கும் தலித் மக்கள், பழங்குடியினரைவிட கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூகத்தில் பின் தங்கி உள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் உண்மையினை தெரிவித்தது.

ஒரு உண்மை அறியும் குழு அறிக்கை கிடைத்ததும் அதனை உடனே நிறைவேற்றும் கடமை அரசுக்கு உண்டு என்று எந்த ஜனநாயக, மத சார்பற்ற நாட்டில் உள்ள அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். ஆனால் இங்கே நடப்பது என்ன என்று பார்ப்போமேயானால் மத்திய அரசில் மைனோரிட்டி அமைச்சராக இருந்து இன்று வெளிநாட்டு அமைச்சராக இருக்கும் மதிப்பு மிகு சல்மான் குர்ஷித் அவர்களே புலம்பும் அளவிற்கு இருப்பது வெட்ககேடு என்றால் அனைவரும் ஒத்துக் கொள்ளத்தானே செய்வார்கள்!
மாண்பிமிகு மத்திய அமைச்சர் ராஜேந்தர் சச்சார் கமிட்டி 2006 இல் அமைத்ததிற்குப் பிறகு முஸ்லிம்கள் சமூகம், பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பில் அடைந்த முன்னேற்றம் பற்றி நடந்த கருத்தரங்கில் பேசும்போது, பல்வேறு துறைகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் சச்சார் குழுவினால் பரிந்துரைக்கப் பட்ட சிபாரிசுகள் நிறைவேற்றப் படமுடிய வில்லை எனச் சொல்லி இருக்கிறார்.
அவர் கூறும் குளறுபடிகள் பின் வருமாறு:
 ஆந்திரா மாநிலம் முஸ்லிம்களுக்கு நாலு சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்ததை உச்ச நீதி மன்றம் தடுத்து இடைகால உத்தரவு வழங்கப் பட்டதினை காரணமாக கூறுகிறார்.
இதேபோன்று உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் முன்பு ஆட்சி செய்த மாயா தேவி தலித் மக்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை தர சட்டம் கொண்டு வந்தபோது உச்ச நீதி மன்றம் தடை செய்தது. அப்போது மத்திய அரசு மாயா தேவி கட்சியின் ஆதரவினைப் பெற பாராளு மன்றத்தில் மாநிலங்களவையில் வரிந்து கட்டிக் கொண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றவில்லையா? ஏன் அதுபோன்ற ஒரு சட்டத் திருத்தம் மத்திய அரசோ அல்லது எந்த ஒரு தனி முஸ்லிம் எம்.பியோ தனி பில்லாக கொண்டு வரவில்லை என்று உங்களுக்குக் கேட்கத் தோணவில்லையா?
தமிழகத்தில் பிற்பட்டோர் இட ஒதிக்கீடு 69 சதவீதம் என்று கொண்டு வந்தபோது உச்ச நீதி மன்றம் வரை சென்று அவ்வாறு கொண்டு வந்தது செல்லும் என்று மாநில அரசு வாதாடிப் பெற்றதுபோல் மத்திய அரசு ஏன் செய்ய வில்லை என்று உங்களுக்குக் கேட்கத்தோனுவது நியாயம்  தானே!
சச்சார் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கைக்குப் பின் முஸ்லிம்கள் நிலை பற்றி பொருளாதார நிபுணர் அபுசலே ஷரிப் கூறுவதாவது:
1) முஸ்லிம்கள் கல்வியில் மற்ற பிற்பட்டவரின் பிள்ளைகள் மெட்ரிகுலேசன் பள்ளி அனுமதியினைக் காட்டிலும் பின் தங்கி உள்ளார்கள். உயர் கல்வியில் இந்து மத மாணவர்கள் மட்டுமின்றி மற்ற மைனோரிட்டி மாணவர் அட்மிசனைக் காட்டிலும் பின் தங்கி உள்ளார்கள் என்றும் கூறுகிறார்.
2) உங்களுக்கு அனைவருக்கும் தெரியும் மகாத்மா காந்தி கிராம வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ரூ.நூறு கொடுக்கப் படுவதும் அது இப்போது பாங்க் மூலம் வழங்கப் படுவதும். அந்த கிராம வேலை வாய்ப்பு திட்டத்தில் முஸ்லிம்கள்  ஆரவே  பயன் பெறவில்லை என்று கூறுகிறார். 
ஏன் முஸ்லிம்கள் இந்த நாட்டு மக்களில்லையா என்று உங்களுக்குக் கேட்கத்தோன்றும். இது அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் புறக்கணிக்கும் வேலைதானே! எத்தனை முஸ்லிம்கள் மாட, மாளிகைகளில் வசிக்கின்றனர். வெள்ளிக் கிழமை பள்ளி தோறும் சென்று பார்த்தால் காலணா, அறையனாவிற்காக கையேந்தும் முஸ்லிம் வயோதிகர், பெண்கள், நோயாளிகள் போன்றோரைப் பார்க்கும் போது நெஞ்சில் ரத்தம் கசிவது இயற்கைதானே! ஏன் அவர் இந்த நாட்டு குடிமக்கள் இல்லையா? அவர்கள் கிராம வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன் பெறக் கூடாதா?
3) முஸ்லிம்களுக்கு கடன் கொடுத்து உதவ ரிசர்வ் வங்கியால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள் திறக்காத கடிதங்களாகவே உள்ளன. அதனால் தான் முஸ்லிம் மாணவர் கல்விக் கடன் பெறவும், தொழில் முனைவோர் கடனுக்காகவும் வங்கிகளின் கதவுகளில் நாட்கணக்கில் காத்துக் கிடக்கும் பரிதாபமான நிலை ஏற்படுகிறது அன்றாட வாடிக்கையாக உள்ளது.
4) இந்தியாவில் முஸ்லிம்கள் உள்பட மைனாரிட்டி மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களாக 93 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் அந்த மாவட்டங்கள் முன்னேற ரூ 37,800 கோடிகள் நிதி ஒதிக்கீடு செய்யப் பட்டுள்ளன. ஆனால் 
அதனில் ரூ. 856 கோடிகள் தான் மாநில ஆரசுகளால் செலவழிக்கப் பட்டுள்ளன. 
மேற்கூறிய எடுத்துக் காட்டு மூலம் மாநில அரசுகள் எந்த விதத்தில் மைனாரிட்டி மீது கருணை காட்டுகிறது என்று விளங்க வில்லையா உங்களுக்கு? ஏன் மத்திய அரசு மைனாரிட்டி திட்டங்களுக்கு செலவழிக்க ஒரு கண்காணிப்பு குழவினை அமைத்து நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உங்களுக்கு கேட்கத் தோனவில்லையா?
தலித்துகளுக்கு வேலை வாய்ப்பில் பதவி உயர்வுக்கு மாநிலங்களவையில் கட்சி வேறுபாடு அல்லாமல் சமதாக் கட்சியினைத் தவிர ஆதரவுக் கொடுத்தனர். ஏன் தெரியுமா வருகின்ற பாராளுமன்றத்தில் தலித் மக்கள் ஓட்டுகள் இல்லையென்றால் கிடைக்காது என்பதால்தான்.
ஆனால் முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமை இல்லாததால் பல்வேறு பிரிவுகளாக தனித் தனியாக இட ஓதிக்கீடுக்கான ஆர்பாட்டங்கள், மறியல்கள் ஈடுபட்டன. காரணம் அந்த  அமைப்புகள் பலத்தினைக் காட்டுவதிற்குதான். ஒதிங்கு இருந்த 
கண்ணியமிகு காயிதே மில்லத்தால் வளர்க்கப் பட்ட இயக்கம் பாராளுமன்ற தேர்தல் வருகின்றது என்று தெரிந்தவுடன் அவசர அவசரமாக  இட ஒதிக்கீடு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிக்கை வெளியிட்டது  வரவேற்கப்பட வேண்டியது ஒன்றுதான் காலதாமதமானாலும்.
1971 ஆம் ஆண்டு காயிதே மில்லத் அலிகார் நகரில் பேசும்போது, முஸ்லிம்கள் வேறுபட்டு இருந்தால் வெற்றியினை பெறமுடியாது மாறாக ஒன்று பட்டால் வெற்றி காண முடியும் என்றார். அதனையேதான் ரசூலல்லாஹ் அவர்களும், 'முஸ்லிம்கள் ஒற்றுமை என்ற கயிறினை கட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்'.
தலித்துகளுக்கு வேலையில் பதவி உயர்வுக்கு வரிந்து கட்டிக் கொண்டு மாநிலங்களவையில் கைகலப்பு வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து மசோதா நிறைவேற மாயாதேவி பாடுபட்டார். இன்று ஆளும் கட்சியில் இருந்தாலும், உயர்  பதவிகள் வகித்தாலும்
முஸ்லிம்களுக்காக உரிமையினை பெற மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து பாடு படவேண்டும். இல்லை என்றால் நாளை எதிர் கட்சியில் அமர வேண்டிய நிலை வரும் என்று பயப் படவேண்டும். பேரறிஞர் அண்ணா சொன்னது போன்று, 'பதவி என்பது மேலில் போட்டிருக்கும் துண்டாகக் கருத வேண்டும்'. முஸ்லிம்களுக்கு சாதகமான சச்சார் மற்றும் மிஸ்ரா குழு அறிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை என்றால். பதவியினை உதறித்தள்ள தயாராக வேண்டியது தானே என்று உங்களுக்கும் எனக்கு கேட்கத் தோணுவது நியாயம்  தானே!
கவிஞர் ஆதிரைத் தாகா சொன்னதுபோல், 'துணிவில்லாத சமுதாயம் பட்டுப் போகும்'.
அதேபோன்று கட்டுக் கோப்பு இல்லாத சமூதாயமும் வீழ்ச்சி அடையும் என்று முட்டையினை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
முட்டை கெடாமல் இருப்பதிற்க்கும், குஞ்சு போரிப்பதிர்க்கும் எப்படி வெள்ளைக் கருவினையும்,மஞ்சள் கருவினையும் இணைக்கும் பாலமாக ஓடு இருக்கின்றதோ அதேபோன்று சமூதாய இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் முஸ்லிம்கள் நலனில் அக்கறையினை தங்களது மேலான கொள்கைகளாக கருதி ஒற்றுமைப் பட்டு குரல் கொடுத்தால் காணக் கிடைக்காத கமிசன் அறிக்கைகளுக்கும் காலம் வழி வகுக்கும். இல்லை என்றால் யானை தன் தலையில் மண்ணை அல்லைப் போட்ட கதையாகுமென்பது சரிதானே!


Tuesday, 1 January 2013

பாலியல் குற்றங்களும் பொது மக்கள் கருத்துகளும்!



16.12.2012 அன்று புது டெல்லியில் மருத்துவப் படிப்புத் மாணவி அம்ருதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமையும், அந்தப் பெண் லண்டன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகும் பிழைக்க வைக்க முடியவில்லை என்ற ஆதங்கமும் நெஞ்சை உருக்கிய சம்பவம் தான். அதேபோன்ற சம்பவங்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர் காவல் நிலைய எல்கைக்குள்ளும், திருவாரூர் மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளி மாணவிகளுக்கும் தமிழ் நாட்டில் நடந்து அதனால் கண்டனங்கள் எழுப்பி , கவலையும் மக்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால் மறுக்க முடியாது.
ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்த சிலர் அதுவும் குறிப்பாக மகளிர், துபாய், சௌதி அரேபியா மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்கள் போன்று  இயற்றப் பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒரு பெண்மணி கூறும்போது, 'தான் துபையில்  பல ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், அங்கே குற்றம் செய்தவர்களுக்கு மக்கள் மத்தியில், குற்றவாளிக்கு கசையடியும், மரண தண்டனையும் நிறைவேற்றுவதினைப் பார்த்ததாகவும் கூறினா' கூறினார். 
அது மட்டுமல்லாமல் சில அரசியல் தலைவர்கள் குறிப்பாக இந்திய நாட்டு ஜனாதிபதி மகனும், பாராளுமன்ற உறுப்பினரானவரும், ஆந்திர மாநில காங்கிரஸ் மந்திரியும், மதுரை ஆதீனமும் பெண்கள் கண்ணியமான உடை அணிந்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம் என்று கூறி முற்போக்கு மகளிரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர். இன்னும் சிலர், பெண்கள் இரவு நேரத்தில் கணவரில்லாத ஆண்களுடன் செல்வதால் இதுபோன்ற குற்றம் நடக்கின்றது என்றனர்.
மதுரை ஆதீனம் ஒருபடி மேல் போய் பெண்கள் முஸ்லிம் மத பெண்கள் போல் உடை அணிய வேண்டும் என்று கருத்துக் கூறி இருக்கிறார். அப்போது தான் இசை முரசு நாகூர் அனிபா பாடிய பாட்டு, 'முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே, முகத்தினை மறைத்திடு முஸ்லிம் பெண்ணே' என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
ஒரு மத்திய சமூக நலத் துறை அமைச்சர் பாலியல் குற்றம் செய்யும் மைனர் சிறுவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்னும் சிலர் சினிமா, தொலைக் காட்சியில் வரும் பாலியல் தூண்டும் செய்திகள் தான் இளைஞர்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று கூறுகின்றனர்.
மத்திய அரசும் இதுபோன்ற குற்றம் வராது தடுக்க அல்லது தண்டனை வழங்க என்ன செய்ய வேண்டும் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டி நியமித்துள்ளது.
நான் கூறிய அனைத்து தகவல்களும் தீ பற்றிய பின்பு அணைக்கும் செயலாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைகின்றேன்.
ஆனால் இஸ்லாமிய சரியாத் சட்டம் வருமுன் காக்கும் சட்டம் என்றால் மிகையாகாது.
ஏக அல்லாஹ் இறக்கி வைத்த திருக் குறானும், மனித வாழ்விற்கு நன்னெறி போதித்த நபி பெருமானாரின் நற்போதனைகளும் மனிதனை மாக்காளாக மாறாது பாதுகாத்துக் கொள்ளும் கேடையமாக அமைந்திருக்கின்றது என்றால் மிகையாகாது. போதை தலைக்கேறிவிட்டால் தாயென்றும், தாரமென்றும் குடிகாரர்கள் பார்ப்பதில்லை என்பதால் குடியினை தடை செய்து உள்ளது, உடல் அங்கங்கள் கணவருக்கு மட்டும் தான் காட்டவேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதினால் பெண்கள் கண்ணியமாக இருக்க வழி  செய்துள்ளது, தனக்குத் திருமணமானவளைத் தவிர அடுத்தப் பெண்களைப் பார்க்கும்போது தலை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்றும், பெண்களிடம் கண்ணியம் தவறும் மிருக குணம் படைத்தவர்களுக்கு அவர்கள் உணரும் படி கடுமையான சட்டங்கள் வரையறுக்க பட்ட சட்டப் பொக்கிஷம் தான் சரியத் சட்டம். 
அது சரி நமது நாட்டிலும் கற்பழிப்பிற்கு கடுமையான சட்டங்கள் குற்றவியல் சட்டத்தில் உள்ளதே பின் எப்படி இந்தத் தவறுகள் நடக்கின்றது எனக் கேட்கலாம்.  நமது நாட்டில் பாலியல் குற்றவாளிகளை முகத்தினை மறைத்து நீதி மன்றத்திற்கு அனுப்பும் செயலினைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் சரியத் சட்டத்தில் குற்றம் செய்யும் நபர் வெட்கி தலை குனியும் அளவிற்கு பொது மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவதால் அவன் எங்கு என்றாலும் அவனை சமூக புறக்கணிப்புக்கு ஆளாக நேருடுகிறது. அவ்வாறு செய்யாததினால் ஆழ்வார் திருநகரில் பள்ளிச் சிறுமியினை கற்பழித்து கொன்ற கயவன் ஏற்கனவே அதுபோன்ற குற்றம் செய்து ஜாமீனில் விடுதலையாகி மறுபடியும் குடி வெறியில் அதே தவறினைச் செய்திருக்கின்றான்.
மனிதனால் இயற்றப் பட்ட சட்டத்தினுக்கும், இறைவனால் வழங்கப் பட்ட சரியத் சட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை உங்கள் முன் வைக்கலாம் என நினைக்கிறேன்:
1) மனிதனால் இயற்றப் பட்ட சட்டம் பாராளுமன்றம், சட்டமன்றம் போன்றவைகளின் கைப்பாவையாகி உள்ளது.அது காலப் போக்கில் தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது.
ஆனால் சரியத் சட்டம் ஏக அல்லாஹ் அருளால் இறக்கி வைக்கப் பட்டுள்ளது. அது ஒரு நிலையான சட்டம். மனிதன் வாழ்வில் அத்தனை தேவைகளுக்கும் வழி காணப்பட்டுள்ளது.
2) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் நிலையானதல்ல. உதாரணத்திற்கு மது காங்கிரசு தமிழகத்தில் ஆண்டபோது திறந்து விடப் படவில்லை. ஆனால் அதற்குப் பின் வந்த அரசுகள் மதுவினை ஒரு வருமானம் வரும் துறையாக கருதினர். இன்றைக்கு மது விற்பனையால் ஆண்டுக்கு பதினெட்டாயிரம்  கோடி வருமானம் என கணக்குக் காட்டப் படுகிறது.
ஆனால் சரியத் சட்டத்தில் மதுவினைக் குடிப்பதிற்கும், விற்பனை செய்வதிற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்டுப் பாடு நேரத்திற்கு, அரசுக்கு ஏற்ப மாறுபட்டதில்லை.
3) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் வருங்கால சந்ததி பற்றி சிந்திப்பதில்லை. ஏனெறால் அந்தச் சட்டத்தினால் பயன் பெறுபவர் பெரும்பாலும் அரசியல் வாதிகள் என்பதால்.
ஆனால் அல்லாஹ்விற்கு வருங்கால சந்ததியினைப் பற்றிய சிந்தனை இருப்பதால் அவர்கள் பயன்படும் படி சட்டங்கள் உள்ளன. உதாரணத்திற்கு பெண்கள் தங்கள் அங்க அடையாளங்கள் தன்னால் கைப்பிடிக்கும் கணவனுக்கு மட்டும் தெரிய வேண்டும் என்ற அளவிற்குத் தான் உடை உடுத்த வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது. கணவனுடன் தான் பெரும்பாலும் பயணம் செய்யவேண்டும் அல்லது பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் ஆகியோருடன் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது. அதுபோன்று செய்யது தனிப் பட்ட ஆணுடன் இரவு நேரத்தில் பயணம் செய்ததால் டெல்லியில்  துரதிஷ்டமான சம்பவம் நடந்தது என்றால் மிகையாகாது.
4) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் குறிப்பிட்ட ஒரு நாடு, அதன் மக்களைச் சார்ந்து இருக்கும்.
ஆனால் இஸ்லாமிய நாடு அனைத்திற்கும் பொதுவான சட்டமாக சரியத் சட்டம் அமையும். இஸ்லாமில்லாத நாடுகளிலும் சரியத் சட்டம் இந்திய தண்டனைச் சட்டத்தினைத் தவிர கடைப் பிடிக்கப் பட்டு வருவதினைக் காணலாம்.
5) மனிதனால் இயற்றப் படும் சட்டம் பொது இடத்தில் நன்னடத்தையும், நாகரியத்தினை தடுப்பதாக அமைந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி அமைவதில்லை.
சரியத் சட்டம் நன்மையினைக் காத்து, தீமையினை தடுப்பதாக அமைந்துள்ளது. உதாரணத்திற்கு ஜினா என்ற விபச்சாரம் இஸ்லாத்தில் தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால் மனிதனால் ஏற்படுத்திய சட்டம் விபச்சாரத்திற்கு லைசென்ஸ் வழங்கும் அளவிற்கு உள்ளது.
6) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் நீதிப் படிப்பினை போதிக்கும் சட்டமாக அமையவில்லை.
ஆனால் சரியத் சட்டம் நீதி படிப்பினை போதிக்கும் சட்டமாக அமைந்துள்ளது.
7) மனிதனால் வடிவமைக்கப் பட்ட சட்டம் பொது அமைதிக்குப் பங்கம் வராதவரை அல்லது அந்தக் குற்றம் வெளி உலகிற்கு தெரியாதவரை குற்றமாகாது. திருமணமாகாத இருவர் ஒப்புதலுடன் உடல் உறவு கொள்வது குற்றமில்லை. 
ஆனால் மறைவானவற்றை அறியும் திறன் கொண்ட அல்லாஹ்வால் இயற்றப் பட்டச் சட்டம் மறைவான தீய செயலிலிருந்தும் மனிதனை காக்கின்றது. கணவன் அல்லாத வேறு ஒருவருடன் உடல் உறவு கொள்வதினை சரியத் சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை.
8) மனிதனின் சுயக் கட்டுப் பாடு தளரும்போது தவறுகள் நடக்கின்றன. இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனிதனும் சந்தர்ப்பம் கிடைக்காத பாலியல் குற்றவாளியாகத் தான் இருக்கின்றான். ஆனால் சரியத் சட்டமும், நபி பெருமானாரின் போதனைகளும் மனித ஒழுக்கத்தின் நீரூட்டாகும். ஆகவே தான் தனி மனிதனும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் நிதானம் இழப்பதில்லை.


இஸ்லாமிய சரியத் தண்டனை என்று சிலவற்றினைப் பார்க்கலாம்:
1) ஜினா: மனவியினைத் தவிர கள்ள உடல் உறவு கொண்டவனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் அவன் வெக்கித் தலை குனியும் அளவிற்கு நூறு கசையடிகள் தரப்படும்.
ஹோமோசெக்ஸ் என்ற புணர்விற்கு மரண தண்டனை உண்டு. ஆனால் உலகில் பல நாடுகள் அதனை அங்கீகரிக்கின்றன என்பது வெட்ககேடு என்றால் மிகையாகாது.
2) மது குடித்தால் இருபது முதல் நாற்பது வரையிலான கசையடி.
3) சரிக்: திருடளுக்கு வலது கை வெட்டப் படும். நான் மக்க மாநகருக்கு 1999 முதல் தடவையாக சென்றபோது சில வலது கை வெட்டப் பட்ட கருப்பினத்தவரினைக் கண்டேன். விசாரித்ததில் அவர்கள் திருடியதால் கை வெட்டப் பட்டதாக சொன்னார்கள். அதுபோன்ற தண்டனை கொடுத்ததால் தான் இன்றும் ஹரம் சரிப்பில் தொழுகைக்கு பாங்கு சொன்னதும் தங்கள் வியாபாரம் செய்யும் நகைக் கடையினை கூட மூடாமல் விட்டு விட்டு தொழுகையினை முடித்து வரும்போது திருடு போகாமல் இருப்பதினைக் காணலாம். 
ஆனால் நமது நாட்டில் திருடர்கள் தனி சாம்ராஜ்யம் நடத்தும் சிறைச் சாலைகள் தான் அதிகம்.
4) காத் அல் டாரிக்: நெடுஞ்சாலைக் குற்றங்களுக்கு இடது கை, வலது கால் வெட்டப் படும்.

ஆகவே இஸ்லாமியர் மற்றவர்களுக்கு வழி காட்டும் நன்னடத்தை உள்ளவர்களாக திகழ வேண்டும். ஆனால் நம்மிடையே சிலர் மது குடிப்பிதினை பெருமையாகவும், ஜினா செய்வதினை உயர்ந்த அந்தஸ்து மனிதர் செய்யும் செயலாகவும், படித்த, பணக்கார இளைஞர்கள் மற்றவர்கள் போல் கண்ணியம் தவறும் உடை அணிவதும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது.
மாற்று மதத்தினவர் கூட இஸ்லாமிய மார்க்க நற்பண்பு, ஒழுக்கக் கட்டுப்பாடு பற்றி புகழும் பொது இஸ்லாமியர் முறை தவறி நடக்காது காக்கும் பொறுப்பு ஒவ்வொரு இஸ்லாமியருடைய கடமை என்பது சரிதானே தோழர்களே!

Saturday, 15 December 2012

முஸ்லிம்களை உசிப்பேற்றிய பாபரி மஸ்ஜித் இடிப்பு!


இந்திய துணைக் கண்டம் பல்வேறு ஜாதி,மதம்,இனம்,மொழி,கலாட்சாரம் வேடுபாடுகள் கொண்ட நாடு. அந்நிய படை எடுப்புகளான  அலெக்சாண்டர்,செங்கிஸ்கான், முகலாயர்கள், டச், போர்துகீஸ், பிரெஞ்சு, ஆங்கிலேயர் ஆகியோர் கடந்த கால நிகழ்வுளாக இருந்தன. ஆனால் முகலாயர்களைத் தவிர இந்திய நாட்டு மக்களைக் கவர்ந்து, அவர்களுடைய கலாச்சாரத்திற்கு மெருகூட்டி, மக்களோடு மக்களாக கலந்தவர்கள் வேறு நாட்டவர் ஒருவருமில்லை. இந்திய செல்வங்களை சுரண்டி ஐரோப்பிய நாடுகளின் சிம்மாசனத்தில்  அலங்கரித்தனர்
ஐரோப்பிய நாட்டவர். அதற்கு உதாரணமாக   இங்கிலாந்து  ராஜ சிம்மாசனமும் ராணியின் கோகினூர் வைர கிரீடமே ஒரு சான்றாகும். ஆனால் இஸ்லாமிய மார்க்கம் போதித்தது, 'குடிபுகுந்த நாட்டினுக்கு விசுவாசமாக இருப்பது' என்ற கொள்கையினை தான் இன்றும் கூட பல்வேறு நாடுகளில் குடியேறிய முஸ்லிம்களும் கடைப் பிடித்து வருகின்றனர். உலகில் முஸ்லிம்கள் எந்தவித தேச விரோத செயல்களிலும் ஈடுபடுவதில்லை.
இந்தியாவினை ஆண்ட முஸ்லிம் அரசர்கள் , 'மக்கள் நல்வாழ்வு' கொள்கைகளைக்  கடைப் பிடித்து ஆட்சி செய்ததால் தான் முன்னூறு ஆண்டுகள் இந்துக்கள் மெஜாரிடியான நாட்டில் ஆட்சி நடத்த முடிந்தது. 
அதன் எடுத்துக் காட்டுதான் முஸ்லிம் பள்ளிவாசல்களும், இந்துக்கள் கோவிலும் பல பகுதிகளில் அடுத்தடுத்து இருப்பதினை இருப்பதினைக் காணலாம். 'உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு' என்ற மத சகிப்புத் தன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கியது இஸ்லாமியர் ஆட்சி.
எப்போது பறங்கியர் என்ற ஆங்கிலேயர் அமீனா போன்ற ஆமையாக இந்திய நாட்டில் நுழைந்தார்களோ அப்போதே இந்தியர்களை 'பிரித்தாளும்' கொள்கையினைக் கையிலெடுத்து வெற்றிக் கொடியினை டெல்லி செங்கோட்டையில் ஏற்றினர். அந்த வெற்றி நூறு ஆண்டுகள் கூட நிலைத்து நிற்க வில்லை. முதலாம் விடுதலை போரான 1857 ஆண்டு முஸ்லிம்களும், இந்துக்களும் ஒன்று பட்டு வெகுண்டெழுந்தனர். ஆகா  இந்தியர்கள் ஒன்று பட்டு விட்டார்களே இனியும் ஆட்சி செய்ய முடியாது என்று யோசித்த ஆங்கிலோயரின் தூபங்களுக்கு பலியானது தான் 1947 ஆண்டு இந்திய துணைக் கண்டம் பிரிந்து இரண்டு நாடானது.
மத துவேசத்தில் பாகிஸ்த்தான் பஞ்சாபிலும், இந்திய வங்க தேசத்திலும் பிரிவினை நேரத்தில் ரத்த ஆறு ஓடி இந்து  மக்கள்.இந்தியாவிற்கும், முஸ்லிம் மக்கள் பாகிஸ்தானுக்கும் இடம்பெயர வழிவகுத்தது. அப்படி இடம் பெயர்ந்த இந்திய முஸ்லிம்கள் படிப்பிலும், வசதி வாய்ப்பிலும் சமுதாயத்தில் உயர் நிலையில் இருந்தார்கள்.  ஆனால் நடுத்தர, ஏழை முஸ்லிம்கள்  இந்தியாதான் தங்கள் நாடு என்று சரணாகதியாகி மைனாரிட்டி  சமூகத்தினர் என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர். 
 இரண்டாம் உலகப் போருக்கு முன்பு 1936 இல் இந்துத்துவ தலைவர்கள் சிலர் 400 வருடங்களுக்கு முன்பு கட்டப் பட்ட பாபரி மஸ்ஜித் அருகில் தான் தங்கள் கடவுள் ராமர் பிறந்தார் என்ற தூபத்தினை போட்டனர். அதன் விளைவுதான் சுதந்திரம் அடைந்த பின்பு 22-12.1949 நடு ராத்திரியில் பாப்ரி மஸ்ஜிதின் மையப் பகுதியில் ராமர் சிலையினை வைத்து சமுதாய ஒற்றுமைக்கு வெட்டு வைத்தனர்.

சில இந்துத்துவ அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையினை கையிலெடுத்து, மஸ்ஜித் இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று குரல் கொடுத்து வந்தது. 1986 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் வளாகத்தில் அமைக்கப் பட்ட தற்காலிக கோவிலுக்கு போட்டிருந்த பூட்டினை திறந்து விட்டதால் மதப் பூசல் பிரச்சனை பூதாகரமாக கிளம்பியது. பாப்ரி மஸ்ஜித் அமைந்துள்ள அயோத்தி உத்திர பிரதேச மாநிலத்தில் வருவதால் அதனை 1990 ஆம் ஆண்டு ஆட்சி செய்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று தடையினை மீறி வந்த கரசெவர்களை தடுத்தி நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தி 16 உயிர்கள் போனாலும் பரவாயில்லை, தன பதவி தேர்தலில் பறிபோனாலும் பரவாயில்லை என்று துணிச்சலாக செயல் பட்டார்.அதன் விலை  1991 தேர்தலில் ப..க ஆட்சிப் பொறுப்பேற்று கல்யாண் சிங் முதல்வரானார். அதன் தைரியத்தில் சில முக்கிய தலைவர்கள் மஸ்ஜித் இடித்து விட்டு ராமர் கோவில் கட்ட நாடு முழுவதும் கர்செவர்களை திரட்டி முண்டாசு தட்டினார்கள். விளைவு, 6.12.1992 இல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், மத்திய அரசு மவுனம் சாதித்ததும் வரலாற்றுப் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை தானே!
மஸ்ஜித் இடிப்பு ஒரு திட்டமிட்ட சாதியில்லை என்று ஸ்பெஷல் சி.பி.. நீதி மன்றம் தீர்ப்புக் கூறினாலும், ஒரு சிறு உண்மை சிகழ்ச்சியினை உங்கள் முன்பு வைக்கலாம் என நினைகின்றேன். பி.ஜே.பி.யின் முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் விஸ்வாஸ் சொன்னதாக ஊடகங்கள் 2010 ஆம் ஆண்டு ஒரு செய்தியினை வெளியிட்டன. அதாவது 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருபது தேதியில் ராம்விலாஸ் விஸ்வாஸ் அவர்கள் மறைந்த பாரதப் பிரதமர் நரசிம்ம ராவினை சந்தித்ததாகவும், அப்போது பிரதமர் விச்வாசிடம் கர்செவர்களைத் திரட்டி என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதாகவும், அதற்கு விஸ்வாஸ், 'மஸ்ஜிதை இடிக்கப் போகிறோம்' என்று சொன்னதாகவும், மஸ்ஜித் இடிக்கும் வரை விஸ்வாஸ் அங்கே இருந்ததாகவும் பெருமையுடன் விஸ்வாஸ் சொன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதிலிருந்து உங்களுக்குத் தெரிந்து இருக்கும் பாபரி மஸ்ஜித் இடிப்பு ஒரு திட்டமிட்ட சதி என்று. எப்படி மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாதோ, அதேபோன்று உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும் அது காலத்தின் கட்டாயம். அதனை உறுதி செய்யும் விதமாக முன்னாள் பிரதமரிடம் மீடியா செயலாளராக இருந்த பி.வி.ஆர்.கே. பிரசாத் அவர்கள் 'வீல் பிகைண்டு வீல்' (திரைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வட்டம்) என்று எழுதிய புத்தகத்தில் திரு நரசிம்ம ராவ், முன்னாள் பிரதமர் அவர்கள் பாபரி மஸ்ஜித் இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்ட யாரும் அசைக்க முடியாத மாஸ்டர் ப்ளான் வைத்திருந்ததாகவும், அதற்கு சிருங்கேரி மட சாமியார் ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் தலைமை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து அதனை சுவாமி அவர்களும் ஏற்றுக் கொண்டதாக ஒரு செய்தி 15.12.2012 ஊடகங்களில் வந்துள்ளன. ஆகவே தான் பாபரி மஸ்ஜித் இடிப்பு மத்திய அரசு  மௌன சம்மதத்துடன் நிறைவேற்றப் பட்ட திட்டமிட்ட செயல் என்றேன். அநீதியினை கண்டு
.  வெகுண்டு எழுந்த கௌதம புத்தர், அசோகர், சிபி சக்கரவர்த்தி, மணி நீதி அரசன், பாண்டியன் நெடுஞ்செழியன் வாழ்ந்த நாட்டில் உயர் பீடத்தில் அமர்ந்திருக்கும் உச்ச நீதி மன்ற அரசர்களும் வெகுண்டேழுந்திருக்கின்றார்கள் ஏன் என்று கீழே தருகிறேன்:
பாபரி இடிப்பிற்கு காரணமானவர்கள் என்று பி.ஜே.பி. தலைவர்களான அத்வானி, 2ஜி புகழ் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினை கட்யார்  மற்றும் பதிராறு பெயர் குறிப்பிட்டவர்களும், பல ஆயிரம் பெயர் குறிப்பிடாதவர்களும்  குற்ற எண் 192/1992 இன் படி குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ரே பரேலி நீதி மன்றத்தில் நிறுத்தப் பட்டனர். மஸ்ஜித் இடிப்பு சம்பந்தமாக விசாரணை செய்ய  நீதிபதி லிப்ரஹன் தலைமையில் ஒரு கமிசனும் நியமனம் செய்யப் பட்டது.
ரே பெர்லி நீடி மன்றம் பி.ஜே.பி. தலைவர்கள் அத்வானி, ஜோஷி ஆகியோர்களை சதி வழக்கிலிருந்து விடுவித்து, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை மட்டும் விசாரணைக்கு ஏற்றது. அதனை எதிர்த்து சி.பி.ஐ. அலஹாபாத்  உயர் நீதி மன்றத்தில் முறையீடு செய்தது. 10.5.2010 அன்று அலஹாபாத் உயர் நீதி மன்றம் ரே பெரேலி நீதி மன்றம் பி.ஜே.பி. தலைவர்களை சதி வழக்கிலிருந்து விடுவித்தது சரி என்று தீர்பளித்தது. அதனை எதிர்த்து உடனே சி.பி.ஐ. உச்ச நீதி மன்றத்தினை அணுகாது ஒன்பது மாத காலந்தாழ்த்தி உச்ச நீதி மன்றத்தினை அணுகியது. அந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் 6.12.2012 அன்று விசாரணைக்கு வரும்போது அரசு தரப்பு சொளிசிடோர் ஜெனரல் ஏ. எஸ். சாந்தியோக் ஆஜராகவில்லை. அதனை அறிந்து நீதி அரசர்களான எச்.எல். தட்டா  மற்றும் சி.கே.பிரசாத் ஆகியோர் கண்டனம் தெரிவித்ததுடன், ரே பெரேலி நீதி மன்றத்தில் நடக்கும் வழக்கினையும் விரைந்து நடத்த உத்தரவு இட்டுள்ளனர்.
பாபரி மஸ்ஜித் இடிப்பு சமூக,பொருளாதார, பண்பாடு, கல்வி போன்றவற்றால் பிரிந்து கிடந்த முஸ்லிம்களை தட்டி எழுப்பிய ஒரு வரப் பிரசாதம் என்பதினை கீழ்க்கண்ட காரணங்களுடன் விளக்கக் கடமைப் பட்டுள்ளேன்:
1) பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு முன்பு பணக்கார, படித்த முஸ்லிம்கள்  சாதாரண முஸ்லிம்களைப் ஒதுக்கித் தள்ளிய காலம் மலையேறி,இடிப்பிற்குப் பின்பு தங்களுக்கு சமூக பாது காப்புத் தேவை என உணர்ந்து சகோதரத்தம், ஒற்றுமை என்ற பாசக் கைரினை பற்ற ஆரம்பித்தார்கள்.
2) பணத்தால், படிப்பால் பிரித்தாளும் முறை மறைந்து பாமரன் முதல் பங்களா வாசி வரை முஸ்லிம் என்ற ஒரு சொல் வடக்கிலிருந்து தெற்கு வரை இணைத்தது.
3) முதன் முறையாக வாழ்க்கையில் முன்னேறிய முஸ்லிம்கள் அடித்தளத்தில் துவளும் முஸ்லிம்கள் முன்னேற்றம் பற்றி கவலைப் பட்டு பல முன்னேற்ற காரியங்களில் ஈடு பட்டார்கள்.
4) சமூதாய இயக்கங்களுடன் இனைந்து அடித்தட்ட முஸ்லிம்களுக்கும் அரசு உதவி கிடைக்க செயலில் இறங்கினார்கள்.
5) முஸ்லிம் சனத்தொகைக் கேட்ப விகிதட்சார முறைப்படி வேலை,கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க பல போராட்டங்கள் நடத்தும் எழுச்சியினை முஸ்லிம்களிடையே ஏற்படுத்தியது.
7) இந்தியாவில் எந்த மூலையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப் பட்டாலும் ஒரு மித்த குழல் எழுப்பும் மன தைரியம் தந்து விட்டது.
8) விசாரணை இல்லாமல், அல்லது தண்டனை காலம் முடிந்தும், அல்லது குற்றம் செய்யாமல் சிறையில் வாடும் எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்களுக்காக மத, அரசியல் வேறுபாடு இல்லாத நாற்பது எம்பிக்கள் ராம் விலாஸ் பாஸ்வான், மணி சங்கர் அய்யர் ஆகியோருடன் 4.12.2012 அன்று மணிக் கணக்கில் இந்திய பிரதமரிடம் வாதாடும் அளவிற்கு நம்பிக்கை மணி ஓசை எழுப்பி உள்ளது.
9) முஸ்லிம்களிடம் கூட்டு வைத்துக் கொள்ள அரசியல் கட்சிகள் போட்டிப் போடும் அளவிற்கு முஸ்லிம்களின் ஒற்றுமை நிலை நாட்டப் பட்டது.
10) முஸ்லிம்களின் உரிமைகளை ஜனநாயக முறையில் பெறுவதிற்கு பாராளு மன்றத்திலும், சட்ட மன்றத்திலும் இடம் பெற வேண்டும் என்று சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளை துவங்கி வெற்றிகரமாக மத்தியிலும் கேரளா போன்ற மாநிலங்களிலும் சிறப்புடன் செயலாற்ற முடிகிறது.
11) பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு பின்பு நடுநிலை இந்து மக்களே பி.ஜே.பையினை ஓதிக்கித் தள்ளும் அளவிற்கு தள்ளப் பட்டுள்ளது.
ஆகவே தான் ஆரம்பத்தில் சொன்னேன் பாபரி மஸ்ஜித் இடிப்பு இஸ்லாமியர்களை உசிபெற்றிய துயரச் சம்பவம் என்று. ஆங்கிலத்தில், 'Blessing in disguise' என்று, அது உண்மையாகி விட்டதல்லவா?

Monday, 3 December 2012

அனாதையாக விடப்பட்ட இந்து சிறுமி பிந்து, வாழ்வளித்த முஸ்லிம் தம்பதியர்!


30.11.2012 தேதியிட்ட செய்தித் தாள்களில் வந்த ஒரு சுவையான தகவலினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகின்றேன்.
அரேபியாவிலும், மற்ற உலக நாடுகளிலும் பெண்களின் உரிமையினை மறுக்கப் பட்டு, அவர்கள் பிறப்பதே ஒரு சாபக் கேடு என்று கருதப் பட்ட 1400 ஆண்டுகளுக்கு முன்பு புகாரி 1418 யில் கூறியபடி "பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப் படுகிறார்களோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்தில் இருந்து  காக்கும் திரையாக அமையும்" என்று சொல்லி பெண் குழந்தைகள் பிறந்தவுடன் சாகடிக்கும் முறையினை அறவே ஒழித்தது இஸ்லாமிய மார்க்கம் என்றால் மிகையாகாது. இன்று கூட பெண் குழந்தைகள் பிறந்ததும் கள்ளிப் பாலையோ, அல்லது நெல்லினையோ பச்சிளம் குழந்தையின் வாயில் திணித்து சாகடிக்கும் முறைகள் பல்வேறு பகுதிகளில் நடப்பதும், பெண் குழந்தையினை  அனாதையாக நடுத்தேருவில் விட்டு விட்டு செல்வதும் செய்திகளாகவே வந்து கொண்டுதான் இருக்கின்றது என்றால் மறுக்க முடியாது. அப்படிப் பட்ட ஒரு செய்தியினைத் தான் தினசரிகள் பகிர்ந்து கொண்டன.
முப்பது வருடங்களுக்கு முன்பு கோவையினை சார்ந்த ராஜகோபாலும் அவர் மனைவி இந்திராவும் தங்களது மூன்று வயது அருமை மகளான பிந்துவிற்கு திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா மற்றும் சர்கஸ் பார்ப்பதிற்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். நகரினை சுற்றி காட்டிவிட்டு வரும் வழியில் பிந்துவினை தவற விட்டு விட்டு கோவை சென்று விட்டார்கள். அதுதான் சமயமென்று ஒரு ஆசாமி கடத்திச் சென்று நகைகளைப் பிடுங்கிக் கொண்டு விட்டு ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்திருக்கிறான். அதன் பின்பு பிந்துவினை அனாதையாக விட்டு விட்டு சென்று விட்டான். அனாதைக் குழந்தை கிடைத்தால் போதுமே இந்த பொல்லாத உலகத்தில். தங்கள் விருப்பம்போல் பந்தாடியிறுக்கிறார்கள் சிலர். அவர்களிடமிருந்து தப்பித்து அழுது கொண்டு வரும்போது. அந்தக் குழந்தையின் மீது இரக்கப் பட்ட ஐந்து ஆண் குழைந்தைகளுக்கு பெற்றோரான தாஜுதீன்-சுபைதா என்ற தீன்குல தம்பதியர் பிந்துவினையும் அரவணைத்து வளர்த்ததோடு நில்லாமல் அந்தக் குழந்தையின் பெற்றோரைத் தேட ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டு  உள்ளனர்.அதனைப் பார்த்த சிலர் வந்து பார்த்துச் சென்று அந்தக் குழந்தை தங்களது குழந்தை இல்லை என்று சென்றாலும் கஷ்டத்தோடு கஷ்டமாக அந்த பிந்துவினை வளர்த்து வந்து உள்ளார்கள். அந்த பிந்துவிற்கு முஸ்லிம் பெயரான பீனா என்று சூட்டி அழகு பார்த்தார்கள்.
ஒரு பெண் பெரியவளானதும் ஒரு தந்தை என்ன கடமை செய்ய வேண்டும் என்று புகாரி 1905 யில் தெளிவாக கூறப் பட்டுள்ளது.அதாவது  "உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தி பெற்றிருக்கிறார்களோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையினைக் கட்டுப் படுத்தும், அத்துடன் கற்பைக் காக்கும்". அந்தக் கடமையினை தாஜுதீன் நிறைவேற்ற பீனாவினை 17 வருடங்களுக்கு முன்பு நவுசாத் என்பவருக்கு நிக்கா செய்து கொடுத்து இன்று 11 வயதில் நஸ்ரின் மற்றும் முகச்னா என்ற மகள்கள் உள்ளனர். 
சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பீந்துவிற்கு பழங்கால நினைவுகள் வந்து தன் உண்மைப் பெற்றோர்களை பார்க்க ஆசைப் பாட்டு சென்னை ஊடகங்களின் துணையினைத் தேட ஆரம்பித்து இருக்கிறாள். நல்ல முயற்சிதானே என்று நீங்கள் எண்ணலாம்.  ஆனாலும் இதுவரைத் தேடாத மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை வைத்திருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணினை அடையாளம் கண்டாவது நட்ராற்றில் விட்ட உண்மையான பெற்றோர் பீனாவினை ஏற்றுக் கொள்வார்களோ இல்லையோ ஆனால் அந்தப் பெண்ணை வளர்த்த தாசுதீனும், கைப்பிடித்த நௌசாதும் கைவிட மாட்டார்கள் அதுதான் இஸ்லாமிய மார்க்கம் போதித்த நல்லுபதேசம் என்றால் சரிதானே!