Tuesday, 19 October 2021

வாயால் வடை சுடும் வலைத் தளங்கள்

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

 வலைத்தளங்கள் அறிவை விரிவு செய்யவும், புதிய தொடர்புகளை உருவாக்கி மனித நேசம் வளர்க்கவும், ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதிற்காகவும், சமூக பிரச்சனைகளுக்கு ஆரோக்கியமாக குரல் கொடுக்கவும், சமூக ஒற்றுமை மேன்படுத்தவும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது  போன்ற பல்வேறு நன்மைக்காக  உருவாக்கப் பட்டதாகும். இந்த வலைத்தளத்தினை வயது வித்தியாசம் தெரியாமல் பயன்படுத்துகின்றனர். ஆனால் என்ன நடக்கின்றது என்றால் அதனை கட்டுப் பாடோது பயன்படுத்தாமல், அதிக அளவிற்கு சோறு தண்ணி சாப்பிடாமல், வேலை, குடும்பம், உறவுகள்,போன்றவற்றை தவிர்த்து  அதிலேயே மூழ்கி விடுகின்றனர்.  சிலர் தங்கள் குடும்பப் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவும், தங்கள் ஊரில் நடக்கும் விருப்பு, வெறுப்பு செய்திகளை தங்கள் கருத்துடன் பகிர்ந்து கொள்ளவும், அரசியலில் தங்கள் பங்கு போன்றவற்றை வெளிக்காட்டவும், கல்வி நிலையங்களில் உள்ள உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், சமூக ஒற்றுமையினை சீர்குலைக்கவும் பயன் படுத்துகின்றனர். பல செய்திகள் வீண் சண்டைகளையும், சங்கடங்களையும் ஏற்படுத்துகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். சில வியாபார பெருமக்களை தங்கள் சுயதொழில் செய்திகளை பரப்பவும், கொரானா காலங்களில் போலியான மருந்து உபகரணங்களை விளம்பரப் படுத்தி மக்களிடம் காசு பறிக்கும் தொழிலிலும் ஈடுபடுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும் இருந்தாலும் வலைத்தளங்களிலிருந்து அவர்களுக்கு மீளத் தெரிவதில்லை.

            தற்போதைய இளைஞர்களிடமிருந்து அதனைப் பிரிப்பது மிகவும் சிரமம். ஆகவே உங்கள் பணிகளை விரைந்து முடிக்க ஒரு செயலியினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற செயலி நீங்கள் உங்கள் முக்கிய செயல்களை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிட உங்களுக்கு நினைவூட்டும். இதன் மூலம் நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தினை வீணான காரியங்களில் ஈடுபடுவதினை தவிர்க்கமுடியும். 

            உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை வலைத்தளங்கள் ஆரம்பிக்கும்போது பகிர்ந்து கொண்டீர்களென்றால் அதனை தனி பகுதியில் வைக்க மறந்து விடுவதால் உங்களைப் போல போலியான வலைத்தளங்களில் உறுப்பினர்களாக ஆகி உங்களுக்கு அவப் பெயர் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வார்கள். ஆகவே உங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். இப்போதெல்லாம் வலைத்தளங்கள் ஒரு பொழுது போக்குத் தளமாக மாறி வருகிறது உங்களுக்குத் தெரியும். சில பெண்கள் வலைத்தளங்களால் அதிகமாக ஈர்க்கப் பட்டு குடும்ப பாரம்பரியம் மறந்து குழந்தை, கணவன் போன்றவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு சீட்டாய்ப் பறந்து, பின்பு சீரழிந்தது செய்திகளில் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற நிலைகள் தேவையா என்று சுயசிந்தனை செய்யவேண்டும்.

ஆகவே வலைத்தளங்களை பயன்படுத்துபவர் அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா அல்லது அழிவுப் பாதைக்கும், அடிதடிக்கும் இழுத்துச் செல்கிறதா என்று சிந்தித்து செயலாற்ற வேண்டும். தற்போதெல்லாம் உங்கள் வலைத்தளங்களை அரசு கண்காணிக்கின்றது என்ற உணர்வு வேண்டும். அதனை உணரவில்லையெனில் கேஸு, கோர்ட்டு என்று அல்லல் பட வேண்டும். ஆகவே உங்கள் கவன ஈர்ப்பு ஆக்கப் பூர்வமான செயலைக் கொண்டதாக அமைய வேண்டும் என கேட்டுக் கொண்டால் தவறில்லை என நினைக்கின்றேன்!

Tuesday, 5 October 2021

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!

 

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

ஹிந்துத்வா அமைப்புகள் இந்தியாவில் முஸ்லிம் ஜனத்தொகை ஹிந்துக்களை விட அதிகமாகி உள்ளனர், மற்றும் இடம் பெயர்ந்தோர் வருகையால் இந்தியாவிற்கே ஆபத்து என கூக்குரல் இடுகின்றனர். அந்த வகையான புகார்கள் உண்மையல்ல என்று ஸ்வாமிநாதன் எஸ் அங்காலேச்சாரிய அய்யர் அவர்கள் ஒரு விரிவான கட்டுரையினை அமெரிக்க வாஷிங்டன் நகரில் இயங்கும், தன்னார்வ, எந்த இயக்கத்தையும் சேரா அமைப்பான PEW ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வினை மேற்கோள் காட்டி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். பி.ஜெ.பி இரண்டு விஷயத்தில் பய உணர்வு கொண்டுள்ளதால் இந்தியாவில் மத மோதலுக்கு வழி வகுக்கின்றது.. இந்தியாவில் ஹிந்துக்கள் 80 சதவீதம் உள்ளனர். முஸ்லிம்களின் குழந்தை பிறப்பு அதிகமானால் ஹிந்துக்கள் ஜனத்தொகை குறைந்து விடும், 2) உள் துறை அமைச்சகம் சொல்வதுபோல பங்களா தேச இடம்பெயர்ந்தவர்கள் கரையான் போல உள்ளனர் என்றும் பயப்படுகின்றனர். அவைகளல்லாம் உண்மையல்ல என்று PEW அமைப்பு புள்ளிவிவரத்துடன் மறுத்துள்ளது.

            1951ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரை 50 ஆண்டுகளில் முஸ்லிம் ஜனத்தொகை 6 சதவீதம் உயர்ந்தாலும் அவை ஒரே நேரத்தில் உயரவில்லை. மாறாக சிறுக, சிறுக உயர்ந்ததாகும். அதே நிலை நீடித்தால் முஸ்லிம் ஜனத்தொகை இந்த நூற்றாண்டில் 20 சதவீதத்திற்கு மேல் கூடாது என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அந்த புள்ளி விவரங்கள் ஹிந்து-முஸ்லிம் பெண்கள் கருத்தரிப்பு எண்ணிக்கையினை வைத்துச் செல்கிறது.

            தேசிய குடும்பவியல் சுகாதார சர்வே 1992-2015ன் படி முஸ்லிம் பெண்கள் கருத்தரிப்பு 4.4 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக குறைந்து விட்டது. ஆனால் 80 சதவீத ஹிந்து பெண்கள் கருத்தரிப்பு 3.3 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக மட்டுமே குறைந்து விட்டது. இதிலிருந்து முஸ்லிம் பெண்கள் குறைவாகவே குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் என்று தெரிகின்றது.

            உலகத்தில் சராசரி வருமானம் அதிகரித்து விட்டாலும் குழந்தை பிறப்பது குறைந்து விட்டது. ஆனால் ஏழை குடும்பங்கள் குடும்ப கட்டுப் பாடு செய்து கொள்வதில்லை, காரணம் குழைந்தை அதிகமாக பெற்றால் அது குடும்ப வருமானத்தைப் பெருக்கும் என்றும் சொல்கின்றனர். உலகிலேயே குழந்தை பிறப்பில் பல்வேறு காரணங்களால் அரை சதவீதம் இறந்து விடுகின்றன. வருமானம் அதிகமாக இருந்தாலும், குறைவான குழந்தை பெற்று, அந்தக் குழந்தைக்கு கல்வியறிவு, வசதியாக வாழ வீடு, வாகனம் வசதி செய்து கொடுக்க வேண்டுமென்றும் விரும்புகின்றனர். ஆகவே தான் கருத்தரிப்பு குறைவாக உள்ளது. இந்த நிலைப் பாட்டில் இந்து-முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லை. முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் குறைவாக இருப்பதால் நாம் இருவர், நமக்கு ஒருவர் என்பதில் கவனமாக உள்ளனர். இதே நிலை நீடித்தால் முஸ்லிம்கள் கருத்தரிப்பு பூஜ்யமானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றும் சொல்கின்றனர்.

            இந்தியாவில் முஸ்லிம்களைவிட ஹிந்துக்கள் ஜனத்தொதை குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக ஹிந்து விதவைகள் மறுமணம் செய்து கொள்ள முன்பெல்லாம் அனுமதி வழங்கியதில்லை  ஆனால் இஸ்லாத்தில் முஸ்லிம் விதவைகள் திருமணம் செய்வதினை ஊக்கப் படுத்துகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு போரால் ஆண்கள் கொல்லப் படும்போது பெண்கள் சிறுவயதிலேயே விதவையாகி விடுகின்றனர். ஏனென்றால் முன்பு சிறுமிகள் சிறு வயதிலேயே திருமணம் முடிக்கும் பழக்கம் இருந்தது. இரண்டாவதாக முஸ்லிம்களைவிட இந்துக்கள் தான் அதிகமாக இடம்பெயர்ந்தவர்களாக உள்ளனர். ஆகவே ஹிந்துத்துவ இரண்டு கருத்துக்களும் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.

            1992ம் கருத்தரிப்பு புள்ளிவிவரப்படி முஸ்லிம்-ஹிந்து பெண்கள் கருத்தரிப்பு 1:1 ஆகத்தான் இருந்தது. அது 2015 புள்ளிவிவரப்படி 0:5 என்ற பாதியாக குறைந்து.  ஆகவே முஸ்லிம்கள் எண்ணிக்கை ஹிந்துக்களைஅவிட அதிகமாகும் என்ற ஹிந்துத்துவா குற்றச்சாட்டும் அடிபட்டுப் போகிறது.

            அடுத்தக் குற்றச்சாட்டு முஸ்லிம் இடம் பெயர்ந்தோர் ஹிந்துக்களை விட குறைவாகவே உள்ளனர் என்பதாகும். பியூ புள்ளிவிவரப்படி இந்தியாவில் பிறந்தவர்களில் 90 சதவீதம் ஹிந்துக்கள் தானாம். இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு  இடம் பெயர்த்தவர் எண்ணிக்கை  வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குல் வந்தவர்களை விட மூன்று மடங்கு அதிகமாம். 2015 அறிக்கைப்படி இந்தியர் வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்து ஒரு கோடியே 50 லட்சமாம். ஆனால்  இந்தியாவிற்குள் வந்த வெளிநாட்டவர் வெறும் 56 லட்சமாம். அவ்வாறு வந்தவர்களில் வங்காளதேசத்திலிருந்து வந்தவர்கள் 32 லட்சமும், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்தவர் 11 லட்சமும், நேபாளத்திலிருந்து வந்தவர் 5.40 லட்சமும், இலங்கையிலிருந்து வந்தவர்கள் 1,60,000 அடங்குமாம். அவர்களில் பெரும்பாலோர் ஹிந்துக்களாம்.

            இந்தியாவினைவிட்டு வெளியேறும் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளதாம். அவ்வாறு செல்பவர்களில் அராபிய, வளைகுடா நாடுகளுக்குச் சென்றவர் 35 லட்சமாம், பாகிஸ்தானுக்கு சென்றவர் 20 லட்சமாம், அமெரிக்காவிற்கு சென்றவர் 20 லட்சமாம். அதுபோன்று சென்றவர் முஸ்லிம் ஜனத்தொகை 14.2 சதவீதத்தில் 27 சதவீதமாம். ஆனால் 80 சதவீத ஹிந்துக்கள் கொண்ட சமுதாயத்தில் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தது 45 சதவீதம் தானாம்.

            அடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  குற்றச்சாட்டு கிருத்துவ மிஷினரிகள் ஹிந்துக்களை மதமாற்றம் செய்கின்றனர் என்பதாம். 1951லிருந்து 2015 வரை உள்ள மொத்த இந்திய ஜனத்தொகையில் வெறும் 2.3 சதவீதம் தான் கிருத்துவர்கள் உள்ளனராம். ஆகவே அந்தப் பயமும் அடிபட்டுப் போகிறது.

            சமீபத்தில் 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட CAA, CRA என்ற சட்டங்கள் வெளிநாட்டு முஸ்லிம்கள் இந்தியாவில் அதிகமாக உள்ளனர் என்பது போன்ற பய உணர்வில் கொண்ட சட்ட மசோதாவாகுமாம். ஆனால் அதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் மெஜாரிட்டி ஹிந்துக்களை பயமுறுத்தி 2022 ம் ஆண்டில் நடைபெறும் சில மாநில தேர்தல் மற்றும் 2024ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் நேரத்தில் அவர்கள் ஒட்டு வங்கியை பெறுவதிற்காக நடத்தப்படும் நாடகம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அடுத்ததாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் பகவத் இந்தியர் அனைவரும் ஹிந்துக்களே, அவர்கள் ஒரே பண்பாட்டின் குடையின் கட்டுப் பாட்டுக்குள் உள்ளவர்கள் என்ற புது வேதாந்தத்தினை சொல்கிறார். இந்திய நாடு பல்வேறு மத, கலாட்சார கோட்பாடுகளை கொண்டதாகும். முஸ்லிம்களுக்கு என்று தனி கலாட்சாரம், பண்பு உள்ளது. அவைகளையெல்லாம் பாதுகாக்கத்தான் இந்திய அரசிலமைப்பு 1950ல் தோற்றுவிக்கப் பட்டது. ஆகவே இனியாவது இந்திய மெஜாரிட்டி மக்களை மத துவேஷ பய உணர்வை ஏற்படுத்தி  பிரிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுவது காலத்தின் கட்டாயமாகுமல்லவா?

 

           

Saturday, 2 October 2021

மீலாதுநபி முக்கியத்துவம் உறுதிமொழி (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ )

 

உங்களுக்கெல்லாம் தெரியும் வருகிற அக்டோபர் 19ந்தேதி நானிலம் போற்றும் பெருமானார் ரசூலுல்லாஹ் பிறந்தநாளை மீலாது நபி என்று அழைத்து, அதற்கு தமிழக அரசும் விடுமுறை விட்டுள்ளது. ஆங்கில எழுத்தாளர் மைக்கேல் ஹார்ட்ஸ் உலகில் முக்கியமான 100 நபர்களை தேர்ந்தெடுத்து  அதில் மிக சிறந்த நபர் யார் என்று ஆராயும்போது முகமது  ரசூலுல்லாஹ் பெயரினை சொல்லியுள்ளார். பாலைவனம், வறண்ட பூமி, பசுமையில்லா மலை குன்றுகள் கொண்ட அராபியா நாட்டில் எழுத்தறிவில்லா ஒரு மனிதர் எல்லாம் வல்ல இறைவனால் புனிதராக்கப் பட்டு அங்குள்ள காட்டரபிகளை நல்வழிப் படுத்த ஏக இறைவனால் அல் குரானை 1400 ஆண்டுகளுக்கு முன்பு ரஸூலல்லாவிற்கு  அருளி இன்று கிட்டத்தட்ட 170 கோடி முஸ்லிம்களை கொண்ட மார்க்கமாக இருப்பதிற்கான பெருமை ரஸூலல்லாவினைப் பொருந்தும். ஆகவே தான் ரஸூலல்லா பிறந்த நாள் சிறந்த நாளாக கருதப் படுகிறது. அவ்வாறு கருதுவதினால்  ரஸூலல்லாவினை, அல்லாஹ்விற்கு இணையாக யாரும் நினைப்பதில்லை. ஏனென்றால் ரஸூலல்லாவே தனக்கு முதலிடம் கொடுக்கக் கூடாது என்றும், தன்னுடைய ஒரு சிறு வரைபடம் கூட இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

            நம்மிடையே சிலரும், மாற்று மதத்தினவரும், சில தர்க்க வாதிகளும் ஏன் ரஸூலல்லாவே திருகுரானை எழுதி இருக்கக் கூடாது என்று விவாதம் செய்யவதினை பார்க்கின்றோம். அவர்களுக்கெல்லாம் நெத்தியடி பதில் சொல்லும் விதமாக திருகுரான் அல்லாஹ்வினாலேயே ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது என்று இரத்தின சுருக்கமாக கீழ்கண்ட உதாரணத்துடன் விளக்க ஆசைப் படுகிறேன்:

1)    திருகுரான் 600 பக்கங்கள் கொண்டது. அது ஒரே மூச்சிலேயோ, ஒரே நாளிலேயோ, ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கிடையிலேயோ இறக்கி அருளப்படவில்லை மாறாக 23 நீண்ட வருடங்களில் ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட செய்தியினை மட்டும் சொல்லவில்லை மாறாக மக்களை நல்வழிப் படுத்த பல செய்திகளைக் கொண்டதாக உள்ளது.

2)    நீங்கள் சாதாரணமாக ஒரு புத்தகம் எழுத வேண்டுமென்றால் ஒரு தவறில்லாமல் எழுதமுடியாது. ஆனால் திருக்குரானில் இலக்கணப் பிழையில்லாமல், ஒன்னொன்றுக்கு முரண்படாமல் அறிவுபூர்வமான பல்வேறு உண்மையான தகவல்கள் உள்ளன.

3)    பாலைவனத்தில் ஒரு பாடசாலையோ, அல்லது அறிவினுக்கு உணவாக கூறப் படும்  லைப்ரரியோ அங்கு இருக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் அங்கே கற்று குரானை எழுதியிருக்கலாம் என்று சொல்வார்கள்.

4)    குர்ஆனில் மார்க்க சம்பந்தமாக மட்டும் சொல்லப் படவில்லை. மாறாக சிவில் சட்டம், கிரிமினல் சட்டம், குடும்பவியல் சட்டம், வேலை சம்பந்தமான சட்டம், ராணுவ சட்டம், தனிப் பட்டவர் காயம் ஏற்படுத்துதல் சட்டம், ரியல் எஸ்டேட் சட்டம், வரி விதிப்பு சட்டம் போன்ற பல்வேறு விதமான சட்ட நுணுக்கங்களை கொண்ட பொக்கிஷமாக உள்ளது. நீங்கள் அறிந்திருப்பீர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்ற அம்பேத்கார் தலைமையில் ஒரு கமிட்டி 1950ல் அமைக்கப் பட்டதும் அதில் பல்வேறு சட்ட ஓட்டைகள் உள்ளது என்றும் பல்வேறு தரப்பு மக்களால் சொல்லப் படுகிறது நமது நாட்டில். ஆனால் குர்ஆனில் சொல்லப் பட்ட சட்டங்கள் பல்வேறு நாடுகளில் நிறைவேற்றியும், இஸ்லாம் இல்லாத நாடுகளில் உள்ள மக்கள் கூட குர்ஆனில் கூறிய சட்டம் போன்று தங்கள் நாட்டில் அமைய வேண்டும் என்று சொல்லுவதினை காணலாம்.

5)    மக்காவில் வாழ்ந்த ரஸூலல்லாவிற்கு கிறித்துவ சமுதாயத்தினைப் பற்றிய தகவல் தெரிந்திருக்க நியாயமில்லை காரணம் அங்கே கிருத்துவர் வாழவில்லை. ஆனால் கிருத்துவர்கள் நமது மூதாதையர் என்றும், ஈஷா நபி என்ற ஜீசஸ் பற்றி விலாவாரியாக விவரித்துள்ளது. எந்த இடத்திலும் ரஸூலல்லா தான் மரித்த பின்பு மீண்டெழுப்பப் படுவேன் என்று சொல்லவில்லை. மாறாக ஈஸா நபி அவர்கள் மீண்டெழுவார் என்றும் கூறுகின்றது. ஈஸா நபி சரித்திரத்தினை எழுதிய சீடர் பர்னபாஸ் எழுதிய தோலிலான நூல் ஒன்று துருக்கி நூலகத்தில் உள்ளத்தினை கிருத்துவர்களின் தலைவர் போப் பெனெடிக் சென்று பார்த்து ஆச்சரியப் பட்டாராம். காரணம் தனக்குப் பின்பு முகமது ரசூலுல்லாஹ் என்பவர் வந்து மக்களை நல்வழிப் படுத்தியும், ஓரிறை கொள்கையினை எடுத்தியம்பியும் மக்கள் சேவை செய்வார் என்றும் உள்ளதாம். அது பாட்டுமல்ல ஈஸா நபி சிலுவையில் அறையப்படவில்லை மாறாக வேறொருவர் அறையப் பட்டார் என்றும், திருகுரானில் சொல்லப் பட்டதுபோல அவர்களை அல்லாஹ் தன்னிடம் அழைத்துக் கொண்டான் என்றும் கூறியதைக் கண்டு ஆச்சரியப் பட்டு பின்னாளில் இஸ்லாம் மார்க்க நெறியினை தேர்ந்தெடுத்தார் என்றும் கூறப் படுகிறது.

6)    ரஸூலல்லாவிற்கு வகி வருவதற்கு முன்பு ஒரு அரசு எப்படி இருக்கவேண்டும் அல்லது எப்படி அமைக்க வேண்டும் என்றும், அல்லாஹ்வினை வணங்குவதிக்கு முன்பு எப்படி தன்னை தூய்மை படுத்திக்  கொள்ளவேண்டும் என்றும் தெரியாது.

7)    மனோதத்துவ மந்திரங்கள் ரஸூலல்லாவிற்கு தெரிந்திருக்கின்றது நியாயமில்லை. குழந்தைச் செல்வங்களை எப்படி வளர்ப்பது, எவ்வாறு சமரச நடவடிக்கைகள் மேற்கொள்வது என்றும் தெரியாது. சொத்துக்களை பிரித்துக் கொள்ளும் முறைகள் மற்றும்  நிதித்துறை கையாள்வதும் தெரியாது.

8)    ஒரு தாய்க்கு எப்படி கருத்தரிக்கும் முறை, கடலின் அமைப்பு, பூகம்ப ரேகை அமைப்பு, மேகமூட்டம் சொல்லும் ஒன்று கூடுதல், அதன் விளக்கம், கதிரியக்கம், பறவை, செடி கொடி, விலங்கினங்கள் உயிர் வாழ்வது மற்றும் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்வது, மலை அமைப்பு, தேனை எடுக்கும் தேனீ எவ்வாறு வெளிப்படுத்துகிறது, ‘பிக் பங்’ என்ற உலக பெரு வெடிப்பு ஏற்பட்டதும், கோளரங்கம் அமைக்கப் பட்டது போன்ற எண்ணற்ற  செய்திகளை துல்லிதமாக ரஸூலல்லாவிற்கு வகி இறங்குவதற்கு முன்பு தெரியாது.

9)    வருங்காலத்தில் எழுத வேண்டுமென்றால் தனி மனிதரான ரஸூலல்லாஹ்வினால் எழுதமுடியாது. உலகத்தினைப் பற்றிய செய்திகளை பற்றி எழுத வேண்டுமென்றால் அந்தந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவுமில்லை.

10)  பைபிளுக்கு வேறுபட்டு குரான் இருக்க முடியாது. வகியால் இறக்கியருளப்பட்டதால் தான் பைபிளை சார்ந்தே குரானும் உள்ளது.

11)  எழுத்தாளர்களுக்குத் தெரியும் ஒரு புத்தகத்தினை எழுதும் போது எழுத்தாளருடைய தனிப் பட்ட வாழ்க்கையினை எழுதாமல் இருக்க முடியாது. உதாரணத்திற்கு மனைவி இறந்த சோகம், எப்போது குழந்தை பிறந்தது, எப்போது மணமுடிக்க செய்தது, பேரக் குழந்தைகள் பிறந்த செய்தி, போரில் எப்போது வெற்றி மற்றும் தோல்விகளை கூறாமல் இருக்கமுடியாது.

12)  குரானை அர்த்தம் தெரிந்து படித்தவர்களுக்கு எப்படி ஒரு தனி மனிதரால் 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதமுடியும் என்ற கேள்விக்கணை எழுப்பாமல் இருக்க முடியாது. குரானை எந்தவித முரண்பாடுமில்லாமல் அறிவு சால் அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து காலத்திற்கு ஏற்ற மாறுபட்ட விஞ்ஞானம், வாழ்க்கை தத்துவம், போன்றவற்றை அனுசரித்து எழுத வேண்டும்.

13)  சரி, அப்படியென்றால் ஏன் சாத்தான் ஓதும் வேதமாக இருக்கக் கூடாது என்றும் சிலர் கேட்கலாம், அதற்கும் பதிலுண்டு. சாத்தான் ஈஷா நபி அவர்களை புகழுமா, ஏழைகளுக்கு உதவுங்கள் என்று சொல்லுமா, சாத்தானுக்கு பயந்து சொல்லுங்கள் என்று சாத்தானே சொல்வானா? என்றும் சிந்தித்துப் பாருங்கள்.

14)   ரசூலுல்லாஹ் தனிமனிதராக இருந்து பின்பு தனது கடைசி அரபா உரையினை லட்சக் கணக்கான மக்கள் கேட்கும் அளவிற்கு மார்க்க, அரசியல் தலைவராக இருந்தார் அராபிய துணைக் கண்டத்தில். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் மக்கள் தன்னை வணங்குவதிற்கோ, காலில் விழுவத்திற்கோ, தான் வரும்போது எழுந்து நிற்பதிற்கோ, தன்னை யாரும் புகழ்வதிற்கோ, தான் இறந்த பின்பு தன்னை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடக் கூடாது என்று கவனமாக இருந்த காரணத்தால் இன்று உலகில் அவருடைய சிறு கீரல் படம் கூட வெளிவந்தாலும் முஸ்லிம் மக்கள் வெகுண்டெழுகின்றனர். அவர்களுடைய மதினா அடக்கத் தலத்திற்கு செல்லும் முஸ்லிம்களை அங்கே இருக்கும் அதிகாரிகள் எங்கே கையேந்தி ரஸூலல்லாவினை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடுவார்களோ என்று அடித்து விரட்டுகிறார்கள் என்றால் ரசூலுல்லாஹ் எவ்வளவு கவனமாக இருந்தார்கள் தான் வெறும் தூதர்தான் தான் மற்ற மதத்தலைவர்களை அவர்கள் மரித்த பின்பு அவர்களுக்கு  சிலைகள்  வைத்து வழிபடுவது போல தனக்கும் வைத்து விடுவார்கள் என்பதினுக்கு மிகவும் கவனமாக இருந்த மாமனிதர் ரசூலுல்லாஹ் ஆகும்.

ஆகவே அல் குரான் சைத்தானாலும் எழுதப் படவில்லை, அறிவு சால் அறிஞர்களாலும் எழுதப் படவில்லை, முகமது என்ற தனி நபராலும் எழுதப் படவில்லை, அது எல்லாம் வல்ல அல்லாஹ்வால் ரஸூலல்லாஹ்விற்கு அருளப் பட்ட ஒன்றே என்று பல மதத் தலைவர்கள், அறிஞர்கள் ஒப்புக் கொள்ளப் பட்ட ஒன்றாகும். ஆகவே அதில் தர்க்கம் செய்ய யாருக்கும் உரிமையில்லை. அதன் படி நடப்பதே நாம் ரஸூலல்லாஹ்விற்கும், வகியை இறக்கி அருளிய அல்லாஹ்விற்கும் செய்யும் நன்றிக் கடன் என்று மீலாது நபி நாளில் உறுதி கொள்ளலாமா?

Friday, 24 September 2021

இனிய திசையில் இதயம் பேசுகிறதே!

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ )

உலக 'வாலெண்டின் டே' நாளான பெப்ரவரி 14 ந்தேதி அன்று  அன்பை பரிமாறிக் கொள்ள இதயத்தினை அடையாளமாக தேர்ந்தெடுத்துள்ளது உங்களுக்குத் தெரியும். இரண்டாம் நூற்றாண்டின் கிரேக்க அறிவியல் நிபுணர் கேலன், 'இதயம் ஈரலுடன் இணைந்து வைரம் போல தோன்றுவதினை முதன் முதலில் தெரிவித்துள்ளார். வைரம் உடைந்து போனால் உருப்படியாகாது, அதேபோன்று தான் இதயமும் பழுதானால் உடல் இயங்காது. அப்படிப் பட்ட இதயத்தினை பாதுகாப்பதிற்காக உலக இதய நாள் செப்டம்பர் 29ந்தேதி கொண்டாடப் படுகிறது. அந்த இதயத்தினை எவ்வாறு பாதுகாப்பது என்று உங்களுடன்  பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

            உலகில் அபாயகரமான நோய் எது என்று கேட்டால் உடனே நீங்கள் கொரானா என்று தான் சொல்வீர்கள். ஆனால் உலகிலேயே அபாயகரமான நோய் இதய நோய் தான் என்று உலக சுகாதார மையம் சொல்கிறது. 2019ல் மட்டும் இதய நோயால் 90 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். அதிலும் 30 வயதிலிருந்து 70 வயதிற்குட்டபட்டவர்கள் 60 லட்சம் பேராம். அதில் சீன நாடு முதல் இடத்திலும், அதனைத் தொடர்ந்து இந்தியாவும், ரஷ்யா, அமெரிக்கா நாடுகள் உள்ளன. இதய நோயிற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்டாலும் சமீப காலங்களில் கொரானா நோய் ஏற்பட்டு இதயத்திற்கு செல்லக்கூடிய ஆக்சிசன்  குறைவாகுதலால் இதய நோயால் இறந்தவர்கள் அதிகம் உள்ளனர். ஆகவே தான் இதயத்தினை காப்பது ஒவ்வொருவரும் தனது குடும்பத்திற்கும், நாட்டிற்கும் செய்யும் சிறந்தது சேவையாகும் என்றால் மிகையாகாது. இப்போது இதயத்தினை பாதுகாக்க என்னென்ன வழிமுறைகள் என்பதினை ஆராய்வோம்.

1)    அமெரிக்கா சுகாதார மைய செயல்பாட்டின் அறிவுரைப் படி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு பரிசோதனை செய்வது நல்லது என்று கூறுகின்றது. இந்தியாவின் Cardiology Society( இதய நோய் ஆராய்ச்சி மையம்) 2019ல்  நடத்திய ஆய்வுப் படி நமது நாட்டில் மூன்றில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தில் பாதிக்கபட்டுள்ளர் என்று கூறுகின்றது. அதில் 45 சதவீதம் கண்டுபிடிக்கமுடியாமலே போய் விடுகிறதாம். நீங்கள் கூட தெரிந்து இருப்பீர்கள், '30-35வயதில் ஒருவர் நோய் அறிகுறி இல்லாமல் இறந்து விட்டால் சொல்வீர்கள், மனுஷர் நல்லாத் தான் கல்லுமாதிரி இருந்தார் பொட்டின்று போய்ட்டாரென்று'. அப்படி இதய நோய் அறிகுறி இல்லாமலே கொன்று விடக்கூடிய ஒன்றாகும் அது ஒரு 'Silent Killer' என்று நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர்  Nieca Goldberg M.D சொல்கிறார். அவரைத் தொடர்ந்து அதே பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் Dr Joan H Tisch கூறும்போது இதய நோயால் பக்கவாதமும் ஏற்படுமென்கிறார்.

2)    உடலில் ஏற்படும் 77 நோய்கள் மன அழுத்தத்தால் வரக்கூடியவை என்று அமெரிக்கா சவுத் நியூ கெமிஸ்ப்பியர் பல்கலைக் கழக மனோதத்துவ நிபுணர் நிகி மார்டினஸ் சொல்கிறார். உங்கள் வயது உயர, உயர உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதுடன் இளமை ஒருபோதும் திரும்பக் கிடைப்பதில்லை. ஆகவே மன அழுத்தத்தினைப் போக்க தியானம், மூச்சு பயிற்சி, இறை வணக்கம் கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டுமாம்.

3)    உடலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாதபோது நாளங்களில் நீர்சத்து அதிகமாகுமாம். ஆகவே முதலில் கவனிக்க வேண்டியது கால்களைத் தான். கால்களில் வீக்கமும், கால்களில் உரைகள் அணியும் போது வரி, வரியாக தெரியும் . அதனை வைத்து ஒருவருடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று தெரிந்து கொண்டு டாக்டர்களை தேட வேண்டும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்  Gregg Fonarow சொல்கிறார். உணவுப் பொருட்களில் அதிக அளவில் குறைக்க வேண்டியது புளிப்பும், உப்பாகும். சமயலறையில் உடனடி உபயோகத்திற்காக எலுமிச்சை பழம், வினிகர், சோடா உப்பு, சோளமாவு போன்றவை இருக்கும். அவைகளெல்லாம் அதிகமாக சேரும்போது ரசாயன மாற்றம் ஏற்பட்டு உடலுக்கு கேடு ஏற்படும். அத்துடன் உணவு பரிமாற, தண்ணீர், தேநீர், காபி அருந்த  பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. உலகத்தில் ஏற்படும் 2 கோடியே 60 லட்சம் இதய நோய்களில் 40 சதவீதம் இந்தியாவில் ஏற்படுகின்றதாம். சுகர்(இனிப்பு) ஒரு உயிர் கொல்லியாம். டைப் 2 நோயாளிகளுக்கு இதய நோய் வருவது அதிகம் என்று AHA என்ற அமெரிக்கா ஹார்ட் பாவுண்டேஷன் அமைப்பு சொல்கிறது. டைப் 2 நோயாளிகள் இதய மற்றும் கிட்னி நோயால் பாதிப்புள்ளாவர் என்றும் அவர்கள் நீரழிவு நிபுணர்களை ஆலோசனை செய்வது நல்லது என்று AHA பவுண்டேசன் நிபுணர் எட்வார்ட் சொல்கிறார்.

4)    மாமிச உணவு இதயத்தினை பாதிக்கின்றதா: மாமிச உணவில் புரதம் அதிகமாக உள்ளது  ஆனால் காய், கறிகளில் அவ்வாறு இல்லை என்ற தவறான எண்ணம் உள்ளது. ஆனால் அமெரிக்காவின் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் Erin D Michos சொல்கிறார். மீன், கரி வகைகளை விட கார்போ ஹைட்ராட் நிறைந்த சுத்தரிக்கப் பட்ட தானியம், டின்னில் பதப் படுத்தப் பட்ட பழவகைகள், சுவையான Donuts , சோடா, உருளைக் கிழங்கு, சிப்ஸ், பிரெஞ்சு பிரை என்ற வறுத்த உருளைக்கிழங்கு, நாக்கில் நீர் வரவழைக்கும் சாக்லேட், சீனி, பாலால் தயாரிக்கப் படும் பொருட்கள் அதிக அளவு இதயநோய்க்கு ஆளாவீர் என்று பேராசிரியர் எரின் கூறுகிறார்.

5)    குறைமாத டெலிவரி இதயத்திற்கு நல்லதல்ல:

Dutch நாட்டின் ஆய்வுப்படி 37 வாரத்திற்கு முன்பு பெண்களுக்கு குழந்தை பிறந்தால் அவர்களுக்கு இதய வால்வு சம்பந்தமான நோய் வரும் என்று சொல்கிறது. பெண்கள் கருத்தரிப்பதற்கு தேவையான ஈஸ்ட்ரோஜென் உடல் ஆரோக்கியத்திற்கும், எலும்பு உறுதியாகுவதிற்கும், மன அமைதிக்கும் முக்கிய தேவையாகும். பெண்களுக்கு 51 வயதினைத் தாண்டி மாதவிலக்கு நிற்கவில்லையென்றால் அவர் நிச்சயமாக இதய நோய்க்கு ஆளாகுவார்கள் என்று Okland university பேராசிரியை கவிதா சின்னையன் கூறுகிறார். இங்கிலாந்தில் உள்ள Briminhgam பல்கலைக் கழக ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுப் படி ஒரு பெண்ணுக்கு மாத விலக்கு 46 வயதிற்குள் நின்று விட்டால் அவள் இதய நோயுக்கு உட்படுவாள் என்று கூறுகிறது. அதேபோன்று தான் மாத விலக்கு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே வருமென்றால் ரத்த ஓட்ட நாளங்கள் பழுதடையலாம் என்றும், அவர்கள் மகற்பேர் மருத்துவரிடம்  பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று Woman's  Day  பத்திரிகை செய்தி கூறுகின்றது.

6)    இதய நோய் ஆண்களிருந்து பெண்களுக்கு மாறுபடும் என்று கலிபோர்னியா Cedar-Sinai Heart Institute டைரக்டர் C.Noel Bairy Marly சொல்கிறார். பெண்களுக்கு உண்டான அடைப்பு இதயத்திற்கு கொண்டு செல்லும் ரத்தம், ஆக்சிஜென் நரம்புகளில் தடைகள் ஏற்படுமாம். ஆண்களுக்கு இதயத்திலிருந்து வெளியேற்றப் படும் ரத்த வால்வுகளில் ஏற்படும் அடைப்புகளாக இருக்குமாம். ஆகவே பெண்களுக்கு இதயநோய் வரும்போது ரத்த அழுத்தத்தினை சோதனைகளில் கண்டு பிடிப்பது சிரமமாம். பெண்களின் இதய நோய்களுக்கு அறிகுறியாக முதுகுப் பிடிப்பு, மிகக் களைப்பு, மயக்கம், தலைவலி போன்றவைகளை வைத்து கண்டு கொள்ளலாம் என்கின்றனர். ஆண்களின் இதயத்தினை தாக்கும் முதல் எதிரியாக போதையினை உண்டாக்கும் மது வகையாகும். மேலை நாடுகளில் சொல்வர் பார்லியால் தயாரிக்கப் படும் பீர் அல்லது திராட்சையில் தயாரிக்கப் படும் ஒயின் உடலுக்கு நல்லதென்று. ஆனால் அதில் ஆல்கஹால் கலந்து விடுதலால் சிறு துளி பெரு வெள்ளம் என்பதிற்கிணங்க எந்த விதத்திலும் ஆல்கஹால் கலந்த மது வகைகள் குடிப்பது இதயத்திற்கு நல்லதல்ல.

7)    ஜன்னலைத் திற காற்று வரும்: கிராமத்தில் வாழும் மக்கள் காற்றோட்டமான மரம், செடிகளிடையே ரசனையுடன் வாழ்வார்கள். நகரத்தில் கதவு, ஜன்னலை மூடிக்கொண்டு ஏசி அறையில் வாழ்பவர்களுக்கு இதய நோய் சீக்கிரமே வருமாம். பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள் ஏசி காரில் மூடிக் கொண்டு தூங்குபவர்கள் மரணம் என்று. அவ்வாறு ஏன் ஏற்படுகின்றது என்றால் காற்றோட்டம் இல்லாத இடத்தில் தூங்கினால் அந்த இடத்தில் ஏற்படும் நச்சுப் புகைகள், காற்றில் மிதக்கும் கிருமிகள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி போன்றவைகளின் புகையில் மூச்சு திணறி இறந்து விடுவார்கள். ஆகவே காற்றோட்டமாக வழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

8)    இயற்கை சீற்றமும், இதய நோயும்: 2003-2004 ஆண்டுகளில் காட்ரீனா புயல் அமெரிக்கா ஆர்லின்ஸ் நகரை தாக்கியதையும், ஆசியாவில் இந்திய உள்பட பல நாடுகளில் சுனாமி அலைகள் தாக்கியதையும் பெரும்பாலோர் அறிந்திருப்பீர்கள். அவ்வாறு தாக்கிய இயற்கை சீற்றத்தால் பல ஆயிரக் கணக்கான மக்கள் அதிர்ச்சியிலேயே இறந்து விட்டார்களாம். மற்றும் பலர் இதய நோயால் அவதிப் படுவதாக ஆய்வு கூறுகின்றது.

9)     தூக்கத்திற்கு முக்கியம் கொடுங்கள்: இளம் வயதில் இரவில் தூங்கினால் காலையில் தான் எழுவீர். ஆனால் வயது கூடக்கூட இரவு நேரத்தில் விழிப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிப்பதினையும் காண்பீர்கள். பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும்போதும், வெள்ளை படும்போதும், மாதவிலக்கு நிற்கப்போதும்போதும் தூக்கமின்மை ஏற்பட்டு அவதிப் படுவர்  என்று கிளீவ்லேண்ட் பேமிலி ஹார்ட் இயக்குனரகம் டாக்டர் கிறிஸ்டின் ஜெல்லிஸ் கூறுகின்றார். அதற்கு மாற்றாக பகல் தூக்கத்தினை குறைப்பதும், அடிக்கடி காபி குடிப்பதினையும், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை இரவில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நிறுத்தி விடவேண்டுமாம்.

10)  ஆத்திரத்தினை அடக்கினாலும் மூத்திரத்தினை அடக்காதீர் என்ற பழமொழி உண்டு. அதற்கு காரணம் சிறுநீரை அடக்கிப் பழகினால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு நாளங்கள் பாதிக்கும். தாதுப் பொருட்களின் இன்றியமையாமை: இதயம் சீராக இயங்குவதற்கு பொட்டாசியம், மாங்கனீசியம், கால்சியம் தேவையான பொருட்கள். பொட்டாசியம் இயந்திர சக்தியினை செல்களுக்கு கொண்டு செல்கிறது. மாங்கனீசியம் இதய சுவர்களை பலப் படுத்துகிறது. கால்சியம் ஆண், பெண் இரு பாலாருக்கும் இதயம் சீராக செயல்பட உதவுகிறது.

11)  நொறுக்குத் தீனியின் கெடுதி: வார இறுதியில் தொலைக்காட்சி, பொழுதுபோக்கு விளையாட்டு திடல்களுக்குச் செல்லுதல், சினிமா போன்றவைகளுக்கு குடும்பத்துடன் செல்லுதல் போன்றவற்றில் கிடைத்ததையெல்லாம் அளவில்லாமல் சாப்பிடுவதும், துரித உணவு உட் கொள்வதும், வயிற்றுப் பகுதி பெருத்து, உடல் எடை கூடி, அதனால் கெட்ட கொழுப்பு அதிகமாகி இதய நோயுக்கு உங்களை இழுத்துச் செல்கிறது என்று கொலம்பியா பல்கலைக் கழக ஆராய்ச்சி சொல்கிறது.

12)  சூரிய வெளிச்சத்தின் பயன்: குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள் நமது நாட்டிற்கு வந்து கோடை சுற்றுலா மையங்களில் திறந்த மேலுடன் சூரிய குளியல் செய்வது நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் சூரிய பிரதேசத்தில் இருக்கின்ற நாமோ நகரத்தில் இருந்து கொண்டு சூரியனே பார்க்காது இருட்டிய அறையில் இருப்பது இதயத்திற்கு ஆபத்தினை வரவழைக்கும். ஏனென்றால் இதயத்திற்கு தேவையான வைட்டமின் D இயற்கையிலேயே சூரிய வெளிச்சத்தில் கிடைக்கின்றது. அதனை விட்டுவிட்டு அதனை மாத்திரைகள் மூலம் பெறுவது வீண் செலவு தானே!

13)  தானம் செய்வது சாலச்சிறந்தது: பிறரது மனங்குளிர அவருக்கு உதவி செய்து அவர் மட்டுமல்ல அவர் குடும்ப உறுப்பினரும் முகத்தில் மலர்ச்சி செய்வதின் மூலம் தானம் செய்பவர் உள்ளமும் சூரியனைக் கண்டா ரோஜா மொட்டு மலர்வது போல அவர் இதயமும் மகிழ்ச்சியில் மலருமாம். ஆகவே பிறருக்கு உதவி செய்வதினை ஒரு புண்ணியமாக எண்ணாது, தன் உடலுக்கும் நல்லது என்று நினைக்க வேண்டுமல்லவா?

Sunday, 29 August 2021

விளையாட்டுப் போட்டிகள் மனித பண்பின் இருப்பிடமா?

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

‘ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்’ என்பது விளையாட்டுகளில் நட்பினை ஊக்குவிக்கின்றதினை எடுத்துக்காட்டாக சொல்வார்கள். ஆனால் 2021 ஆகஸ்ட் மாத ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டு மனித பண்பின் அடையாளம் என்ற புது இலக்கணத்தினை போதித்துள்ளது என்று இரண்டு விளையாட்டுப் போட்டியில் நடந்த சம்பவங்களை எடுத்துக் காட்டி விளக்கினை பத்திரிக்கை செய்திகள். அவை பற்றி உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஆனால் அதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்தது இல்லையா என்று நீங்கள் கேள்வியினை எழுப்பலாம். அதனை விளக்கவே இந்த கற்றுரையினை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

            2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரத்தாண்டும் போட்டியில் கடைசியாக கத்தார் தேசத்தின் மதாரும், இத்தாலி தேசத்தின் ஜெயனும் கலந்து கொண்டாரகள். அவர்கள் இருவரும் உயரத்தாண்டுதலில் 2.37 மீட்டர் 7அடி 9அங்குலம் தாண்டி விட்டனர். அதில் இத்தாலி வீரர் ஜெயன் காலில் அடிபட்டது. ஆகவே தான் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு நிச்சயம் சில்வர் மெடல் உண்டு என்று அவருக்குத் தெரியும். அதனை அறிந்த கத்தார் வீரர் மதார் அதற்கு மேல் தாண்டி கோல்ட் மெடல் வாங்க முடியும். இருந்தாலும் காலில் அடிபட்ட ஜெயனை பார்த்து வருத்தப் பட்ட மதார் நேராக நடுவரிடம் சென்று தானும் போட்டியிலிருந்து விலகினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு நடுவர் தங்க மெடலை இருவருக்கும் பகிர்ந்து கொடுப்போம் என்றார். சற்றும் யோசிக்காத மதார் தானும் விலகுவதாக அறிவித்தார். அதனைக் கண்ட இத்தாலி வீரர் ஓடி வந்து மதாரை கட்டி அணைத்து விட்டார்.

            டோக்கியோ ஒலிம்பிக்கில் 'கிராஸ் கன்டரி' என்ற திறந்த வெளி ஓட்டத்தில் முதலாவதாக கென்யா வீரர் ஆபேலும் அதற்கு அடுத்ததாக ஸ்பெயின் நாட்டு வீரர் பெர்னாண்டஸ் ஆகியவரும் எல்லையினைத் தொடும் நோக்கத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு வந்தனர். எல்லைக் கோடு மூன்று இருக்கும், அதில் நடுவில் உள்ள கோடுதான் எல்கை ஆகும். ஆனால் கென்யா வீரர் ஆபேல் முதலில் வந்தவர் தவறுதலாக முதல் கோடுதான் எல்கை என்று நின்று விட்டார். ஆனால் அவருக்குப் பின்னால் வந்த  பெர்னாண்டஸ் அதனை புரிந்து கொண்டு நினைத்து இருந்தால் கென்யாவீரரை முந்திச் சென்று தங்கம் வென்றிருக்காலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் கென்யா வீரரைப் பார்த்து ஸ்பானிஸ் மொழியில் ஓடு என்று சொன்னார். அதனை கென்யா வீரர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும் விடாத பெர்னாண்டஸ் கென்யா வீரரின் முதுகைப் பிடித்து தள்ளி தொடும் கோட்டிற்கு கொண்டு சென்று தங்கம் வெல்லச் செய்தார். அப்போது பத்திரிக்கைக் காரர்கள் ஏன் பெர்னாண்டஸைப் பார்த்து ஏன் அவ்வாறு செய்தீர்கள். நீங்கள் நினைத்து இருந்தால் உங்கள் நாட்டிற்கு தங்கம் வென்றிருக்கலாம் என்று கூறினர். அதற்கு பெர்னாண்டஸ், 'நான் முதிர்ச்சி அடைந்த உலகில் வாழ நினைக்கின்றேன். அவருடைய டோக்கியோ ஒலிம்பிக்கின் ஸ்லோகன், 'Let Live, Let others also Live' என்பது என்று சொன்னது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. (நீ வாழு மற்றவர்களையும் வாழ விடு)

            நீங்கள் கேட்கலாம் ஏன் இதுபோன்ற பண்பாடுகளின் இருப்பிடமே விளையாட்டு என்று மற்ற சர்வதேச போட்டிகளில் நடக்கவில்லையா என்று. ஏன் இல்லை, அதுபோன்ற சம்பவங்களை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்:

1)    1932ம் ஆண்டு அமெரிக்க லாஸ் ஏன்ஜெல் நகரில் நடந்த உயரத் தாண்டுதலில் அமெரிக்காவினைச் சார்ந்த பாப் என்ற வீரரும் கனடாவினைச் சார்ந்த டங்கன் என்பவும் கடையில் இருந்தனர். பாப் ஏற்கனவே 2 மீட்டர் தனது நாட்டில் நடந்த போட்டியில் சுலபமாக தாண்டியுள்ளார். ஆனால் டங்கன் 1.94 மீட்டருக்கு மேல் தாண்டியதில்லை. முதலில் பாப் 1.94 மீட்டரையும் அடுத்து டங்கனும் தாண்டி விட்டார்கள். அதன் பின்பு 1.97 மீட்டருக்கு போட்டியாளர்கள் உயரத்திக்கு கொண்டு சென்றார்கள். அதனைப் பார்த்த டங்கன் தன்னால் தாண்ட முடியாது என்று நின்று விட்டார். தன்னுடன் கடைசிவரை வந்த டங்கன் மலைப்பதினைப் பார்த்து பரிதாப பட்டு அவரிடம் நேரில் பாப் சென்று, 'நீங்கள் ஓடிவந்து தாண்டும்போது  எல்லைக் கோட்டின் அருகில் உள்ள கட்டையில் மிதித்து தாண்டினால் நிச்சயம் உங்களால் தாண்ட முடியும் என்ற நம்பிக்கை ஊட்டினார்' அந்த அறிவுரையேற்று டங்கணும் ஓடிவந்து கட்டையில் கால் வைத்துத் தாண்டிக் குதித்தார். என்னே அதிசயம் அவர் இது வரை தாண்டாத 1.97 மீட்டரை தாண்டி விட்டார். அதன் பின்பு இருவரும் நம்பராகி கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டனர். 1987 ம் ஆண்டு பாப் மனைவி டங்கனுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் இறந்து விட்டதினை தெரியப் படுத்தியிருந்தது மிகவும் கவலைக்கு ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.

2)    1936ம் ஆண்டில் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் தடைகளை ஜாம்பவான் ஜெஸ்ஸி ஓவென் 100,200,4into 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முடி சூடா மன்னராக திகழ்ந்தார்.  அவரைப் பார்த்து ஜெர்மன் அதிபர் ஹிட்லரே அவர் போன்று ஒரு தடகள வீரர் தன்னுடைய நாட்டில் இல்லையே என்று வருத்தப் பட்டாராம். பெர்லினில் நீளத் தாண்டுதலில் 2 தடவை தவறிழைத்தாராம். அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெர்மனியினைச் சார்ந்த வீரர் லாங் ஜெஸ்ஸி ஓவனை அணுகி நீங்கள் நீலதாண்டுதல் எல்லையினை குறிக்கும் பலகையிற்கு அப்பால் இருந்து தாண்டினால் வெற்றி பெறமுடியும் என்று அறிவுரை கூறினாராம். ஜெஸ்ஸி ஓவன் மூன்றாவது முறையாக ஜெர்மனி வீரர் லாங் சொன்ன அறிவுரைபடி ஓடிவந்து தாண்டி வெற்றிகொண்டாராம். அந்த நேரத்தில் ஜெஸ்ஸி ஓவென் பத்திரிக்கையாளர் சந்திப்பில், 'எனக்கு இது வரை கிடைத்திருக்கும் மெடல்களை எல்லாம் உருக்கி தங்கமாக லாங்கிற்கு கொடுத்தாலும் ஈடாகாது' என்று சொல்லி பெருமைப் பட்டாராம்.

3)    201ம் ஆண்டு நடந்த Rio  ஒலிம்பிக்கில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நியூசிலாந்து வீராங்கனை ஹம்லின், மற்றும் அமெரிக்க வீராங்கனை டி அகஸ்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். அவரகள் 2000 மீட்டர் தூரத்தில் வரும்போது அமெரிக்க வீராங்கனை அகஸ்டோ தடுக்கி கீழே விழுந்து விட்டாராம். உடனே நியூஜிலாந்து வீராங்கனை இது தான் சமயம் என்று முந்தி ஓடவில்லை. மாறாக அமெரிக்க வீராங்கனையினை தூக்கி விட்டு இருவரும் ஓடினாராம். ஆகவே நியூஜிலாந்து வீராங்கனை ஹம்லினுக்கு 'Olympic Fairplay Award' வழங்கப் பட்டதாம்.

4)    விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதே தனித்தகுதியாகும். அதுவும் உலக அளவில் நடத்தப் படும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது அதைவிட சிறப்பாகும். அவ்வாறு கலந்து கொண்டபின்னர் வெற்றி பெறாவிட்டாலும் இலக்கை அடைவது மிகவும் சாலச் சிறந்தது என்பதினை ஒரு தந்தை தன் மகனுக்கு எடுத்துக் காட்டியுள்ளது  1994 ம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து ஓட்டப் பந்தய வீரர் ரேமாண்ட் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டாராம். அவ்வாறு கலந்து கொண்ட போட்டியில் அவரது கால் தசை பிசகி கீழே விழுந்து விட்டாராம். அதனை பார்த்துக் கொண்ட அவரது தந்தை ஜிம் மைதானத்தில் இருந்து குதித்து மகனை கைத்தாங்கலாக அணைத்துக் கொண்டு பந்தய எல்கையினை அடையச் செய்தாராம். ரேமாண்ட் அந்தப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்றாலும் அந்த மைதானத்தில் கூடியிருந்தோர் எழுந்து ரேமாண்ட் தந்தையினை பாராட்டி கரஒலி எழுப்பினார்களாம். அவருடைய செயலினை பாராட்டி 2012ம் ஆண்டில் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் அவரை ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஓடச்செய்ததாம் ஒலிம்பிக் குழு.

விளையாட்டில் நியாயமாகவும், நேர்மையாகவும், நட்புடனும் நடந்து கொண்டாலும் விளையாட்டில் மிக மோசமான நடத்தைக்கும் குறைவில்லை.

1)    1994 ம் ஆண்டு அமெரிக்க ஸ்கேட்டின் வீராங்கனை டோனி ஹார்டிங்ஸ் நார்வேயில் நடந்த போட்டியில் கலந்து கொண்டார். அவரைப் பழிவாங்க அவரது முன்னாள் கணவர் ஒருவரை அணுகி விளையாட்டுப் போட்டியில் டோனியின் போட்டியாளரான கெரிகானை தாக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்திருந்தார். அதற்குக் காரணம் அமெரிக்க வீராங்கனை டோனி போட்டியில் வெல்லக் கூடாது என்பதேயாகும். அதேபோன்று கெரிகான் தொடையில் காயம்பட்டு சிகிச்சைப் பெற்று போட்டியிலும் வென்று விட்டார். அந்த வன்முறை சம்பவம் குறித்து ஒரு விசாரணை நடத்தப் பட்டது. அதில் அமெரிக்க வீராங்கனை மற்றும் மூவர்மீது குற்றம் கண்டுபிடித்து அவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப் பட்டது.

2)    அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசனை அனைவருக்கும் தெரியும் அவர் தனது 20 வயதிலேயே பட்டம் வென்றவர். 1997ம் ஆண்டு மைக் டைசன் தனது பரம எதிர் விளையாட்டாளர் ஹோலிபீல்டு உடன் சண்டையில் கலந்து கொண்டார். அப்போது மைக் டைசன் ஆத்திரத்தில் ஹோலிபீல்ட்டின் காதினை இரண்டு முறை ரத்தம் கொட்டும் அளவிற்கு கடித்து விட்டதால், அவருடைய சாம்பியன் பட்டம் பிடுங்கப் பட்டது. 2002 ஆண்டு மைக் டைசன் குத்துச் சண்டை  பிரிட்டிஷ் குத்துச் சண்டை வீரர் லென்னாஸ் லீவிஸ் உடன் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டு அதற்கு ஆயத்தமாக இரண்டு விளையாட்டு வீரர்களையும் பத்திக்கையாளர் முன் அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டது. அப்போதும் மைக் டைசன் பிரிட்டிஷ் வீரரை கடித்து விட்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

3)    2006ம் ஆண்டு உலக கால் பந்தாட்டம் ஜெர்மனியில் நடந்தது. அதன் கடைசி போட்டியில் பிரான்சும், இத்தாலியும் மோதின. பிரான்ஸ் அணிக்கு ஜிடேன் கேப்டனாக இருந்தார். போட்டி நடந்து கொண்டு இருக்கும்போது இத்தாலி வீரர் மார்கோ மெட்ராஸி ஏதோ அபத்தமாக சொல்லிவிட்டார் என்று ஜிடேன் அவர் அருகே ஏதோ பேசுவது போல் வந்து தனது தலையால் மெட்ராஸி நெஞ்சில் முட்டி கீழே தள்ளி விட்டார். அதனை கவனித்த நடுவர் ஜிடேனை சிகப்பு அட்டை காண்பித்து வெளியே அனுப்பினார். அதில் இத்தாலி அணி வெற்றி வாகை சூடியது.

4)    2021 ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கின் மல்யுத்த Semi final ல் இந்தியாவினைச் சார்ந்த ரவி தஹியாவும், கசக்ஸ்தான் வீரர் நூருல் இஸ்லாமும் கலந்து கொண்டனர். அப்போது கசக்ஸ்தான் வீரர் ரவி தஹியாவின் கை புஜத்தில் கடித்து விட்டார். அந்த வலியையும் தாங்கிக் கொண்டு அந்தப் போட்டியில் சில்வர் மெடல் பெற்றார்.

அதேபோன்று தான் கால் பந்தாட்டம், கிரிக்கெட், கூடைப் பந்து போன்ற விளையாட்டுகளில் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு எறிவதும், வீரர்களை நிறத்தால் வேறு படுத்தி திட்டுவதும், தோல்வியுற்றால் மைதானத்தில் நுழைந்து அராஜகம் விளைவிப்பதும் நாகரீகமான செயலாகுமா என்று சிந்திக்க வேண்டாமா?

 

மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது விளையாட்டு வீரர்களின் திறமையினை மட்டும் காட்டுவதாகாது. மாறாக மனிதர்களுக்குள் நட்பையும், பண்பையும் வளர்க்கக் கூடியதாகும். மதம், ஜாதி, இனம், மொழி, பணக்கார, ஏழை நாடுகள் என்ற எல்கை கோட்டினைத் தாண்டி மனிதன் பண்புடனும், பாசத்துடனும், பரிவுடனும் கூடிய ஒரு சர்வதேச சமுதாயத்தினை நவீன உலகில் உருவாக்குவதே நமது எல்லோருடைய கடமையல்லவா?

Friday, 30 July 2021

புவி சூடாதலும்-இயற்கை சீற்றமும்!

     (டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

தற்போது நமது கவனமும், ஊடகங்களின் ஈர்ப்பும் கொரானா பற்றியும், அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடக்கும் ஆர்ப்பாட்டம், சண்டைகளைப் பற்றியும் தான் செலுத்தப் படுகிறது. ஆனால் உலகை அச்சுறுத்தும் புவி சூடாதலையும், அதனால் ஏற்படும் பேரழிவுகளையும் சற்று சித்திக்க இந்தப் பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.

நமது நாட்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில்  கேதார்நாத் புனித தளம் அமைத்திருப்பதினை உங்களுக்குத் தெரியும். அங்கே ஏற்பட்ட பனிச்சரிவில் 169 பேர் சிக்கி இறந்து விட்டனர். பலர் காணவில்லை என்றும் கூறப் படுகிறது. அதற்கு காரணமாக புனிதத் தளத்திற்கு வரும் யாத்திரிகர்கள் வசதிக்காக தங்கும் விடுதிகளும், ஹோட்டல்களும், மாடி கட்டிடங்களும் காடுகளை அழித்து காட்டியதால் தான் என்று சொல்லப் படுகிறது. . ஜூலை மாதத்தில் கொட்டித்தீர்த்த அடை மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 140 பேர்கள் இறந்து விட்டார்களாம். சீனாவில் 1000 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மழை பொழிந்தும், ஜெர்மனி,உள்பட பல நாடுகளில் மழையினால் பல சேதங்கள் அடைந்ததாக சொல்லப் படுகிறது. ஆர்க்டிக் கண்டத்தில் உள்ள பணிப் பாறை உருகி ஐரோப்பாவில் வெள்ளப் பெருக்காம். ஒரு பக்கம் அங்கே பணிப் பாறை உருகி சேதம் உண்டாக்கினாலும், மறு பக்கம் ருசியாவும், அமெரிக்காவும் போட்டிபோட்டுக் கொண்டு அங்கே பூமிக்குள் இருக்கும் எண்ணெய், எரிவாயு, தாதுப் பொருட்கள்  ஆகிவற்றை எடுக்க ஆய்வு நடத்துகின்றனவாம்.

அடை மழை எவ்வாறு அழிவைத் தருகின்றதோ அதேபோன்று அதிக வெப்பமும், உலக அளவில் வெப்பத்தினை கக்கியுள்ளது என்பது குவைத்தில் நிழலில் 54 டிகிரி செல்சிஸ் 129 பாரங்கீட்டும் வெயிலில் 70டிகிரி செல்சிஸ் 158 டிகிரி பாரங்கீட்டும் உள்ளது. அதன் விளைவு கார்களின் மெட்டல் பகுதியும், டிராபிக் பிளாஸ்டிக் சிக்னல் பகுதியும் உருகி விட்டதாம். அதே போன்று தான் அமெரிக்கா, மற்றும் கனடா நாடுகளில் சில பகுதிகளில் 54 டிகிரி செல்ஸில் வெயில் கொளுத்தியதால் மெட்டல் பகுதி உருகி விட்டதாம். அதே போன்று பல பகுதிகளில் அமெரிக்காவின் காடுகளில் கட்டுக் கடங்கா காட்டுத்தீ பரவியதாம்.

முதன் முதலில் கார்பன்டை ஆக்சைட்டினை தொழில்சாலைகளிலும், மின் உற்பத்தி நிலையங்களிலும், வீடுகளிலும், வாகனங்களிலும், வெளியேறி சுற்றுப் புற சூழலுக்கும், வெப்பத்தினை கட்டுப்  படுத்துவதற்கும் மிகவும் அவசியம் என்று 'Centre for Policy Research’ பேராசிரியர் டாக்டர் நவ்ரோஸ் துபாஷ் சொல்கிறார்.  1970க்கு முன்பு வீட்டில் மர அடுப்பு இல்லாத வீடே இல்லை எனலாம். அதனிலிருந்து வெளியாகும் புகை தாய்மார்களை பாதித்து பல்வேறு நோய்களுக்கும் ஆளானார்கள் எனலாம். மின்சார உற்பத்திற்கு அடுப்புக் கரி மற்றும் நிலக்கரி மிகவும் தேவையான ஒன்று. அந்த மின் சுழற்சியில் வெளியாகும் புகை மண்டலத்தினை வட சென்னையில் குடியிருக்கும் மக்களுத் தெரியும். ஆகவே தான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மிகுந்த சோலார் தகடுகள் மூலமும், சூழல் காற்றாலை மூலமும், கடல் அலை, காற்று, மழை, பூமிக்கு அடியில் உள்ள வெப்பத்தினை கண்டு பிடித்து(Geo Thermal) மின் சக்தி  உற்பத்தி செய்யப்படுகிறது. சென்னையில் ஓடும் மெட்ரோ ரயில் கூட சோலார் மின் உற்பத்தி மூலம் தான் இயக்கப் படுகிறது. ஆகவே அதுபோன்ற கார்பனுக்கு மாற்றான மின் உற்பத்தியினை மக்கள் பயன் படுத்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.

நிலைக்கத் தக்க மின் திறன்: 'Council on Energy and Environment and Water' மின் உற்பத்திக் கவுன்சிலின் தலைமை அதிகாரி 'அருணா கோஸ்'  கூறும்போது இனிமேல் பெட்ரோல், டீசல், காஸ் பயன்படுத்தும் வண்டிகள் 2035க்கு பின்பு ரோடுகளில் காண முடியாது. மாறாக மின்சாரத்தால் பயன் படுத்தும் வாகனம் பயன் படுத்துவதே நாம் காணலாம். G 20 நாடுகளில் இந்தியாவில் மட்டும் தான் உஷ்ணம் 2 டிகிரி செல்சிசுக்குள் கட்டுப்பாடுடன் உள்ளது. ஆனால் சராசரி இந்தியர் இரண்டு வகையாக கொள்கையினை கடைப் பிடிக்கின்றனர். சுத்தமான காற்று வேண்டும் ஆனால் சிக்கனமான டீசல் வண்டிகளையே பயன்படுத்திட வேண்டும். ஆகவே வருங்கால நமது சந்ததியினர் சுதந்திரமான காற்றினை சுவாசிக்க செய்யவேண்டுமென்றால் மாசு விளைவிக்கும் பெட்ரோல், டீசல், காஸ் பயன் படுவதினை குறைக்க வேண்டும். 

சுகாதாரத்திற்கு உலை வைக்கும் நெருக்கமான வாழ்க்கை:

ஜனத்தொகை பெறுக, பெறுக கிராமப்புற மக்கள் வேலை வாய்ப்பிற்காக நகரத்தில் குடியேறுகின்றனர். அப்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி தனி வீடு முடியாது. ஆகவே உயரமான கட்டிடத்தில் ஒண்டி குடித்தனம் வாழ முயல்கின்றனர். நகரங்களின் அருகில் உள்ள விலை நிலங்கள் குடியிருப்பு வீடுகளாக மாறி வருகின்றன. வயல்களில் இருந்த பச்சை பசேல் என்ற தாவரங்கள், மரங்கள் அழிக்கப் பட்டு குடியிருப்பு கோபுர வீடுகளாக மாறி உள்ளன. தற்போது 'Smart City' என்ற மாதிரி நகர பகுதிகள் பசுமை தாயகமாகவும் மாற வேண்டும் என்று "Integrated Urban Planning at World Resources Institute India' இயக்குனர் 'Jeya Tintav' சொல்கிறார். நகரில் வாழும் ஒவ்வொரு குடி மகனும் மரம் வளர்ப்பதை கொள்கையாக ஏற்கவேண்டும். அதோடு தனித்தனி வாகனத்தில் சென்றால் தான் மதிப்பு என்று கொள்ளாமல் passenger friendly கொள்கைக்கு மாறி வழியில் நிற்பவர்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கமும் வேண்டும். 1983ம் ஆண்டு நான் சிங்கப்பூர் சென்றபோது எனது கல்லூரி தோழர் காரைக்கால் சாலி மரைக்காருடன் காரில் பயணிக்கும் வாய்ப்பினை பெற்றேன். அப்போது ‘பீக் நேரம்’ என்று சொல்லும் அலுவலக நேரங்களில் பஸ் நிறுத்தங்களில் நிற்கும் பயணிகளை தனியாக செல்லும் வாகன ஓட்டிகள் அழைத்துச் செல்வதனை கண்டேன். அப்போது தான் அவர்கள் தனி டிராபிக் லேனில் செல்ல முடியும். அதே போன்று தான் அங்கே குப்பையினை ரோட்டில் கொட்டினால் 5000 டாலர் அபராதமும், 3மாத தண்டனையும் வழங்குகின்றார்கள். 2012ம் ஆண்டு அதுபோன்று தண்டனை விதிக்கப் பட்டவர் 8195 என்றால் 2018 வரை தண்டிக்கப் பட்டவர் 39000 ஆகும். மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புத் தந்தால் தான் சிங்கப்பூர் போன்று சிறந்த நகரமாகப் படும்.

2011ம் ஆண்டு நான் ஆஸ்திரேலியா சென்ற போது எவ்வாறு குப்பைகளை சேகரிக்கின்றார்கள் என்று கண்டு ஒரு கட்டுரையும் எழுதியுள்ளேன். அங்குள்ள சிட்டி கவுன்சிலில்  பணம் செலுத்தி பச்சை, மஞ்சள், சிகப்பு, நீலம் குப்பை கொட்டும் பிளாஸ்டிக் கொள்கலனை பெற்றுக் கொள்கின்றனர். வீடுகளில் வளர்க்கும் மரம் செடிகளை வெட்டும்போது அதனை பச்சை தொட்டியிலும், மறு சுழற்சிக்கு தேவையான பொருட்களான பிளாஸ்டிக் பொருட்களை மஞ்சள் தொட்டியிலும், தேவைப் படாத குப்பை கூளங்களை சிகப்பு தொட்டியிலும்,  வியாபார நிறுவனங்களில் சேரும் அட்டைப் பெட்டிகள் போன்றவற்றை நீல நிற தொட்டியிலும் போடுவர். அவைகளை ஒரு டிரைவர் இயக்கம் ஹைட்ராலிக்ஸ் வசதி உள்ள வண்டியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேகரிக்கின்றனர். அவ்வாறு சேகரிக்கும் அனைத்துமே மறு சுழற்சி பயன்பாட்டிற்கு செல்கின்றது. குப்பைகளை நடு ரோட்டில் போடுவதால் கழிவு நீர் குழாய்கள் அடைக்கப் பட்டு கொசுக்கள் பெறுக வழி வகுக்கும். அத்துடன் மழை நீர் வடிகாலும் அடைபட்டுப் போகும். ஆகவே தான் ரோடுகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதினை காணலாம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1,47, 613 டன் கழிவுகள் சேருகின்றது. அதில் 25லிருந்து 30 சதவீதம் தான் மறு சுழற்சிக்கு பயன் படுத்தப் படுகிறது. மீதியுள்ளவைகளை நகரங்களின் அருகிலுள்ள வெற்று இடங்களில் கொட்டும்போதும், அதனை எரிக்கும்போதும் சுகாதாரம் கெட்டு, பல்வேறு நோய்களும் அந்தப் பகுதி மக்களை பற்றிக் கொள்கிறது.

கடைகளில் பொருட்களை வாங்கும் போது கடைக்காரர்கள் கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளை வாங்கி விடுகிறோம். அதற்குப் பதிலாக அட்டைப் பை, துணிப் பை, சாக்குப் பை போன்றவற்றை  ஏன் நாம் எடுத்துச் செல்லக்கூடாது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்குப் பதிலாக ஏன் மெட்டல் பாட்டில்களை பயன் படுத்தக்கூடாது. ஹோட்டல்களில் பிளாஸ்டிக் டம்ளர் கொடுப்பதினை நிறுத்தி கண்ணாடி  உபயோகத்தினை ஏற்படுத்த வேண்டும். முனிசிபல் ஆக்ட் 2001ன் படி உபயோகிப்பவர் குப்பைகளை தரம் பிரித்து வைக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. அதனை ஒவ்வொரு முனிசிபாலிடியும் சரியாக செயல் படுத்துகிறதா என்று உறுதி செய்ய வேண்டுமென்று 'சகா ஜீரோ வேஸ்ட்'  தலைமை அதிகாரி வில்மா ரோட்ரிக்ஸ் சொல்கிறார்.

 

 பெரிய தொழிற்சாலை, கம்பெனிகள் கடமை:

ஒவ்வொரு பெரிய தொழில் நிறுவனங்களும், கம்பெனிகளும் கார்பன் புகையினை குறைக்க வேண்டிய கடமை உள்ளது என்று ஏரி வாய்வு மற்றும் அதன் பயன் பாடுகள் பற்றிய துறையில் போற்றத்தக்க அறிஞர் ஆர்.ஆர். ராஷ்மி சொல்கிறார். இந்தியாவில் 1000 கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன. அதில் வெறும் 38 நிறுவனங்கள் மட்டும் கார்பனை குறைக்க வழிவகை செய்துள்ளது என்று பார்க்கும் போது ஆச்சரியமாக தெரியவில்லையா? ஆகவே பெரும் நிறுவன பங்குதாரர்கள் அந்த நிறுவனங்கள் கார்பனை கக்குவதை குறைக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

காடுகள் பயன்பாடு:

காடுகள் மனித சமூக, பண்பாடுடன் இணைந்த ஒன்றாகும் என்று IIT கரக்பூர் விஞ்ஞானி டாக்டர் அம்ரிதா சென் கூறுகின்றார். அரசுகளால், நீதி மன்ற உத்தரவாலும் காடுகளை ஒட்டி உள்ள சமுதாய மக்களின் குடியிருப்புகளை அரசு அகற்றி விடுவதால் காடுகளை கண் போன்று காக்கும் மக்களிடமிருந்து பிரித்து விட ஒன்றாக கருதப் படுகிறது. மக்கள் வாழும் இடங்களுக்குப் பதிலாக காடுகளை அழித்து தொழில் நிறுவனங்களும், சுற்றுலா பயண விடுதிகளும் கட்டுவதாலும், அகல பாதைகளுக்கு தேவையான இடங்களை எடுத்துக்கொள்ள மரங்கள், வயல்கள் அழிப்பதாலும் சுத்தமான காற்று சுவாசிக்க மக்களை தடுக்கும் பெரும் முயற்சியாக கருத வேண்டும். அப்படி வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்படுத்தும் தீ காட்டுத்தீயாக பரவுகிறது. கென்யாவினைச் சார்ந்த அரசியல் வாதியும், இயற்கை பாதுகாவலருமான வங்காரி மத்தாய் என்ற பெண் ' கிரீன் பெல்ட் மூவ்மெண்ட் என்ற இயக்கத்தினை ஆரம்பித்து பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களை ஒருங்கிணைத்து சுமார் 2 கோடி மரங்களை நட்டுள்ளார். அதற்காக அவருக்கு 2004ல் உயர்ந்த நோபல் பரிசு வழங்கப் பட்டது. ஒரு தனிப் பட்ட நபரே ஒரு இயக்கத்தினை ஆரம்பித்து 2 கோடி மரங்களை நடும்போது ஏன் அரசும், மக்களும் இணைந்து அதுபோன்ற இயக்கம் மூலம் மரங்களை நடக் கூடாது.

கடலினை காப்போம்:

உலகின் 70 சதவீதம் கடலால் ஆனது. கடலில் கலக்கும் கழிவு ஆயில், வீசப்படுகின்ற பிளாஸ்டிக் உபயோகப் பொருட்கள், குப்பை கூளங்களால் மாசு அடைந்து மீன் வளங்கள் மற்றும் கடல் வாழ் விலங்கினங்கள் பாதிக்கப் படுகின்றன மட்டுமல்லாது கடலின் மேற்பரப்பிலிருந்து வெளியாகும் குளிர்ந்த காற்று மழை வளத்தினை பொழிய செய்யாது செய்து விடும் என்று 'பயோ-ஓசினோக்ராபி அல்ப்பிரேட் வெபின்னேர் இன்ஸ்டிடியூட்' போராசிரியர் விக்டர் சாஜித் சொல்கிறார்.

கார்பன் என்ற நச்சு புகையினை குறைக்க கீழ்கண்ட வழிளை கையாளலாம்:

 

1) வெப்ப மண்டல நாடுகளான பிரேசில், இந்தோனேசியா, இந்தியா, மடகாஸ்கர் போன்ற நாடுகளில் மரம் வளர்ப்பு திட்டத்தினை பொற்கால அடிப்படையில் அரசும் மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

2) போக்குவரத்தால் 80 சதவீத மாசு ஏற்படுகிறது. ஆகவே சைக்கிளிங், எலெக்ட்ரிக் வாகனங்களை உபயோகிக்க வேண்டும்.

3) 100 பெரிய கம்பெனிகள் 70 சதவீத கிரீன் ஹௌவுஸ்(Green House) கார்பன் வெளிப்படுத்துகிறது. அதனை கட்டுக்கள் வைக்க பங்குதாரர்கள் முயல வேண்டும்.

4) வீடுகள், அலுவலகங்கள் எப்போதும் ஏ.சி பயன் பாட்டிலேயே இல்லாமல் அவைகளில் காற்றோட்ட வசதி செய்து ஜன்னல், கதவுகள் அமைக்க வேண்டும். காரணம் மின்சாரம் தயாரிக்க அதிகமான கார்பன் தேவைப் படுவதால் அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

5)  மரக்கரி, நிலக்கரி பயன் பாட்டினை அதிகமாக குறைக்க வேண்டும்.

கருத்துக்கு: mdaliips@yahoo.com

 

Friday, 16 July 2021

கப்பல் விடுவோம், நல் வாணிபம் செய்வோம்!


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

முஸ்லிம்களின் பல்வேறு துறைகளில் பிரதிநித்துவம், அரசியல் பங்கீடு, இட ஒதுக்கீடு சம்பந்தமாக ஏராளமான ஆய்வுகள் வந்துள்ளன. ஒரு நகரத்தில் மதக் கலவரம் என்றால் முதலில் பாதிக்கப் படுவது பெரும், சிறு வியாபாரிகள் தானே. உதாரணத்திற்கு 1992-1993 மும்பையில் நடந்த கலவரத்தி லும், கோவையில் நடந்த 1998 கலவரத்தில் பாதிக்கப் பட்டது பெரும் கிளாத் ஸ்டோரான 'சோபா' போன்றவையும்,  2002ல் குஜராத்தில் கோத்ரா ரயில் நிலைய சம்பவத்திற்கு பின்பு குஜராத்தில் நடந்த சம்பவமும், 2013ல் உ.பியில் முஸாபிர் நகரில் நடந்த கலவரத்திலும் பாதிக்கப் பட்டது பெரிய மற்றும், சிறிய வியாபாரிகளும் தானே என்பதினை உங்களுக்குத் தெரியும். அந்த வியாபாரிகள், தொழிலதிபர்கள் நிலைகள் பற்றிய ஒரு ஆய்வினை குஜராத் அஹமதாபாத் பல்கலைக் கழகமும், விப்ரோ தொழில் நுட்ப கழக சேர்மன் ஆஜிம் பிரேம்ஜியும் இணைந்து  மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அறிக்கையின் சாராம்சத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

2019ம் ஆண்டு சர்வேபடி இந்தியாவில் முஸ்லிம் ஜனத்தொகை 19.5  கோடியாகும். அது மொத்த ஜனத்தொகையில் 14.2 சதவீதம். 2001-2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி முஸ்லிம்கள் 24.6 இருந்தது. முஸ்லிம்கள் எண்ணிக்கை சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகளில் 59.1 சதவீதம் தான். மிகவும் வேகமாக குறைந்து விட்டது. முஸ்லிம்கள் நிலை பற்றி ஆராய நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. அதன் அறிக்கையில் சராசரி இந்திய மக்களின் படிப்பறிவு 64.8 சதவீதமாகும், ஆனால் முஸ்லிம்கள் படிப்பறிவு 59.1 சதவீதம் தான். நீதிபதி சச்சார் கொடுத்த அறிக்கையினைத் தொடர்ந்து பேராசிரியர் அமிதாப் குண்டு அதனை அமல் படுத்த நியமிக்கப் பட்டு அவர் 4.12.2014ல் ஒரு அறிக்கையினை சமர்ப்பித்தார். அதன் படி  பள்ளிப்படிப்பினை பாதியிலேயே நிற்பாட்டிய முஸ்லிம் மாணவர் மற்ற மத மாணவர்களைவிட அதிகம். அதுவும் பெண்பிள்ளைகள் பாதியிலேயே படிப்பினை நிறுத்துவது மிக

அதிகமாம். பள்ளியிலேயே சேராத முஸ்லிம் சிறுவர்கள் 17 சதவீதமும், சிறுமியர் 22 சதவீதமாக உள்ளது உங்களுக்கு அதிர்ச்சியாக தெரியவில்லையா?

            இந்திய தொழிலாளர்(LEP) வேலை வாய்ப்பு மக்கள் தொகையில் ஹிந்துக்கள், கிருத்துவர், சீக்கியர் அதிகமானோர் உள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் 31 சதவீதம் தான். 2017-18 ஆய்வின் படி முஸ்லிம்கள் கிராமத்தில் வேலையில்லாமல் இருப்போர் 6.5 சதவீதம், ஆனால் நகரங்களில் 8.5 சதவீதம். அது மற்ற சமுதாயத்தினரை விட அதிகமாகும். சுய வேளையில் ஈடுபடுவோர் நகரங்களில் அதிகமாக உள்ளனர்.மற்ற மத பெண்கள் வீட்டுக்குள்ளே வேலை செய்வது 51 சதவீதமாகும், ஆனால் முஸ்லிம் பெண்கள் 70 சதவீதம் வீட்டுக்குள்ளேயே வேலை செய்கிறார்கள். முஸ்லிம்கள் சுய வேலைகளை செய்வது மற்ற சமுதாய தொழிலதிபர்கள் அவர்களை புறக்கணிப்பது தானாம். முஸ்லிம்கள் தொழில் தொடங்க வங்கிகளை நாடாததிற்கு காரணம், வங்கிகளின் வட்டி முறைகள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதாலேயே! ஆனால் முஸ்லிம்களுக்கு உதவ ‘இஸ்லாமிய டெவெலப்மெண்ட் பேங்க்’ இருந்த போதிலும், அதனைப் பற்றிய விழிப்புணர்ச்சி மிக, மிக குறைவே எனலாம். மற்றும் அதுபோன்ற வங்கிகள் ஒரு சில இடங்களில் இருப்பதும் ஒரு காரணம். தற்போது பல முகல்லாக்களில் ‘பைத்துல் மால்’ என்ற அமைப்புகள் உதவி செய்ய ஆரம்பித்துள்ளது ஒரு நல்ல வரவேற்பாகும்.

            2014ல் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் 90 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறப் படுகிறது. அதுபோன்ற சம்பவங்களில் 91பேர்கள் இறந்துள்ளதாகவும், 579பேர்கள் காயம் அடைந்ததாகவும் தெரிகிறது. 2019 ஜூன் மாதத்திற்குப் பின்பு வந்த அரசின் அதிர்ச்சி தரும் நடவடிக்கைகளான முத்தலாக் சட்டம், காஸ்மீரின் தனி உரிமையான சட்டம் 370 மற்றும் 35A ரத்து செய்தது, ஜம்மு-காஸ்மீரை இரண்டு பகுதிகளாக பிரித்து காஷ்மீர்-லடாக் என்று மாநில அந்தஸ்தை    எடுத்துவிட்டு பாண்டிச்சேரி போன்ற ஒன்றிய பகுதியாக்கியது, பாபரி மஸ்ஜித் இடித்தவர்கள், 'தி கிரேட் எஸ்கேப்' என்று ஆங்கில படத்தில் வருவது போல தப்பித்தது, ராமர் கோவில் அந்த இடத்தில் கட்டுவதற்கு சாதகமான உத்தரவு பெற்றது, குடியுரிமை சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை முஸ்லிம்களுக்கு ஒரு பெரும் இடியாக அமைந்தது என்பது யாரும் மறுக்க முடியாது.

            முஸ்லிம்கள் ஆடைகள் தயாரித்தல், உணவு பதப் படுத்துதல், ஹோட்டல், பேக்கரி, கட்டிடம் கட்டுதல், சாப்ட் வேர் கம்பனிகள், ஆர்ட்ஸ் மற்றும் கிராப்ட்ஸ், நகை, கைபேசி, மளிகை, கறி, மீன்  ஏற்றுமதி-விற்பனை, பிளாஸ்டிக் மற்றும் மசாலா பொருட்கள் தயாரித்தல், விற்பனை, இன்ஜினியரிங், கேன்வாஸ் மற்றும் தோல் தயாரித்தல்-ஏற்றுமதி, துணிக்கடை, நெய்தல், பாய் முடைதல் போன்ற 20 தொழில்களில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். முஸ்லிம் தொழில் அதிபர்களுக்கு மூலப் பொருட்கள் கிடைப்பதிலும், தொழில் நுட்ப தொடர்பு ஏற்படுத்துவதிலும் அரசு புறக்கணிப்பும், மற்ற சமூக தொழிலதிபர்கள் ஆதரவு கிடைப்பதிலும் தொய்வுகள் உள்ளதாம். தொழில்கள் தொடங்குவதற்கு குடும்பத்தில் உள்ளவர்களும், பொருட்களை வாங்குவோர்களிடமும், பண உதவி பெறுவதிலும், தயக்கங்களும் சில சந்தேகங்களும் உள்ளதாம். வாடிக்கைகார்களுக்கு முதலில் நம்பிக்கையூட்ட மிக பெரிய சிரமம் இருக்கின்றது. முஸ்லிம் தொழிலதிபர்களின் பொருட்களின் தரங்களில் சந்தேகமும் உள்ளதாம். ஒரு தடவை நம்பிக்கை ஏற்படுத்தினால் மறுபடியும் எந்த சிரமும் இல்லையாம். தொழிலாளர் கிடைக்காத பட்சத்தில் 'network' மார்க்கெட்டின் மூலம் 25 முதல் 30 சதவீதம் வேலைப் பளுவினை பகிர்ந்து கொள்ள முடிகிறது.

பொருளாதார சவால்கள்: பல தொழிலதிபர்கள் தங்களுக்கு கடன் கொடுக்க வங்கிகள் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் கூறுகின்றனர். பொருட்களை வாங்கும் நபர்களை பண உதவிக்கு அணுகினால் முதலில் நீங்கள் தொழில் ஆரம்பிங்கள் பிறகு பார்க்கலாம் என்றும் கூறப் படுகிறதாம். வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டினால் அவர்களை வழிநடத்த பல தொழிலதிபர்கள் தயக்கம் காட்டுகின்றனராம். காரணம் எங்கே தங்களுக்கு போட்டியாக தொழிலை ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயமாம். தொழில்களில் அனுபவம் நிறைந்த ஹிந்துக்கள், ஜெயின், பார்சி, சீக்கிய , கிருத்துவமக்கள் தங்களுக்கு பொருட்களை கொடுத்தும், வங்கிகளின் கிரிடிட் துணையுடன் வந்தால் தான் தருவோம் என்கின்றனர். ஆனால் முஸ்லிம் வியாபாரிகளுடன் வியாபாரம் செய்யும்போது அதுபோன்ற சிரமம் இருப்பதில்லையாம்.கொரானா ஊரடங்கால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. வெளிநாட்டவர் தொழில் போட்டி, மற்றும் GST போன்ற வரி விதிப்புகள் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. Demonetisation போன்ற நேரங்களில் முஸ்லிம் வியாபாரிகள் தங்களுடைய பணத்தினை மாற்றுவதற்கு நீண்ட வரிசையில் நின்று காலத்தினையும், நேரத்தினையும் இழந்ததாக கூறுகின்றனர். முஸ்லிம் வியாபாரிகளிடம் பணத்தினை குறித்த நேரத்தில் கொடுப்பதில்லை, கொடுக்கவேண்டியதினை கேட்டால் மிகவும் கடுமையாக நடந்து கொள்கின்றனராம்.  சில வியாபாரிகள் முஸ்லிம் பொருட்கள் தரமில்லை என்று வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனராம். முஸ்லிம் அல்லாத தங்கள் சமூக உறவினர்களிடமும் முஸ்லிம் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கினால் அவர்களை பகிஸ்கரிக்கின்ற்னராம்.

அரசின் மாற்றாந்தாய் மனப்பாங்கு: முஸ்லிம்கள் நடத்தும் கறி, தோல் சம்பந்தமான தொழில்களை மூட முயற்சி மேற்கொண்டும் வருகின்றனர். இந்திய மக்கள் பெரும்பாலோர் அசைவு உணவு உண்பவராக இருந்து, ஹிந்துத்துவா துவேசம் உள்ளவர்கள் மாட்டுக் கறி சாப்பிடுவதையும், தோலால் உற்பத்தி செய்யப் படும் பொருட்களையும் புறக்கணிக்கின்றனர். கறி ஏற்றுமதிக்கான லைசென்ஸ் வழங்குவதிலும், ஏற்கனவே உள்ள லைசென்ஸ்ஸை புதுப்பித்தலும் தயக்கம் காட்டுகின்றனர். ஆகவே 2014ன் சர்வேபடி 50 சதவீத தொழில்கள் சரிவடைந்துள்ளன.  கோவில் திருவிழாக் காலங்களில் புனித ஆற்றில் தோல், டையிங் போன்ற தொழில்களால் ஆறுகள் புனித தன்மை இழப்பதாகக் கூறி அரசே அந்த ஆலைகளை மூடச் செய்கின்றன. ஹிந்துத்துவா வலது சாரி அமைப்பினர் டெல்லியில் தப்லீக் ஜமாத்தால் தான் கொரானா நோய் பரவியது என்றும், ஆகவே முஸ்லிம்கள் நடத்தும் பழ, காய்கறி கடைகளில் பொருட்களை வாங்காதீர் என்றும் பரப்புகின்றனராம்.

வலதுசாரி வன்முறை நடவடிக்கைகள் 2014ம் ஆண்டிற்கு பின்பு முஸ்லிம்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாகவும், பசுமாடுகளை அறுப்பதிற்காக கடத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும், பொய்யான குற்றச் சாட்டுகள் சொல்லி தாக்கப் படுவதும், அவர்களுக்குப் பயந்து வீடுகளை துறந்து அகதிகளாக வேறு இடத்திற்கு இடம் பெயர்வதும் வாடிக்கையாகிவிட்டது. சமீப காலங்களில். தொரு வியாபாரிகளைக் கூட தங்கள் பகுதியில் வியாபாரம் செய்யக் கூடாது என்றதால், பலர் ஆட்டோக்கள் ஓட்டி காலந்தள்ளுகின்றனர்.

            சில பெரும் தொழிலதிபர்கள் தங்கள் தொழில்களை இஸ்லாமிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தொடங்கினால் தங்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சிலர் தாங்கள் முன்பு செய்த தொழிலனை விட்டு புதுத் தொழில்களை தொடங்க முயல்கின்றனர். எல்லாவிதமான வெறுப்புகள் தங்கள் மீது எறியப் பட்டாலும் முஸ்லிம் வியாபாரிகள் மட்டும் தங்களுடைய மார்க்க கொள்கை, கோட்பாடுகளை விட்டுக் கொடுப்பதில்லையாம். சீனாவில் முஸ்லிம் வியாபாரிகள் பெருகக் காரணம் அவர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் தொழில் செய்திறது தானாம்.

            பொருளாதார முதலீடுகள்: பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களுடைய சுய சேமிப்பை வைத்தே தொழில் தொடங்குகின்றனராம். சிலர் அரசு உதவி கொண்டும், சிலர் கூட்டுறவு சங்கங்கள் மூலமும் தொழில் தொடங்குகின்றனராம். முஸ்லிம் வியாபாரிகள் சரியான கணக்கு, வழக்கு வைத்துக் கொள்ளாததால் சிலர் அபராதம் கட்ட நேருகின்றது என்று சில ஆடிட்டர்கள் சொல்லுகின்றார்கள். தங்கள் மூதாதையர் தொழில்களை தொடர்ந்து நடத்தும் சிலர் தற்போதைய அரசு வரிவிதிப்பு தெரியவில்லையாம். ஆகவே அவர்களுக்கு பொருளாதார, நிதி,அறிவு மற்றும் விழுப்புணர்ச்சி தேவையாம். முஸ்லிம் முதலீட்டாளர்கள் போடுகின்ற பங்குகளை அமானிதம் என்று கண்ணைப் போல பாதுகாக்கின்றனராம். கடந்த பத்து ஆண்டுகளாக முஸ்லிம் தொழில் அதிபர்களிடையே இஸ்லாமிக் பைனான்ஸ், ஷரியத் பைனான்ஸ், ஹலால் செர்டிபிகேஷன் போன்ற விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதாம்.

            சமூக ஊடகங்களின் உதவி: முஸ்லிம் வியாபாரிகள் தங்கள் உற்பத்தியினை விளம்பரப் படுத்த சமூக ஊடகங்களை நாடுகின்றனர். பல புது என்ஜினீரியங் பட்டதாரிகள் புதுத்தொழில்கள் தொடங்க ‘யு டூப்’ போன்ற ஊடகங்களை தேடி கண்டு பிடித்து தொடங்குகின்றனர். சிலர் தொழில் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். சிலர் 'இன்ஸ்டாகிராம்' மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். கோஜா, போரா முஸ்லிம் சமூதாய மக்கள் தங்கள் சமூதாய மக்கள் தொழில் தொடங்க உதவி செய்கின்றனர். அந்த சமுதாய பெண்களும் தொழில் வியாபாரம், பொருளாதாரம் ஆகிவைகளில் ஆண்களுக்கு பெரும் உதவியாக உள்ளனர். அதற்கு காரணம் அவர்கள் பொருளாதார படிப்பறிவும் உள்ளது தானாம். அவர்களுக்கு RIFA chambar of commerce and Industry மற்றும் MIA ஆகியவை பெண்களுக்கு போதிய பயிற்சி அளிக்கின்றனராம்.

            இந்திய முஸ்லிம் பெரிய தொழிலதிபர்கள் சுமார் 72 கம்பனிகள் நடத்துகின்றனர். அதில் முக்கியமானவை, CIPLA, HIMALAYA, மெட்ரோ ஷூஸ், WIPRO, HAMRAD, WOCKHARDT முக்கியமாதனாகும். அந்த 72 நிறுவனங்களின் வருட வருமானம் சுமார் 20 லட்சம் கோடியாகும் என்றால் நீங்கள் நம்புவீர்களா.

            நான் எதற்கு மேலே குறிப்பிட்ட விவரங்களை சொல்கின்றேனென்றால் தொழில் தொடங்க பல தடைகள் இருக்கும், அதையெல்லாம் உடைத்தெறிந்து தொழில்கள் நடத்தினால் நிச்சயமாக நீங்கள் பெரும் பணக்காரர் ஆவீர்.

2) எப்படி ஆம் ஆத்மி பார்ட்டி டெல்லியில் பள்ளி பாடப் புத்தகங்களில் தொழில் சம்பந்தமான விபரங்களை சேர்த்துள்ளதோ அதேபோன்று முஸ்லிம் கல்வி நிறுவனங்களிலும் சேர்க்க வேண்டும்.

3) புதுவிதமான தொழில் தொடங்க போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியும்.

4) தேசிய தொழில் கருத்தரங்குகளில் மாணவ, மாணவியரை கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். தொழில் நுட்ப மாணவர் எப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழில் முனைவோர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை பெறுவது என்று போதிக்க வேண்டும்.

5) ஒவ்வொருவரும் தங்களது 20 சதவீத ஜக்காத்தினை தங்களுடைய முகல்லா மூலம் தேவையானவர்களுக்கு தொழில் தொடங்க கொடுக்க வேண்டும்.

6) மேலே குறிப்பிட்ட 72 தொழில் அதிபர்களும் முஸ்லிம் தொழில் முனைவோருக்கு பயிற்சியளிக்க நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.

7) NGO அமைப்பினர் எந்தந்த தொழில்கள் போலியானவை, எந்தெந்த தொழில் தொடங்கினால் நஷ்டம் வராது, தொழில் தொடங்க யார், யாரை அணுக வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும்.

8) முஸ்லிம் தொழிலதிபர்கள் தங்களுக்கு வேண்டிய ஆடிட்டர்களை அணுகி எப்படி கணக்கு, வழக்குகளை பராமரிக்க வேண்டும் என்று பயிற்சி எடுக்க வேண்டும்.

9) மத வெறியில்லாத மற்ற சமுதாய வியாபாரிகளை அணுகி ஆலோசனை பெறுவதினை தவிர்க்க கூடாது.

10) அரசியல் தலைவர்கள் முஸ்லிம்கள் பயன்பெற அமைக்கப் பட்ட நீதிபதி சச்சார் மற்றும் குண்டு கமிட்டிகளை அமல் படுத்தி அதனை கண்காணிக்க ஒரு தனி அமைப்பினை மத்தியிலும், மாநிலத்திலும் செயல் படுத்த வலியுறுத்த வேண்டும்  என்றால் சரிதானே சகோதரர்களே!

Comments: mdaliips@yahoo.com