Tuesday, 25 March 2014

சபாஸ், சரியான போட்டி, ஜெயிக்கப் போவது யார்?


இந்திய நாடு ஜனநாயக நாடாக 1950ஆம் ஆண்டு பிரகடனப் படுத்தப் பட்டு பின்பு இந்த வருடம் 2014இல் நடக்கப் போகிற மக்களவைத் தேர்தல் ஒரு வித்தியாசமானது என்றால் நீங்கள் எப்படி என்று கேட்கலாம். அவை பின்வருமாறு:
1) தேர்தலில் வெற்றிபெற தேசியக் கட்சிகலான காங்கிரஸ், பாரதிய ஜனதா, இடது சாரிகள் மாநிலக் கட்சிகளின் கூட்டணியின் வெற்றியினை எதிர் நோக்கி இருப்பது.
2) மத்தியில் 2004 ஆண்டிலிருந்து இருமுறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் அவர் சார்ந்த காங்கிரசுக்கு தனது இமாலய சாதனை எதனையும் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாத நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளால் தனது மந்திரிசபை முக்கி முனகியதால் அரசியலினை விட்டு சற்று ஒதுங்கி இருப்பது.
3) முக்கிய ஆளும் கட்சியான காங்கிரஸ் முக்கிய காங்கிரஸ் தலைவரிகளை எல்லாம் பின் தள்ளி,நேரு குடும்ப வாரிசினை முன்னிறுத்தி வாக்குச் சேகரிக்க முயல்வது.
4) பிரதான எதிர்க் கட்சியான பாரதிய ஜனதா தங்களை மதவாதக் கட்சி என்ற போர்வையிலிருந்து விலகி, மற்ற மாநிலங்களின் சாதனைகளை எல்லாம் விட்டுவிட்டு குஜராத் மாநில அரசு சாதனையினை மட்டும் முன்னுறுத்தி வெற்றி காண முயல்வது.
5) இடது சாரியின் மூத்த தலைவர்களான ஹர்கிஜித் சிங், ஜோதி பாசு மறைவிற்குப் பின்பு சிறந்த தலைமையினை இழந்ததோடு மட்டுமல்லாமல் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களின் ஆட்சியினையும் உட்கட்சிப் பூசலால் பறிகொடுத்து பொழிவிழந்து காணப்படுவது.
6) மாநிலக் கட்சிகலான மம்தா பானர்ஜியின் திரினாமுல் காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன சமாஜ் கட்சி, முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சி, ஜெயலலிதாவின் அனைத்திந்திய அண்ணா டி.எம்.கே, கருணாநிதியின் டி.எம்.கே.ஆகியவை அதிக இடங்களில் வெற்றிப் பெற்றால் மத்திய அரசில் பிரதான அங்கம் வகிக்க முடியும் என்று அதிக இடங்களில் போட்டி போடுகின்றன.
7) இடதுசாரிகள் மூன்றாம் அணியினை அமைத்துப் போட்டிபோடும் எண்ணம் அதில் ஈடுபட்ட ஒவ்வொரு கட்சியும் வடக்கு, தெற்கு  என்று ஒவ்வொரு பக்கத்தில் இழுத்ததால் அதன் கனவு கானல் நீரானது.  அந்த முயற்ச்சியில் ஈடுபட்ட மூத்த தலைவர் பரதன் அவர்கள் தேர்தலுக்கு முன்பு மூன்றாம் அணி அமைக்க ஈடுபட்டது தவறு, 'சீ சீ இந்த பழம் புழிக்கும்' என்ற பழமொழிக் கேட்ப  ஒப்புக் கொண்டுள்ளார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 2014 மக்களவைத தேர்தல் முடிவினை உலக வல்லரசு நாடுகள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுள்ளன என்றால் மறுக்க முடியாது. அதற்குக் காரணம் ஆசியக் கண்டத்தில் பொருளாதார வீழ்ச்சியில் பல்வேறு நாடுகள் துவண்டபோது, சிறந்த பொருளாதார நிபுணராகத் திகழ்ந்த மக்மோகன் சிங் ஆட்சி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டால் கடைசி காலத்தில் பாராளுமன்றமே இயங்கமுடியாத முட்டுக் கட்டை ஏற்பட்டு மன வேதனையில் தேர்தலினை விட்டு சற்று ஒதுங்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மூத்த நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் போன்றவர்களும் தங்களது சாதனைகளை சொல்லி தேர்தலில் நிற்காமல் கடைசி நேரத்தில் காமராஜர் திட்டத்தில் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பதாக கூறிக்கொண்டு தன வாரிசையே மார் தட்டி களத்தில் விட்டிருக்கிறார்.

அது ஒருபுறம் இருக்க 2002ஆம்  ஆண்டு பாரதிய ஜனதா மத்தியிலும், குஜராத் மாநிலத்திலும் ஆட்சி செய்தபோது உலகமே வியக்கத் தகுந்த மனித படுகொலையில் சுமார் 2000 முஸ்லிம் மைனாரிட்டி மக்கள் கொல்லப்பட்டனர். அந்த மாநில முதல்வர் பிரதான மந்திரியாக அறிவிக்கப் பட்டு பல்வேறு வித்தைகளை கையாண்டு எப்படியாவது செங்கோட்டையில் அரியணையில் ஏறிவிட வேண்டும் என்று முயல்கிறது. அவ்வாறு ஆட்சி அமைத்தால் மத்திய அரசு எப்படி இருக்கும் என்று கீழே காட்சிக்கு வைக்கின்றேன்:

1) உத்திர பிரதேசத்தில் மூன்றாம் அணியினைச் சார்ந்த முலாயம் சிங்கின் அரசியல் வாரிசு அஹிலேஸ் யாதவ் ஆட்சி நடப்பது அனைவரும் அறிந்ததே! அந்த மாநிலத்தில் பி.ஜே.பி. அமைப்பாளராக இருந்த அமித் சா தான் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது உள்துறை மந்திரியாக இருந்தவர்.அவர் பொறுப்பேற்றப் பின்னர் தான் முஜாபார் நகரில் முஸ்லிம்கள் சுமார் 60 பேர் கொலை செய்யப் பட்டு அங்குள்ள மக்கள் அனாதையாக பாய்சா பாத் நகரில் அடைக்கலம் பூண்டுள்ளனர். அந்த மக்களை வருகிற தேர்தலில் ஓட்டுப் போட விடமாட்டேன் என்று அந்தத் தொகுதி பி.ஜே.பி. எம்.எல்.ஏ கூறியிருக்கின்றார் என்றால் என்ன மன தைரியம் பாருங்களேன். அந்த கலவரத்தில் ஈடுபட்ட ஜேட் இன மக்களைக் கவர கடைகாலத்தில் காங்கிரசும் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுக்கு இட ஒதிக்கீடு செய்து கவரலாம் என்று முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மேற்படி செய்கைகளின் மூலம் மத்தியில் பாரதிய ஜனதா அல்லது காங்கிரஸ் ஆட்சி வந்தால் மைனாரிட்டி சமூகத்தினவர் அமைதியாக வாழும் ஆட்சி அமையாது என்பதே திண்ணமே!
2) அதற்கு முன்னோடியாக இப்போதே இந்தியாவின் முடி சூட மன்னராக பி.ஜே.பியில் பல கோடிகள் செலவழித்து படம் பிடித்துக் காட்டப் படுகின்றது. அதன் பின்னணி தான் மோடியினை, 'ஹர, ஹர மோடி' என்று ஹரி, ஹரி ராம், அல்லது ஹரி ஹரி கோவிந்தா போன்று அவருடைய ஆதரவாளர்கள் கோஷமிடுகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அத்வானி போன்ற மூத்த தலைவர்களுக்கு தாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காது மட்டுமல்லாமல், ‘சுதந்திர போராட்டத்தில் முக்மது அலி ஜின்னாவின் அரிய  பங்கு’ என்ற புத்தகம் எழுதி கௌரவப் படுத்தப் பட்ட ஜஸ்வந்த் சிங் போன்றவர்களுக்கு போட்டிபோட இடம் வழங்கப் படவில்லை.
இந்திய தேசத்தினை, பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால், 'பாரத நாடு' என்று தமிழ் மாநில அந்தக் கட்சியின் தலைவர் சொல்லி இருக்கின்றார் என்றால் கொஞ்ச நாளில் மைனாரிட்டிகள், இந்த நாட்டினை விட்டே விரட்டுவோம் என்று சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தாலும் ஆச்சரியப் படத் தேவையில்லை.

3) தேசிய கட்சிகளுக்கு அறுதி பெருமான்மை கிடைக்காதப் பட்சத்தில், ஆட்சி அமைக்க மாநில கட்சியின் உதவியினை நிச்சையமாக தேசிய கட்சிகள் நாடும். இந்த நேரத்தில் மத சார்பில்லாத மாநில கட்சிகளை சிறுபான்மையினர் அதிகமாக தேர்ந்து எடுத்து  மக்களவைக்கு அங்கம் வகிக்க அனுப்பினால் மட்டுமே இந்தியாவில் சிறுபான்மையினர் நலன் காக்கப் பட்டு மத வேறு பாடு காணாமல், எல்லோராலும் போற்றப் படும் ஆட்சி அமையும் என்பது , 'வெள்ளிடை மலை'.


ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம் யார் ஜெயிக்கப் போவது' என்று.

Monday, 20 January 2014

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

"சிறு குடும்பமே சிறப்பான வாழ்வு",
"நாம் இருவர் நமக்கு ஒருவர்"
என்பது போன்ற குடும்பக் கட்டுப்பாடு கோசங்களை விளம்பரமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதினை வீதிதோறும் நாம் காணலாம்.
படித்த இளைஞர்களிடையே திருமணம் ஆனதும் குழந்தைப் பெற்றுக் கொள்வதினை தள்ளி வைப்பதும், ஒன்னிரண்டு குழந்தைகளோடு கர்ப்பத்தடை செய்து கொள்வதும், கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதும் வாடிக்கையாக இருந்து வருவதினை நாம் காணலாம்.
ஆனால் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழகத்தின், 'சமூக அமைப்பு சபையின்' ஆராச்சியின் பயனாக வெளியிடிடப்பட்ட அறிக்கையில், " அதிகமாக பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் பல காலங்கள் ஒற்றுமையாக மகிழ்வுடன் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு குழந்தை பெற்றவர்கள் சீக்கிரமே மனக் கசப்புடன் பிரிந்து வாழ்கிறார்கள்" என்ற உண்மையினை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் திருக் குரானிலே, 'குழந்தைகள் நலன் பற்றி தெளிவாக ஒன்று முதல் ஐந்து வரை உள்ள பாகத்திலே தெளிவாகக் கூறியுள்ளான்.
அதில் குழந்தை பிறக்கும் போதே அதன் உரிமை, பாதுகாப்பினை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுள்ளான்.
இறுதிநபி எம்பெருமானார்(ஸல்) அவர்களுடைய மண வாழ்க்கையும், குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் ஒவ்வொரு மனிதனுக்கும் முன் உதாரணமாக உள்ளது.
இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணமாகாது வாழ்வது, துறவறம், காயடிப்பது போன்றவை அனுமதிக்கவில்லை.
ரசூலல்லாஹ்(ஸல்) அவர்கள் கூறும்போது, 'நான் இறைவனை வணங்குகிறேன், தூங்குகிறேன், நோன்பு வைக்கின்றேன், பெண்களை திருமணம் செய்து கொள்கிறேன், குழந்தைகள் பெற்றுக் கொள்கிறேன், என்னுடைய பாதையில் இருந்து விலகிச் செல்பவர்கள் என் சஹாபாக்கள் இல்லை' என்று ஆனித் தரமாக கூறி உள்ளார்கள்.
அல்னஹல்: 46இல், 'செல்வமும், குழந்தையும் இந்த உலகின் அலங்கரிக்கும் பொருள்கள்'
அல் அனம்: 151இல், 'வறுமையில் உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள் என்று சொல்லப் படுகிறது.
அல்-இஸ்ரா: 31இல் , 'உங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பவன் நானே, உங்கள் குழந்தைகளை வறுமைக்கு அஞ்சி  கொல்லாதீர்கள்'..

இத்தனை அறிவுரைகள் இருக்கும்போது படித்த இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதினை தள்ளிப் போடுவதும், ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதும், பெண் குழந்தை பெற்றதும் அல்லது அது பிறக்கப் போகிறது என்று மருத்துவ ரீதியாக அறிந்து கொல்வதும் சரியா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த இரண்டு சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
1) எங்களூர் இளையான்குடியில் எங்கள் தெருவிற்கு அடுத்தத் தெருவில் இரண்டு முக்கிய நடுத்தர வர்க்கத்தினைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கு பதினொன்று, மற்றவருக்கு பத்துக்  குழந்தைகள். ஊரில் அவர்கள் நண்பர்கள் அவர்களைப்  பார்த்துக்  போட்டிப் போட்டுக் குழந்தை பெர்க்கிறீர்களா என்று கூட  கேட்டு இருக்கின்றேன். இன்று அவர்கள் அத்தனைக் குழந்தைகளும்,பேரப் பிள்ளைகளும் அல்லாஹ்வின் அருளால் நல்ல சுகத்துடனும், வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.

2) வளைகுடா நாட்டில் வாழும் ஒருவர் ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் பெற்றுக் கொண்டு மனைவிக்குக் கருத்தடை செய்து கொண்டார். ஆனால் அவருடைய கல்லூரி படிக்கும் மகன் இரு சக்கர வாகன விபத்தில் இறைவனடி சேர்ந்து விட்டதால் அவர் மனம் ஓடிந்தவராகி விட்டார்.

இவைகளை ஏன் இங்கே குறிப்பாக சொல்கின்றேனென்றால் பல பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஓட்டாண்டியாகப் போனதுமில்லை, ஒரு குழந்தைப் பெற்றவர் சந்தோசமாக வழ்ந்ததுமில்லை என்று சொல்வதிற்குத் தான்.
"குழந்தைகள் பெற்றுக் கொள்வது சிரமம் தான். அனால் பயனுள்ளது, ஏனென்றால் விலைவாசி ஏற்றம்,குறைந்த வருமானம் என்று மனம் சஞ்சலம் இருக்கத் தான் செய்யும். ஆனால் உண்மையில் குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஒரு மூலதனமாகும்". என்று கிழக்கு மேற்கு சுற்றுப்புற சூழல் அராய்ச்சி இயக்குனர் டெர்ரி-வில்லியம் கூறுகிறார்.
அதற்கான பத்துக்  காரணங்களாக  கீழ்க் கண்டவைகளைக் கூறுகிறார்:
1) குழந்தைப் பெற்றுக் கொள்ளது விட்டால் மன வாழ்வு நிறைவு பெறாது.
2) கிடைத்ததினை பெற்றோரே தின்பது என்றசுயநலமானது, பகிர்ந்துண்ணும் பண்பை வளர்க்கும்.
3) குழந்தைகள் பிற்காலத்தில்  பலன் தரும் விருச்ச மரங்கள்.
4) பெற்றோர்கள் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களாக இருக்கலாம். ஆனால் இன்றைய கணினி உலகில் குழந்தைகள் அவர்களுக்கும் பாடம் எடுக்கும்.
5) குழந்தைகள் பெறும்போது பெற்றோர்கள் உடல் உறுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு சுகாதாரத்துடன் வாழ்வார்கள்.
6) குழந்தைகள் பெற்றுக் கொள்வது மூலம், ஆண்களின் வீரத்தினையும், பெண்களின் வீரியத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
7) குழந்தைகள் மூலம் உங்களுக்குப் பெருமை சேர்க்கும். ஒரு மகன் அல்லது ஒரு மகள் தான் பெற்றோர் போன்று வர வேண்டும் என்று சொல்லும்போது உங்கள் மனது அவர்களைப் பெற்ற சந்தோசத்தினை பெற்றவர்களாவீர்.
8) பெற்றோர்கள் குழந்தைகளோடு வன விலங்குப் பூங்காவிற்கோ,கடக்கறைக்கோ, விளையாட்டுத் திடலுக்கோ அல்லது இடங்களுக்கோ சென்று அவர்களுடன் விளையாடும் பொது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவிண்டோ?
9) குழந்தைகள் செய்யும் குறும்புத் தனத்தினை கண்டு சிரிக்காத பெற்றோர்கள் உண்டா?
10) நீங்கள் குழந்தைகளைக் கொஞ்சும்போது, அவை உங்களைக் கொஞ்சும்போது ஏற்படும் மனநிறைவு பெறாத பெற்றோர் உண்டா?

சீனா கூட சில ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ளும் கட்டுப் பாடு வந்து 2013 ஆண்டில் அந்தக் கட்டுப்பாடு ஏற்படுத்திய பொருளாதார, சுற்றுப் புறசூழல் தாக்கத்தினை அறிந்து அந்தக் கட்டுப்பாடினை இரண்டு குழந்தையாக மாற்றி உள்ளனர்.
சுற்றுலாபுகழ் சுவிட்சர்லாந்து நாட்டில் குழந்தைகள் எண்ணிக்கை குறைவிதினை அறிந்து குழந்தை பெறுவதிற்கு பல வகையில் ஊக்கம் கொடுக்கின்றனர்.
 ஆகவே மக்களை பெற்றவர் மகாராசியாகத் தான் வாழ்ந்துள்ளனர், எந்தக் காலத்திலும் ஓட்டாண்டியாக வாழ்ந்தது இல்லை!


Tuesday, 17 December 2013

உலகம் பிறந்தது எனக்காக, உண்மை மறந்தது எதற்காக?

உலகம் பிறந்தது எனக்காக, உண்மை மறந்தது எதற்காக?
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்.(ஓ)
உலக வேடங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ்வால்  உத்தம நபி(ஸல்) அவர்கள் மூலம் வழங்கப் பட்ட அல்குரான்  வரலாற்று பெட்டகமாகவும், காலத்தினால் இன்று வரை ஒரு எழுத்துகூட மாசு படாமலும், கருத்துசிதையாமலும் இருக்கின்றது என்பதினை உலகில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. 
உலகம் அழிந்து மனிதர்கள் ஒருநாள் எழுப்பப் படும்போது அவன் முன்பு செய்த செயல்களுக்கு பதில் கூற வேண்டும் என்று கூறுகிறது அல்குரான். அதற்கு உதாரணமாக சாதாரன விதையிலிருந்து செடி முளைத்து பின்பு மண்ணோடு மண்ணாக மடியும் என்பதினையும், அதன் பின்பு புதிதாக செடி உருவாகுவதையும், குளங்கள் வற்றி அதன் பின்பு மழைகாலத்தில் களி மண்ணுக்கிடையே கிடந்த மீன் முட்டைகள் உருவெடுத்து துள்ளி ஓடும் மீன்களாக உலா வருவதினையும்  உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
உலகம் அழிந்து நீதி கூறும் நாள் வரும்போது சாதாரணமான நிலா நடுக்கமாகவோ, அல்லது 1945 ஆண்டு ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மாதிரியோ இருக்காதாம். மலைகள் வானத்தில் தூக்கி எறியப் பட்டு தவிடு பொடியாக இருக்கும் நாளாக இருக்கும் என்று அல்குரான்(78:40;69:14) விரிவாக கூறுகின்றன.

அதன் கூற்றை நிருபிக்கும் விதமாக 300 மில்லியன் டாலர் பணத்தில், பல ஆண்டு காலம் நடந்த ஆராய்ச்சியின் பயனாக 'பிக் பாங்க் 'என்ற நிகழ்ச்சி 2012 ஆம் ஆண்டு நடத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து தென் டென்மார்க் பல்கலைக் கழகத்தினைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகம் அழியும்போது வானமும்,பூமியும் எப்படி இருக்கும் என்று கண்டு பிடித்துள்ளார்கள்.
உலகம் அழியும்போது பூமியில் உள்ள ஒரு தானியத்திலிருந்து மலைகள் வரை அதன் எடை பன்மடங்காக ஆகுமாம். வானத்திலுள்ள கிரகங்களும், நட்ச்சத்திரங்களும் அதன் எடையினை விட பன் மடங்கு அதிகரிக்குமாம். அவ்வாறு பெரிதாகிய கோலங்கள் ஒன்றோட ஒன்றுடன் மோதி தீப் பிழம்பாகி ஒரு சிறிய பந்தாக மாறுமாம்.
அது எவ்வாறு மாறும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஆராய்ச்சியாளர்கள், 'தண்ணீர் சூடு செய்யும்போது எப்படி ஆவியாகுகிறதோ, அல்லது காந்த சக்கித்தியுள்ள மக்னடிசம் சம்மட்டியால் அடிக்கும்போது அதன் ஈர்ப்பு சக்த்தியினை இழந்து விடுவதினை உதாரணமாக காட்டுகிறார்கள். இதன் விபரம் டென்மார்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்  வெளியிடும், 'ஹை எனெர்ஜி பிசிக்ஸ்' என்ற பத்திரிக்கையில் எழுதி உள்ளனர்.

மேற்கொண்ட இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பல கோடி பணத்தினை செலவழித்து என்று கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் உலக மக்களை தட்டி எழுப்புவதிற்க்காக
உண்மை நபி(ஸல்) அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் வழங்கியுள்ளான். உலகம் ஒருநாள் அழியும், அப்போது நீங்கள் எழுப்பப் பட்டு நீங்கள் செய்த நன்மை, தீமைகள் உங்கள் கையில் புத்தகமாக வழங்கப் பட்டுக் கூலி கொடுக்கப் படும் என்றும் அறிவிக்கின்றான் அல்குரானிலே!
அதனை அறியாத மானிடர்களுடன், மூமிங்களும் கீழ்க் கண்டவாறு உழல்கின்றனர்:
1) கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தினை மது, மாது, சூது போன்ற களியாட்டங்களில் செலவிட்yuடும்,
2) இறைவன் அருளிய செல்வத்தினை ஈகை வழியில் செலவு செய்யாமலும்
3) பெற்று வளர்த்த பெற்றோரை பேணிக்காக்காது நட்டாற்றில் விட்டும்
4) சகோதர, சகோதர சொத்துக்களை பளீகரம் செய்தும் 
5) மலம் கழிக்கும் கக்கூஸ்கள் கூட தங்கம் முலாம் பூசிய கக்கூசுகலாக ஆக்கி ஆடம்பரமாக வாழ்ந்தும் 
6) அமானித, பைத்துல்மால் பணத்தினை பளீகரம் செய்தும்
7) இறை வழி, நபி(ஸல்) வழிப் படி நடக்காது பல இயக்கங்களாக மூநின்களைப் பிரித்து தன் வழி தனி வழி தனி வழி என்று கூறியும், எழுதியும்
8) அப்பாவி முஸ்லிம்களை சொற்ப அரசியல் லாபத்திற்காக பகடைக் காயாக்கியும்
9) தடை செய்யப் பட்ட வட்டி, சீதனம் வாங்கியும்
10) அதிகாரம் கிடைத்துவிட்டால் பூமி அதிரும்படி நடந்தும் நடக்கும் மாந்தர்கள் தான் 
உலகம் பிறந்தது எனக்காக, என்று உண்மை தெரியாதவர்களாக இருக்கின்றார்கள்.
டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறும் கூற்றினையாவது நம்பி உலகில் வாழும் நாட்களில் மனம் திருந்தி வாழ வேண்டும். டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் இன்னொன்றையும் கூறுகின்றார்கள் உலகம் அழியும் நிகழ்வு எப்போது வேண்டுமானாலும் நடக்குமாம். ஆகவே உங்கள் நன்மை, தீமை வரலாற்று புத்தகம் உங்கள் கைக்கு மகசர் நாளில் வழங்கும்போது பதில் சொல்ல தயாராகுங்கள்!    





Wednesday, 11 December 2013

பந்தாடப்படும் மத வன்முறைத் தடுப்புச் சட்டம்,2011

பந்தாடப்படும் மத வன்முறைத் தடுப்புச் சட்டம்,2011
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

இந்திய திரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் (1950) பெரும்வாரியான மக்கள் சிறுபான்மையினர்தலித், பழங்குடி மக்களைக் கண்ணின் இனிமைபோல பாதுகாக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கார் தலைமையில் அமைந்த குழு பல்வேறு சட்டங்கள் மூலம் வழிவகை செய்தது.
அதனை ஜவர்கர்லால் நேரு பிரதமராக இருந்தது வரை பாதுகாக்கப் பட்டு வந்தது. . ஆனால் அதற்குப் பின் வந்த அரசுகளால் சிறுபான்மையினருக்கும், தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கும் பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டது. அவற்றில் 1984 ஆம் ஆண்டு புது டெல்லியில் சீக்கியர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப் பட்ட சம்பவம், முஸ்லிம்கள் 1989 ஆம் ஆண்டு மூலைக்கு மூலை கொல்லப் பட்ட பகல்பூர் கொடுமை, 1992 ஆம் ஆண்டில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்பு மும்பை மற்ற நகரங்களில் நடந்த கொலைகள், குஜராத்தில்  கோத்ரா ரயில் விபத்து 2002இல் நடந்த சம்பவத்திற்குப் பின்பு முஸ்லிம் மனித வேட்டை, பழங்குடி மக்களுக்காக நோய் தீர்க்க குடும்பத்துடன் பணியாற்ற வந்த பாதிரியார் டாக்டர், ஸ்டைன்ஸ் தன்  மகனுடன் ஓடிசாவில் எரிக்கப்பட்ட சம்பவம், இன்றுவரை தலித் இன மக்கள் தென்னாப்ரிக்க நிறைவேறி கொள்கைபோல காலில் செருப்பு அணியக்கூடாது, அவர்களைத் தனிமைப் படுத்தும் சுவர்கள், கலப்புத் திருமணம் செய்யத் தடை என்ற போர்வையில் தர்மபுரி நாயக்கன்க் கோட்டைக் காலனித் தாக்கப் பட்டு ஒரு ஊரையே துவசம் பண்ணும் சம்பவங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இதுபோன்ற சம்பவங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கு உலக அளவில் மதிப்புக் கெடுகிறது என்று மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டு அவைகள் திரும்பவும் நடக்காமல் இருக்க ஒரு வரைவுச் சட்டத்தினை கொண்டு வந்துள்ளனர் பாராளுமன்றத்தில்.
இந்த வரைவுச் சட்டத்தினை தயாரிக்க 9 பேர் கொண்ட உறுப்பினர்களும், 4 ஆலோசர்களும் நியமிக்கப் பட்டனர். . அதன் முக்கிய உறுபினர்களாக சர்ச்சைக்குட்பட்ட அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட எதிர்ப்புத் தெரிவிக்கும் ஹர்ச்மதரும்அணு ஆகா என்ற சமூக ஆர்வாளரும், குஜராத்தில் நடந்த இன படுகொலைகளையும், அதற்குப் பின்பு நடந்த மனம் பதை, பதைக்க நடந்த படு கொலைகளையும் சந்திக்கு இழுத்த டீஸ்ட செடேல்வாத் மற்றும் பர நக்வி போன்றோர் இருந்தனர்.
2011 ஆம் ஆண்டி தயாரிக்கப் பட்ட சட்டத்தின் முக்கிய அம்சங்கள் கீழ் வருமாறு:
1) தேசிய, மற்றும் மாநில மக்கள் குறை தீர்க்கும் குழுக்கள் அமைக்கப் படும். அதில் 5 பேர் மைனாரிட்டி சமூகத்தினவர் ஆவர்.
2) அந்த குழுக்களிடம் வழங்கப் படும் புகாரின் வாக்கு மூலங்கள் எந்த நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொல்லப் படும்.
3) இராணுவத்திற்கோ, காவல்த் துறைக்கோ அல்லது எந்தத் துறையானாலும் நேரடியாக அமல் செய்கின்ற உத்திரவினை அந்தக் குழுக்கள் பிறப்பிக்கலாம்.
4) வன்முறையினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நேரடியாக இந்தக் குழுக்கள் நிவாரணம் வழங்கலாம்.
இந்தச் சட்டத்தினை அமல் நடத்தக் கூடாது என்று பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களும், மற்ற சில மாநிலங்களும் குவ்வோ, முறையோ என்று எதிர்க்கின்றன.
அவர்கள் சொல்லும் நொண்டிச் சாக்குப் பின் வருமாறு:
1) கோத்ரா சம்பவத்திற்குப் பின்பு நடந்த மனித  வேட்டையினை கண்ணை மூடிக் கொண்டு கண்டும் காணாதுபோல இருங்கள் என்று எந்த அரசும் அதிகாரிகளுக்கு உத்திரவிட முடியாது. ஏனென்றால் அதிகாரிகள் தேசிய மற்றும் மாநில குழுக்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும். அதற்கும் மீறி எந்த அதிகாரியாவது நடந்தால் அவர் ஆயுள் தண்டனை பெரும் அளவிற்கு தள்ளப் படுவார்.
2) இந்த வரைவுச் சட்டம் மகாராஸ்ட்ராவில் நடக்கும் மகாராஸ்டிரா மகாராஷ்டிரா மக்களுக்கே என்ற மொழி வெறி கோசங்களை எழுப்ப சிவா சேனா அமைப்புகள் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்கும்.
3) மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் மைனாரிட்டி, தலித், பழங்குடியினர் ஓட்டினைப் பெரும் கண்ணோட்டத்தில் கொண்டு வரப் பட்டுள்ளது.
4) சட்டம் ஒழுங்கு அமல் படுத்துவது மாநில அரசின் கடமை. அதில் மத்திய அரசு தலையிடக்கூடாது.

ஆனால் நடுநிலையாளர்கள் ஆட்சியாளர்களும், மத வெறியர்களும் மத உணர்வுகளைத் தூண்டி விட்டு மனித வேட்டை ஆடக்கூடாது மற்றும் நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம் காப்பற்றப் பட வேண்டும் என்று கூறி இந்த வரைவுச சட்டம் நாட்டிற்கு நல்லது என்கின்றனர். அதற்கு காரணங்கள் கீழ் வருமாறு:
1) 1984 ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப் பட்டபோது அரசு எந்திரம் இயக்கக் கூடிய கிரியா ஊக்கி என்ற கட்டளைகள் இட யாரும் முன் வரவில்லை.
2) 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது மத்திய அரசின் கட்டுப் பாட்டில் இருந்த ராணுவம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் அதனை இயக்க மௌனம் காத்த பிரதமரைக் கொண்ட மத்திய அரசினை நாம் பெற்றதால் புராதான சின்னம் இடிக்கப் பட்டது.
3) 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் விபத்திற்குப் பின்பு நடந்த நரபலி அறிந்து கண்ணீர் விடத்தான் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயனால் முடிந்ததாக அவரே பேட்டியில் சொல்லி இருந்தார்.
4) அதற்குப் பின்னரும் இந்தியாவில் பாரத ரத்னா பதக்கம்  வென்ற விஞ்ஞானி ஜனாதிபதி அப்துல் கலாம் இருந்தபோது குஜராத்தில் இனக் கலவரத்தில் பாதிக்கப் பட்ட முஸ்லிம்கள் தங்கி உள்ள அகதி முகாம்களை பார்வையிட வேண்டும் என்றும் அப்போதைய பாரதிய ஜனதா மத்திய அரசிடம் கேட்டதாகவும்  அதற்கு அனுமதி 
மறுக்கப் பட்டு விட்டதாகவும் தன் பதவி போன பின்பு எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
5) முஸ்லிம்கள் ஓட்டினை பெரும்வாரியாக பெற்று ஆட்சி அமைத்த உத்திரப் பிரதேச மாநிலத்தில் முசாபர் நகரில் கிட்டத்தட்ட 50 முஸ்லிம்கள் கொல்லப் பட்டு ஹுசைனா பாக்கில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளார்கள் 
அப்படி சம்பவங்கள் தொடர் கடையாக வருவதிற்குக் காரணம் குற்றவாளிகள் நீதி மன்றத்தின் பால் நிறுத்தும் போது நீதி தேவதையின் கண்கள் நிரந்தரமாக கட்டப் பட்டு 
குற்ற வாளிகள் வெளி வருவதுதான் என்று மைனாரிட்டி மக்களும், தலித்தும், பழங்குடியினரும் நம்புகின்றனர்.