Wednesday, 21 September 2022

யாதும் ஊரே யாவரும் கேளீர்-கனியன் பூங்குன்றன்.

 

யாதும் ஊரே யாவரும் கேளீர்-கனியன் பூங்குன்றன்.

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ )

தழிழ் இலக்கியம் புறநானூறு -192 அத்தியாயத்தில் வரும் சில பொன்னான வார்த்தைகளை இந்திய ஒற்றுமைக்காக சிவகங்கை மாவட்ட புலவர் கனியன் பூங்குன்றன் கூறியுள்ளார். அதன் பொருள், 'எமக்குள் எல்லாமும், எல்லாரும் சுற்றத்தார்--- யாம் வெறுப்பால் வாழ்வு இனிதன்று என்று இருப்பதுமில்லை' என்று அழகாக, ஆழமான கருத்துடன் இந்திய துணை கண்டத்தின் அடிப்படை உரிமையான, 'unity in diversity' என்ற கொள்கைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

Guberman, 'தேசம் என்றால் என்ன என்பதினை, 'மனித இனம் உணர்வுப் பூர்வமான பண்பாடுதான் இணைந்து வாழும் வாழ்க்கை கொண்ட வரையறுக்கப் பட்ட எல்கைக்குள் வாழும் மக்கள்' என்று கூறுகிறார். ஒரு நாடு என்பதற்கு,'நிலையான மக்கள், வரையறுக்ககப் பட்ட நிலம் கொண்டது, நிலையான அரசு, மற்ற அரசுகளுடன் தன்னிச்சையான உறவு கொள்ளும் வலிமை' கொண்ட நான்கு கொள்கைகளை அடக்கியதாகும்.

            பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பியர் வருவதற்கு முன்பு இந்திய பழமை பண்பாடுகளை கொண்டு பொருளுள்ளவர், பிறப்பால் மேன்மக்கள், கற்றலில் சிறப்பு வாய்ந்தவர் என்ற வேறுபாடு இருந்தது. ஆனால் அவர்கள் வந்த பின்னரும், பிரிட்டிஷ் அறிஞர் லார்ட் மெக்காலே கொண்டு வந்த ஆங்கிலேய பாட திட்டங்களால் இந்திய மக்கள் வெளியுலக உரிமை, சுதந்திரம், இனம்- மொழி -ஜாதியில் வேற்றுமை  போன்றவற்றை தெரிந்து கொண்டனர் என்ற உண்மையினை மறுக்க முடியாது. அதுவும் கல்வி கற்ற மக்களின் எழுச்சி இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்றாலும்  மறுக்கமுடியாது அது காந்திய அகிம்சா வழியானாலும் சரி, சுபாஷ் சந்திர போஸ் போன்ற தீவிரமானாலும் சரியே! எப்படி இஸ்லாமிய மார்க்கத்தில் படித்த மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சென்று திரும்பிய இளைஞர்களால் புரையோடிய சீதனம், சீர் சீராட்டு, திருமண ஆடம்பரம், வழிபாடுகளில் ஆடம்பர ஆர்ப்பாட்டம் அரவே வெறுக்கப் பட்டதோ அதே போன்று இந்திய அடிமைத்தனத்தினையும், ஜாதியக் கொடுமையினையும், ஆண்டான்- அடிமை என்ற வேற்றுமையையும் இளைஞர்கள் உணர்ந்து சுதந்திர வேட்கை அவர்களை தட்டி எழுப்பியது.

            இந்திய துணைக் கண்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் என்ற இரு வேறு நாதுகளாக 14-15 ஆகஸ்ட் 1947 அன்று உருவானபோது இந்திய துணைக் கண்டத்தில் 584 பெரு மற்றும் குறுநில மன்னர்கள் 584 சமஸ்தானங்களாக ஆட்சி செய்தனர். அதில் பெரும்பாலான முஸ்லிம் சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்தன ஹைதராபாத் நிஜாம் தவிர.  இந்தியா சுதந்திரக் கொடியினை ஏற்றியபோது முதல் பிரதமர் பண்டிட் ஜவாஹர்லால் நேரு, 'on the midnight of 15th August 1947 Indiya woke up to life and freedom' என்று கூறியது இந்திய மக்கள் இப்போதுதான் சுதந்திர காற்றினை நுகர்ந்து உயிர் பெற்றுள்ளனர் என்று கூறுவது எவ்வளவு பொருத்தமானது ஆகும் என்று தெரிகிறதா? நமது சுதந்திரம் கத்தியின்றி ரத்தமின்றி வாங்கிய சுதந்திரம் என்று ஒரு வாதத்திற்காக சொன்னாலும் ஜாலியன் வாலாபாக் போன்ற படுகொலையும், பிளாக் கோல் ஆப் கல்கத்தா, மாப்பிலா கைதிகளை மூச்சு திணறி வேனில் சாகடித்த சம்பவங்களும், சுதந்திர தியாகிகள் தூக்கு மேடையில் ஏறி உயிர்கொடுத்தும், இருட்டு தொழுவ சிறையில் பல்லாண்டுகள் வாடியும், செக்கிழுத்த வீர தழும்புகளும் வீர நெஞ்சங்கள் கொண்டு தாங்காமல் பெறவில்லை சுதந்திரம்.

            இந்தியாவுடன், காஷ்மீர், மைசூர், ஹைதராபாத் இணைய மறுத்து விட்டன. இந்திய ராணுவம் ஐராபாதிற்கு 'operation polo' என்ற ரகசிய மொழியுடன் அனுப்பப்பட்டு 13-18 செப்டம்பர் 1948 வரை போர் தொடுத்து சுமார் 30000 நிசாம் வீரர்கள் பலியாகி ஹைதராபாத் பிடிக்கப் பட்டது. ஹைதராபாத்தினை இணைத்த தினமாக 17ந்தேதி செப்டம்பர் மாதம் 2022 ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் ஹைதராபாத்தில் விழாவாக கொண்டாடினார். இரும்பு மனிதர் என்று அழைக்கப் பட்ட அன்றைய உள்துறை மந்திரி வல்லபாய் படேல் குஜராத்தில் கத்தியவார் தீபகற்பம் என்று அழைக்கப் பட்ட 222 சமஸ்தானங்களை இணைத்து 1948 ஜனவரியில் சவ்ராஷ்டிரா என்ற மாநிலமாகவும், குவாலியர், இண்டூர் மற்றும் 18 சமஸ்தானங்களை இணைத்து மத்திய பாரத் ஆகவும், பாட்டியாலா, கிழக்கு பஞ்சாப் ஆகியவற்றை இணைத்து 15 ந்தேதி ஜூலை மாதம் 1948ல் பஞ்சாப் மாநிலமாகவும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சமஸ்தானங்களை இணைத்து 15ந்தேதி மே மாதம் 1949ம் ஆண்டு தனி மாநிலமாகவும் உருவாக்கப் பட்டது.மைசூரும், ஹைதராபாதும் மத்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் காஷ்மீரை ஆண்ட மன்னர் மஹாராஜா ஹரி சிங் மட்டும் சுவர் மீது உள்ள ஓணானாக எந்தப் பக்கம் சாய்வது என்று முடிவு எடுக்கப் படாமல் இருக்கும்போது பாகிஸ்தான் பலுசிஸ்தான், மற்றும் ஆசாத் காஷ்மீரை இணைத்தது. பிறகு உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா என்று அறிந்து இந்தியாவுடன் 27ந்தேதி அக்டோபர் மாதம் 1947 ம் வருடம் இந்தியாவுடன் இணைந்தது. காஷ்மீர் மட்டும் constituent assembly என்ற தனித்தன்மையுடன் அரசியல் சட்டத்தில் பிரிவு 370 தனித்தன்மை கொண்டதாக அமைந்தது. இந்திய அரசியல் சட்டம் 1950 நிறைவேற்றிய பிறகு இந்திய மாநிலங்கள் மத்திய அரசின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்தியாவுடன் இணைந்த மன்னர்களுக்கு மாநில கவர்னர் பதவிகளும், வெளி நாட்டு தூதர் பதவிகளும் கொடுக்கப் பட்டது. அப்படி முதன் முதலில் மெட்ராசிற்கு வந்த கவர்னர்  தான் பவநகர் மஹாராஜா. 1956ம் ஆண்டு மாநிலங்களை மொழிவாரி மாநிலமாக பிரிக்க 'reorganisation of states' குழு அமைத்தது அதன் படி அமல் நடத்தப் பட்டது. கடைசியாக தெலுங்கு பேசும் தனி மாநிலமாக ஹைதராபாத், தெலுங்கானா பிரிக்கப் பட்டது உங்களுக்குத் தெரியும்.

நேபாள் மற்றும் சிக்கிம் ஹிமாலய தேச நாடுகள். பிரிட்டிஷ் நேபாளுடன் செய்து கொண்ட 1923 ஒப்பந்தப்படி அது சுதந்திரம் பெற்றது.ஆனால்  பூடான் தனி மன்னராட்சியானாலும் அதன் வெளிநாட்டுக் கொள்கையினை இந்திய ஒப்புதலுடன் தான் செய்ய வேண்டும். சிக்கிமுடன் செய்து கொண்ட 1950ம் ஆண்டு ஒப்பந்தப் படி அது சுயாட்சியாக முடிவு செய்யப்பட்டது.

            அந்நிய காலனி ஆதிக்கத்தில் இருந்த பிரான்ஸ் ஆட்சி செய்த பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனம், மாகி, சந்திரநாகூர் போன்றவையும், போர்ச்சுகல் ஆட்சி செய்த டாமன், டையூ, டாட்ரா, நாகர் காவாலி, கோவா போன்றவை தனியாக இருந்தது  பிரான்ஸ் நாட்டுடன் பேச்சு வார்த்தை 1948ம் ஆண்டு நடத்தப் பட்டது. அதன் முடிவில் பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் மக்களின் விருப்பத்தினை அறிய ஓட்டெடுப்பு நடத்தி அதன் படி முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப் பட்டது. 1949ம் ஆண்டு ஜனவரி 19ந்தேதி முதல் 1954 வரை ஓட்டெடுப்பு நடத்தப் பட்டது. வாக்களித்த 7463 பேர்களில் 114 பேர்கள் மட்டும் இந்தியாவுடன் இணைய விருப்பமில்லை என்று தெரிவித்ததினைத் தொடர்ந்து மெஜாரிடி மக்கள் விருப்பத்தின் படி பிரான்ஸ் பகுதிகள் 1961ல் இந்தியாவுடன் இணைந்தன. ஆனால் போர்ச்சுகல் மட்டும் இந்தியாவுடன் எந்த பேச்சுவார்த்தைக்கு ஒத்து வரவில்லை. அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கல் தன்னுடைய படையினை அனுப்பியது. ஆனால் இந்திய ராணுவம் அதற்குள் 1961ம் அவைகளை தன்னுடைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.

            கர்னாடிக் நவாப் குலான் பிரிட்டிஷ் ராணுவத்துடன் இணைந்து இந்திய சமஸ்தானங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததலால் அவருக்கென்று தனி மரியாதை பிரிட்டிஷ் அரசுக்கு இருந்தது. ஆனால் அவர் 1855ம் ஆண்டு இறந்த பின்பு 'Doctrine of Lapse' படி கர்னாடிக் சமஸ்தானத்தினை தன்னுடைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவருக்கு பின்பு வந்த ஆற்காட் நவாப் வாலாஜா தன்னை ஒரு தனிக் காட்டு ராஜாவாக நினைத்து அரசு வருமானத்தின் ஒரு பகுதியினை பிரிட்டிஷ் கும்பனி ஆட்சிக்கு செலுத்தாமல் பல தான தர்மங்களை செய்ய ஆரம்பித்தார். உதாரணத்திற்கு சௌதி அராபியாவில் தமிழ்நாடு ஹஜ் பயணிகள் தங்க மக்கா மதினாவில் தங்கும் இல்லங்கள் கட்டினார்,  அவர்கள் சென்று வர இலவச கப்பல் பயணங்களுக்கு உதவினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரியின் ஒரு பகுதியில் உள்ள மதரசா இ ஆசம் என்ற இலவச பள்ளி அமைத்தார், ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேனி பார்த்த சாரதி கோவில், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் போன்ற இடங்களில் பக்தர்கள் வசதிக்காக குளங்கள் அமைத்தார்,  பிஷப் ஹீபர் பள்ளி, திருச்சி ஜெயண்ட் ஜோசெப் கல்லூரி போன்றவைகள் நிறுவ காரணமானார். அவைகள் எல்லாம் அரசு பணமட்டுமல்லாமல், பிரிடிஷ் தன்வந்தர்களிடமும் கடன் வாங்கி நல்ல காரியங்கள் செய்தார். அதன் மூலம் அரசு கஜானா திவாலானது. ஆகவே பிரிட்டிஷ் அரசு நவாபின் சமஸ்தானைத்தினை தானே எடுத்துக் கொண்டது. நவாப்பினை வெறும் ஆண்டு தோறும் ரூ 1.50 லட்ச மானியத்துடன் மதிப்புமிக நவாபாக நியமனம் செய்தது. நவாப்பின் அமீர் மஹால் மத்திய அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு CPWD மத்திய பொதுப் பணி துறை சீர் செய்யவும் பணிக்கப் பட்டது. ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி, 'ஆற்காட் இளவரசர் பட்டம் ஒரு கவுரவ பதவி என்றும், அவருக்கென்று தனி அதிகாரம் எதுவும் இல்லை என்றும், அவருக்கென்று தனி அணிவகுப்பில்லை என்றும்' தெளிவாக குறிப்பிட்டது கவனிக்கத் தக்கது. எந்த நவாபிற்கு, 'பிரிட்டிஷாருடன் இணைந்து புலித்தேவன், மருது நாயகம் என்ற யூசுப் கான், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் மற்றும் வேலு நாச்சியார் போன்ற சுதந்திர வேங்ககைகளை வீழ்த்தி பல் வேறு சமூகத்தினவருக்கும் உதவி செய்த நவாபின் பரிதாப நிலை பார்த்தீர்களா?

            இப்போது புறநானூறு கவிஞர் பூங்குன்றன் கவிதை படி 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற நிலை படி நாட்டின் நிலைமை உள்ளதா என்று பார்க்க வேண்டும். சிறுபான்மை சமூகத்தினரும், தலித் மக்களும் தங்களை பெரும்பான்மையான சமூகத்தினரிடமிருந்து பாதுகாப்பற்ற நிலையினை உணர்வாக நினைக்கின்றனர். அதற்கு மூல காரணமே என்று 1992ல் அயோத்தியில் உள்ள பாபரி பள்ளி இடிக்கப் பட்டதோ, என்று அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றமும் ஒரு தலையான தீர்ப்பு வழங்கப் பட்டதோ அன்றிலிருந்து முஸ்லிம் சமூதாய மக்களிடையே பயம் கலந்த உணர்வு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வாரணாசியுள்ள பள்ளிவாசலுக்கும் ஆபத்து வந்து விடும் என்ற அச்சத்தில் உள்ளனர். ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற ஒருமைப்பாட்டுடன் கூடிய சிந்தனையில்லாமலும், உனக்கு உன் மதம், எனக்கு என் மார்க்கம்’ என்று சொல்லும் வரம்பு இல்லாமல் மெஜாரிட்டி சமூகத்தினர் தான் வாழ வேண்டும், வழிபட வேண்டும், அவர்கள் கட்டளைப் படிதான் வழிபாடு, வணக்கஸ்தலங்கள் இருக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்.

அரசியல் சட்டபடி இந்திய நாட்டினர் அவரவர் பண்பாடுதான் நடந்து கொள்ள அனுமதித்தும்,  பெண்கள், ஆண்கள் கழுகுப் பார்வையிலிருந்து காத்துக் கொள்ள பயன்படும் ஹிஜாப் அணிவதற்கும் தடை வழக்கு உச்சநீதிமன்ற  கதவையும் தட்டியுள்ளது. இஸ்லாமியர் ஒழுக்க சிந்தனை தூண்டும் மதராசாவினையும் கண்காணிக்கும் ஒரு முயற்சி நடந்து கொண்டுள்ளது. உதாரணத்திற்கு 18.9. 2022 அன்று மாலை அசோக் நகர் பள்ளிவாசலில் உள்ள மதரஸாவில் ஓதி விட்டு திரும்பும் தொப்பி போட்ட எட்டாம் வகுப்பு சிறுவனை ஒருவன் ஏன் தொப்பி போட்டுள்ளாய் என்று மிரட்டி அதனால் அசோக்நகர் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு மனம் இணைந்த இளம் ஜோடிகளை இஸ்லாத்திற்கு இழுக்கும் ‘லவ் ஜிஹாத்’ என்று மிரட்டும் சட்டத்தில் அனுமதியில்லா 'மாரல் போலீசிங்' நடந்து கொண்டுள்ளது பத்திரிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. தாரை தப்பட்டை அடித்து தெருவெங்கும் அலறும் திருவிழாக்கள் நடக்கும்போது அமைதியாக தொழுகைக்கு அழைக்கும் பள்ளிவாசல் பாங்கு சொல்வதையும் தடை செய்யவேண்டும் என்று கூக்குரல்.

அத்துமீறல்களை படம் பிடித்துக் காட்டும் பத்திரிக்கைகளுக்கு எச்சரிக்கை, பத்திரிக்கையாளர்கள் சிலர் கைது, பத்திரிக்கை அலுவலங்கள், அதன் பொறுப்பாளர் வீடுகளில் சோதனை போன்ற நடவடிக்கைகளும் நடுநிலையாளர்களை அச்சுறுத்தும் செயலாக நீங்கள் கருதவில்லையா?

தலித் மக்கள் தேசியக் கொடியினை ஏற்றவிடாமல் தடுப்பது, அவர்கள் குடியிருப்புகளை சுவர் அமைத்து தனிமைப்படுத்துவது, பள்ளிகளில் கழிவறையினை தலித் மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யச் செய்வது, ஆசையாக பள்ளி சிறுவர்கள் மிட்டாய் கேட்டதிற்கே ஊர் கட்டுப்பாடு உங்களுக்கு கொடுக்கக் கூடாது என்று சொல்லும் உலகினை எப்படி சொல்வது, தலித்துகளுக்கு இந்த நாடு இல்லையா?

கிருத்துவர்கள் ஜெபம் செய்வதினை தடுப்பது, அவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஏதாவது பொய்யான மதம் மாற்றம் நடக்கின்றது என்ற குற்றச்சாட்டினை அள்ளி வீசுவது போன்றவை கிருத்துவர்களிடையே அச்ச உணர்வு வராமலில்லையே!

கருத்துக் கலந்துரையாடலில் தலையிட்டு கலவரம் செய்வது தான் நாகரீகமா? அதற்கு சட்டம் அனுமதி கொடுத்திருக்கின்றதா ? இல்லையே!

வெளி நாட்டு பத்திரிக்கை, ஐ.நா சபை மனித உரிமை ஆணையம் கூட இங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை படம் பிடித்து காட்டியுள்ளது. இதற்குத்தான் அனைத்து மக்களும் இனைந்து பாடுபட்டு சுதந்திர இந்தியாவிற்காக பட்டார்களா? எத்தனை அடக்குமுறை தழும்புகள்  சுதந்திர இந்தியாவினை அந்நியரிடமிருந்து பெற இன் முகத்துடன் பெற்றனர், அது ஏன் என்றால், 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வாக்கிற்கிணங்கவும், 'பாருக்குள்ளே நல்ல நாடு அது பாரத நாடு' என்ற உணர்வினை உலகிற்கு உணர்த்தவும் தான் அவ்வாறு பாடுபட்டனர். கல்லானாலும் புருஷன், புல்லானாலும் புருஷன் என்று இந்திய தேசீயத்திடன் இனைந்து நின்ற மக்களை இனியும் ஜாதி, மதம், மொழி, இனம் என்று வேறு படுத்தி தனிமைப் படுத்துவது முறையா? அது போன்ற துவேஷமான நடவடிக்கைகள் மூலம் யாரும் சர்வதேச கண்டனத்திற்கு நாம் கொடுக்கலாமா?  இந்திய மக்களுக்கு எந்தவித இழுக்கும்  ஏற்படுத்திவிடக் கூடாதல்லவா?

           

           

           

Monday, 22 August 2022

மனித உரிமை எடுப்பார் கைப்பிள்ளையா?

 


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)

உலகில் பல்வேறு அரசியல் அமைப்புகள் ஆட்சி பீடத்தில் இருந்தாலும், ஜனநாயகத்திற்கு ஆதரவு குரல் ஒலித்துக்கொண்டே உள்ளன. கொடுங்கோலர்கள் பல காலம் அரியணையில் நிரந்தரமாக இருந்ததில்லை. மக்களை மறந்த மன்னர்கள் நெஞ்சில் நிலைத்ததில்லை என்பது வெள்ளிடைமலை.

உங்களுக்கெல்லாம் தெரியும் பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஸ் பிரிந்து தனி நாடானது. அதனை அங்குள்ள ராணுவ தளபதி முகமது இர்ஷாத் பின்னாளில் அரசியல் வாதியாக மாறி 1983லிருந்து 1990 வரை ஆட்சி செய்த  அவர் ஆட்சியில் கடுமையான மனித உரிமை மீறல்கள் இருந்தது. மக்கள் அவைகளை வெளிக்கொணர பல்வேறு வழிகளை வெளிக்காட்டினர். அதில் ஒன்று தான் 1987ம் ஆண்டு நூர் ஹுசைன் என்ற 26 வயது இளைஞர் செய்த அரசுக்கு தெரிந்த மாபாதக செயல். அது என்ன தெரியுமா? தனது முதுகில், 'Gonotontra Mukti Pak' அப்படியென்றால், 'ஜனநாயகத்தினை விடுவிப்போம்' என்ற வாசம். விடுமா சர்வாதிகார இர்ஷாத் ஆட்சி. அந்த வாலிபர் நடு ரோட்டிலே பலர் முன்னிலையில் சுட்டுக் கொல்லப் பட்டார். அந்த நூர் ஹுசைன் கொழுத்திப் போட்ட தீப்பொறி நாடு ஜனநாயக உரிமையினைப் பெற்றது ஒரு வரலாறு.

உலக அளவில் வல்லரசு நாடுகள் கூட தங்கள் அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றவர்களை கூண்டுக் கிளியாக சிறையில் அடிப்பதும், கொடுமைக்கு ஆளாக்குவதும் நடந்து கொண்டுதான் உள்ளது என்பதினை சில சம்பவங்களைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன்:

1) சீனாவில் சின்ஜியாங் என்ற மாகாணத்தில் துருக்கி மொழி பேசும் முஸ்லிம் மக்கள் உள்ளனர். அவர்களின் வழிபாட்டிற்கு தடை விதித்தும், மக்கள் கூடுவதற்கு கட்டுப் பாடு விதித்தும், அந்த இனம் தழைக்காது குடும்ப கட்டுப் பாடு நடவடிக்கை எடுத்தும், பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை சிறையில் அடைத்தும், சொல்ல முடியாத துன்பங்கள் 2017ம் ஆண்டு முதல் செய்து வருவதனை அமெரிக்கா மற்றும் ஐநா சபை கண்டித்தும் கண்டு கொள்ளவில்லை.

2) ரஷியாவில் புடின் ஆட்சி ஏற்ற பிறகு சுயாட்சிக்காக போராடிய செச்சென்யா மாநில முஸ்லிம்கள் அறவே ஒழித்துக் கட்டப் பட்டனர். அது மட்டுமா ரசியாவின் மிலிட்டரி அதிகாரி ‘சேர்காய் ஸ்க்ரிபால்’ இங்கிலாந்துக்கும் உளவு பார்க்கும் இரட்டை வேலை பார்த்தார் என்று இங்கிலாந்திற்கு மூன்று ரசியர்களை சுற்றுலா பயணிகள் போல அனுப்பி அடையாளம் தெரியாத விஷம் கொண்டு அவர் தங்கி இருந்த வீட்டு அருகே அவரையும் அவருடைய மகளையும் கொல்ல முயன்று மருத்துவ அதிசியத்தால் பிழைத்தனர். அதேபாணியில் எதிர் கட்சி தலைவரும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தினை நடத்தியவருமான ‘அலெக்ஸி நாவலனியினை’   ஒரு உள் நாட்டு விமான பயணத்தில் கொடிய விஷம் வைத்துக் கொல்ல முயன்று ஜெர்மன் சென்று பிழைத்து அங்கு அடைக்கலம் கேட்காமல் சொந்த நாட்டில் போராடுவேன் என்று ரசியா திரும்பிய அவரை விமான நிலையத்திலேயே கைது செய்து  வழக்குக்குமேல் பல வழக்குகள் தொடுத்து இன்னும் வெளியே வரமுடியாதது  மனித உரிமை மீறலல்லவா ?

3) சௌதி அராபியாவின் முடி சூடா மன்னராக திகழும் எம்.பி.எஸ். என்ற முகமது சுல்தான், சௌதி பணக்காரர்களான அல் வாலித் உள்பட 100 பேர்களை ஒரு ஸ்டார் ஹோட்டலில் அடைத்து வைத்து அவர்களின் சொத்தில் பாதியினை கறந்த பின்பு வல்லரசு நாடுகள் எதிர்ப்புக் குரல் எழுப்பிய பின்பு விடுதலை செய்தார். உங்களுக்கெல்லாம் தெரியும் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான, 'வாஷிங்டன் போஸ்ட்'. அதில் உள்ள சௌதியின் எழுத்தாளரான ஹ்ரஜோகி. இவர் அதே பட்டத்து இளவரசர் எம்.பி.ஸ் என்ற முகமது சுல்தான் பற்றி காரசாரமாக கட்டுரை எழுதுகிறார் என்று துருக்கி நாட்டில் உள்ள சௌதி தூதரகத்திற்கு தந்திரமாக வரவழைத்து 6/10/2018ல் அடையாளம் கண்டு கொள்ளாத அளவிற்கு கொல்லப் பட்டார். அதற்காக உலக நாடுகளே கண்டனம் செய்தன.

 

4) நமது பக்கத்து நாடான பர்மாவில் தேசிய தலைவர் என்று அழைக்கப் படும் ‘ஆங் சன்’ அருமை மகள் ‘ஆங் சு கி’ பர்மாவினை ராணுவ ஆட்சிகளிடமிருந்து விடுவிக்க 15 வருடம் தனிமை சிறையில் அடைக்கப் பட்டார். உலக முழுவதும் கண்டத்தினை எழுப்பிய பின்பு  விடுதலை செய்யப் பட்டு உலகின் உயர்ந்த பட்டமான நோபல் பரிசும் வழங்கப் பட்டது. உலக எதிர்ப்பினுக்குப் பயந்த ராணுவம் தேர்தல் நடத்தி ஆங் சு கி யுடன் சமரசம் செய்துகொண்டு 2016லிருந்து 2021 வரை வெளியுறவு மந்திரியாக நியமிக்கப் படவும் செய்தார். ஆனால் ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு ‘ராக்கினா’ மாநிலத்தில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களை நாட் டினை விட்டு துரத்தி அவர்கள் குடியிருப்பு பகுதிகளை தீக்கிரையாக்கினர். அந்த ரோகிங்கியினர் இந்தியா உள்பட பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தது உங்களுக்குத் தெரியும். அதன் பின்பு என்ன ஆனது பர்மா ராணுவ தளபதி ஆங் சு கியினை சிறையில் அடைத்து வழக்குக்கு மேல் வழக்குப் போட்டு வருகின்றனர். ஆனால் அதனை உலக நாடுகள் தடுக்க முடியவில்லையே!

நீங்கள் கேட்கலாம் நமது நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல் சம்பந்தமாக எதுவும் சொல்லலையே என்று! Amnesty International என்ற மனித உரிமை ஆணையம் இந்தியாவினைப் பற்றி சொல்லும்போது, 'இந்திய அரசு எந்த மதத்தினவருக்கும், ஜாதிக்கும், இனத்திற்கும் வேறுபாடற்ற சட்டங்கள் மற்றும் செயல் முறைகள் அமல் படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளது ஒரு எடுத்துக் காட்டு. இந்திய அரசியல் சட்டம் 1951ம் ஆண்டு இயற்றப் பட்டபிறகு முதன் முதலில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் விளைவு என்ன தெரியுமா? 1976ம் ஆண்டு பாரத பிரதமராக இருந்த இந்திரா காந்தி இதுதான் சமயம் என்று எமெர்ஜென்சி காலத்தில் எதிர் கட்சியினரை அடக்கி ஆள 42வது சட்ட திருத்தத்தினை கொண்டு வந்து, 'குடிமக்களின் அடிப்படை உரிமைகளை’ முடக்கி, அதன் மூலம் நீதிமன்றங்கள் தலையீடு இல்லாத வகையில் அவர்களுடைய நீதிபரிபாலன நடவடிக்கைகளை சஸ்பெண்டு செய்து, ‘ட்ரிபியூனல்’ என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதில் தனக்கு   வேண்டியவர்களை உறுப்பினர்களாக நியமித்து முன்மாதிரி சர்வாதிகாரியாக வலம் வந்தார். இந்த சட்ட திருத்தம் மூலம், 'குடிமகன் தனது கருத்தினை சுயமாக வெளிப்படுத்தினால் கைது நடவடிக்கையினில் ஈடு படலாம் என்பது தான்’ ஆனால் அவர் ஆட்சி நிலைத்திருக்க முடிந்ததா என்றால் இல்லையே என்பதினை அடித்துச் சொல்லலாம். குறைந்த காலத்திலேயே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி புதிய ஆட்சியினை அமைத்தனர்..

அதனையடுத்து சட்டம் 1860 ல், செக்சன்  153 பி இ.பி.கோ விலும் செக்சன்  505 இ.பி.கோ படி யார் பயத்தினை ஏற்படுத்துகிறார்களோ, வேற்றுமையினை தூண்டுகிறார்களோ, சில காரணங்களுக்காக வன்முறையினை தூண்டுகிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சட்ட கமிஷன் 1986ல் பரிந்துரைத்தது.

ஆங்கிலத்தில் இரு  பழமொழிகள்  உண்டு, 'power  drunk a man', 'power corrupt a man' ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும் அதிகார போதையில் தன்னிலை மறந்தும், நாட்டின் செல்வம் எல்லாம் தன்னுடையது என்றும் ஒருவன் எண்ணுவானாம். அது தான் சர்வாதிகார செயலுக்கு முன்னுதாரணம். ஜனநாயகத்தில் 'checks and balance' வேண்டும். அதாவது ஆட்சியாளர்கள் நடவடிக்கைக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்பது தான். தற்போது அதுபோன்ற செயல் முறைகள் இல்லாததால் அதிகார கும்பல் பொதுக் கூட்டம், பத்திரிக்கை, எலக்ட்ரானிக் மீடியா போன்றவற்றை அடக்கி அல்லது கைக்குள் கையூட்டு கொடுத்து மடக்கியும், மாணவர், வக்கீல், நடிகர், பொது நல ஆர்வலர்கள், பொது நல தன்னார்வ அமைப்புகள் என்று சகட்டு மேனிக்கு தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டனர். அதற்கு ஆதரவாக சில நீதிமன்றங்களும் அதுபோன்ற குற்றச்சாட்டுக்களில் உட்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வராமலே இழுத்தடித்தும், சிலவற்றில் அரசுக்கு ஆதரவாகவும் சமீப காலங்களில் தீர்ப்பும் வழங்கப் பட்டு அதனை நடுநிலையான ஊடகங்கள் கூட கண்டனம் செய்தன.அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

1) ஆதிவாசிகள், பட்டியல் இனத்தவருக்காக சேவைசெய்த கிருத்தவ சாமியார் பேராசிரியர் ‘ஸ்டென்’ லூர்துசாமி தனது 84 வயதான காலத்தில் பார்க்கின்சன் நோயால் அவதிப் படுவரை தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தார் என்று சிறையில் அடைக்கப் பட்டு 5, ஜூலை, 2021ல் மரணம் அடைந்தது உலகத்தினையே உலுக்கியது. உலக நாடுகள் கண்டனத்தினையும் எழுப்பின.

2) எத்தனையோ நடிகர் நடிகைகளில் சினிமாவில் நடித்து கோடிக்கணக்கில் இளைஞர்களின் பணத்தினை கறந்தாலும்,   மும்பை ஆடம்பர ஜூஹூ கடற்கரை பகுதியில் ரூ 40 கோடிக்கு வீடு, ப ன்ஜ்ரா ஹில்ஸ் பகுதியில் ரூ 30 கோடிக்கு ஆடம்பர பங்களா வாங்கியதாக டமாரா அடித்து விளம்பர படுத்தினாலும், கொரானா நோய் காலங்களில் மனித நேயம் கொண்டு உணவு, தங்கும் இடம், இடம் பெயர்ந்த தொழிலாளர் சொந்த ஊர் செல்ல வாகன வசதி செய்த ‘சோனு சூடு’வினையும் விட்டு வைக்கவில்லை ரெய்டு  என்று.

3) அதேபோன்று மனித உரிமை ஆர்வலர் ‘ஹார்ஸ் மந்திர்’ நிறுவனத்தினையும் வருமான வரி ரெய்டு விட்டு வைக்கவில்லை.

4) கொரானா காலத்தில் பிரதமர் சேம நிதி எவ்வளவு வந்தது, அது யார் யாருக்கு கொடுக்கப் பட்டது என்ற தகவலையும் தரவில்லை என்றும், கொரானா காலங்களில் இறந்த கணக்கில் வராத ஆயிரக்கணக்கான பிணங்களை புனிதமான கங்கை ஆற்றில் அனாதையாக மிதக்கவிட்டுவிட்டனர் என்று செய்திகளை வெளியிட்ட 'July Dainik Baskar Group' மற்றும் 'நியூஸ் கிளிக், மற்றும் 'News Laundra' அலுவலகங்களிலும் வருமான வரி ரெய்டு நடத்தப் பட்டது.

5) புல்டோசர் பாபா என்ற புனைப்பெயர் பெற்ற மாநிலமான உத்தர பிரதேசத்தில்  ஒரு புது சட்டம் 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்துள்ளனர். 'Prohibition of unlawful religious conversion ordinances'. அதன் படி தண்டனை 10 வருடம் கடுங்காவல் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் உண்மையான மனமாற்றத்தோடு மதம் மாறினாலும், மதம் மாறி திருமணம் செய்தாலும், வழக்குத் தொடர்ந்து தண்டனை கொடுக்க முடியும். இந்த சட்டம் வந்ததிலிருந்து 79 முஸ்லிம்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன். நமது நாடு சட்டங்களை எல்லாம் எப்படி தங்கள் இஷ்டப் படி தவறாக பயன் படுத்துகிறார்கள் என்று.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, 'Human Rights Watch' என்ற அமைப்பு தனது ஆண்டு அறிக்கையில், 'பிஜேபி' ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுதந்திரமான அமைப்புகளான போலிஸ், நீதிமன்றம், ஊடகம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தி வலதுசாரி அமைப்புகளுக்கு ஊக்கப் படுத்தி, சிறுபான்மையினரை பயமுறுத்தி, நீதிமன்றங்களில் வழக்குக்குமேல் வழக்குகள் போட்டு, மத அமைப்புகளில் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப் பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக 23.2.2021ல் டெல்லியில் நடந்த வன்முறைகளுக்கு 40 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதையும், அந்த வன்முறைக்கு காவல் துறை மற்ற துறைகள் உள்பட துணை போனதையும், சுட்டிக் காட்டியுள்ளது. முஸ்லிம்கள் மட்டுமல்ல விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் , பஞ்சாபில் 1980ல் போராடிய 'காலிஸ்தான்' தீவிரவாத அமைப்பினைச் சார்ந்தவர்கள் விவசாயிகள் என்று அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்  பட்டதாக கூறியுள்ளது' இந்திய ஜனநாயக அமைப்புகளுக்கு பெரும் கவலை அளிக்கத் தானே செய்யும்.

காலம் ஒரு நாள் கனியும், அந்த காலம் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூட கனியாதா என்று மக்கள் நினைப்பதும், இனியும் UAPA, ED, IT NIA  அமைப்புகள் கொண்டு மக்களின் உண்மையான எதிர்ப்பு குரலை அடக்க முடியுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டுமல்லவா?

 

 

 

 

Friday, 22 July 2022

மக்கள் எழுச்சியில் உருண்டோடிய மகுடங்கள்!

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

பக்கத்து தீவு நாடான இலங்கையில் இந்த வருடம்  ஆட்சி பீடத்தினை அலங்கரிப்பவர்களால் நிம்மதி இழந்து  11.7.2022 ஜனாதிபதி நாட்டினை விட்டு ஓடியதும் அதனை தொடர்ந்து அங்கு நடந்த கொந்தளிப்புகளையும், பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் எலெக்ட்ரானிக் மீடியாவில் பார்த்திருப்பீர்கள். இந்த கொந்தளிப்பு ஏற்பட காரணங்கள் என்ன, இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு நடக்கவில்லையா என்ற கேள்விகளுக்கு விடை சொல்லி விளக்கலாம் என்று இந்த கட்டுரையினை வடிவமைத்துள்ளேன்.

பிரான்ஸ் நாட்டின் ரொட்டிப் புரட்சி :

ஐரோப்பாவில் முக்கிய நாடான பிரான்சில் 16ம் லூயிஸ் என்ற மன்னர் ஆட்சி செய்தார். அவர் ஆட்சி காலத்தில் உணவு பற்றாக்குறை தலை விரித்தாடியது. மக்கள் அன்றாட காலை உணவிற்கு தேவையான ரொட்டியும் கிடைப்பது அரிதானது. மக்கள் ரோட்டில் இறங்கி மன்னரை எதிர்த்து போராட ஆரம்பித்தனர். 1789ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ந்தேதி போராட்டம் தீவிரமானது. போராடியவர்களை ‘பாசில்’ என்ற சிறையில் அடைத்தனர். அதனை அறிந்த மக்கள் பாசில் சிறையினை தகர்த்து அடைக்கப் பட்டவர்களை வெளிக்கொணர்ந்தனர். இதனை எதிர்பார்க்காத மன்னர் லூயிஸ் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்ப நினைத்த போது சிறைப்பிடிக்கப் பட்டனர். இறுதியாக 1793ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ந்தேதி மக்கள் தூக்குமேடையில் ஏற்றினர்.

ரஸ்யாவின் மகா அக்டோபர் புரட்சி: பிரான்சினைப் போலவே ரஸ்யாவில் Tzarist ஆட்சி நடந்தது. ஆட்சியாளர்களின் தொழிலாளர் அடக்குமுறையினை எதிர்த்து Bolshevik Revolution என்ற தொழிலாளர் புரட்சி அதன் தலைவர் விளாடிமிர் புடின் தலைமையில் 1917லிருந்து 1923 வரை நடந்தது. அதன் விளைவு Tzarist மன்னர் ஆட்சி கவிழ்ந்து Bolzhevik ஆட்சி அரியணையில் ஏறியது. அதிலிருந்து இது வரை ரஸியா வல்லரசு நாடாக திகழ்கிறது.

ஆப்கான் புரட்சி: ஆப்கானில் மன்னராக இருந்த ஷா அவர்கள் ஆட்சிக்காலத்தில் மக்கள் பஞ்சமும் பட்டினியாக இருந்தனர். ஆனால் அவர் மட்டும் ஆடம்பரமாக வாழ்ந்தார். ஆகவே மக்கள் வெகுண்டு எழுந்தனர் மன்னருக்கெதிராக. இறுதியாக 1973ம் ஆண்டு ஜூலை மாதம் 17ந்தேதி மன்னருடைய ஆட்சிக்கு விடை கொடுத்தனர். அதன் பின்பு 1986 முதல் 1992 வரை டாக்டர் நஜிபுல்லா ஜனாதிபதியாக இருந்தார். அவர் ரசியாவின் கைகூலியாகவே இருந்தார். மலைப் பிரதேசமான ஆப்கானில் பல்வேறு .பழங்குடியினரின் போராட்டக் குழுவினர் களத்தில் இறங்கி போராடி ரசியாவின் படையினரை விரட்டியடித்தனர். அதன் பின்னர் அவருடைய கைக்கூலியாக ஜனாதிபதி நஜிபுல்லாவினை ஊர் முச்சந்தியில் நிறுத்தி தூக்கிலிட்டனர் என்பது வரலாறு

எகிப்தின் மக்கள் எழுச்சி: எகிப்தின் ஜனாதிபதி அன்வர் சாதத் ராணுவ அணிவகுப்பு மரியாதை மைதானத்தில் சுட்டு வீழ்த்தப் பட்டபின்னர் அரியணையில் 1981ம் ஆண்டு அமர்ந்தவர் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆட்சியினை சுவைத்த பூனைக்கு ஆசை விடுமா. தன்னுடைய இளைய மகனை 2011ம் வாரிசாக அறிவித்தபோது மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்ததும், முபாரக் அதனை ஒடுக்க ராணுவத்தினை அனுப்பினார். அதன் விளைவு ராணுவமும் மக்கள் போராட்டத்தினை ஆதரித்ததால் 2011ம் ஆண்டு முபாரக் முடி துறந்து சிறைக் கைதியானார். அதன் பிறகு மோர்சி என்பவர் பதவியேற்றார். அவர் ஷியா மக்கள் ஆதரவு கொள்கை உள்ளவராகவும், அமெரிக்கா கைக்கூலி என்றும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார். அதன் பின்பு முன்னாள் ராணுவ தளபதி அடல் பட்ட சிசி என்பவர் 2014லிருந்து ஆட்சி செய்கிறார்.

ஜாஸ்மின் புரட்சி: டூனிசியா நாட்டில் ஜனாதிபதி ஜெயினுலாபுதீனு 2011ம் ஆண்டில் ஆட்சி செய்தார். அவர் ஆட்சியில் வேலையின்மை, உணவு பற்றாக்குறை, விலைவாசி ஏற்றம், ஊழல், அரசின் வெளிப்படைத் தன்மையில்லாமல் எதிர்கட்சினரின் குரல்வளையை நெறிக்கும் போக்கால் ஜனவரி மாதம் போராட்டம் ஆரம்பித்தது. எந்த வேலையும் கிடைக்காததால் ‘பௌசி’ என்ற  இளைஞர் ரோட்டின் ஓரத்தில் பழ வியாபாரம் கடைத் தெருவில் வைத்திருந்தார். அப்போது ரோட்டில் ரோந்து வந்த போலீசார் அவரை அடித்ததோடு மட்டுமல்லாமல், அவர் பழவண்டியினையும் தள்ளிவிட்டனர். அதுபோன்ற செயலை நம்முடைய நகரங்களில் கூட காணலாம். அதனால் அவமானப் பட்ட அவர் தீக்குளித்து உயிரை விட்டார். ஏற்கனவே பல்வேறு காரணங்களால் கொந்தளித்த மக்களின் கோபத்தில் எரிகின்ற நெருப்பில் எண்ணெயினை ஊற்றுவது போல இருந்தது அந்த சம்பவம். ஆகவே ஜனாதிபதி ஜெயினுலாபுதீனுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து அதனை 'Tunisia National Dialogue Quartet' என்ற அமைப்பு ஒருங்கினைத்தது. அதிபர் ஜெயினுலாபுதீன் நாட்டினைவிட்டு ஓடி சௌதி அராபியாவில் அடைக்கலமடைந்தார். TNDQ அமைப்பிற்கு 2015ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. டூனிசியாவின் ஜெஸ்மின் புரட்சி பிற்காலத்தில் அரேபியாவில் வசந்தம் Arab Spring என்றும் அழைக்கப் பட்டது.

இப்படிப்பட்ட மக்கள் போராட்டம் அரசுக்கெதிராக பல இடங்களில் நடந்ததினை அறிந்திருப்பீர்கள். 2019ம் ஆண்டு லெபனான் நாட்டின் மக்கள் போராட்டத்தால் பிரதமர் ‘சாத் ஹரிரி’ பதவி விலகினார். பொலிவியா நாட்டின் ஜனாதிபதி ‘எல்லோ மோரா மால்’ மூன்று முறை ஜனாதிபதியாக இருந்துவிட்டு நான்காவது முறை தேர்தலில் நிற்கும்போது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர். ஆகவே அவர் உயிருக்குப் பயந்து நாட்டினை விட்டு துண்டைக் காணோம், துணியைக்காணோம் என்று ஓடிவிட்டார். சிலி நாட்டில் ‘சப்வே’வினை மக்கள் உபயோகிற்பதிற்கு வெறும் நாலு சென்ட் பணம் என்றதும், தினந்தோரும் அதனை உபயோகிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தது உங்களுக்குத் தெரியும். இப்படிப் பட்ட போராட்டங்கள் மற்ற நாடுகளுக்கு சொல்லும் பாடமாக அமையும்.

நீங்கள் கேட்கலாம் இதுபோன்ற மக்கள் போராட்டம் இந்தியாவில் நடக்கவில்லையா என்று. 1973ம் ஆண்டு குஜராத்தில் ‘ஓஸா’ முதல்வர் ஆட்சி நடை பெற்றது. 1974ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி, விலைவாசி ஏற்றம், மற்றும் நிர்வாக ஊழலில் குஜராத் மூழ்கியதால் முதல்வர் ஓஸாவினை மாற்றி ‘சிமன்பாய் படேல்’ அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால்  நியமிக்கப் பட்டார். 10.1.1974ம் ஆண்டு மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டு நிர்வாகமே ஸ்தம்பித்தது. போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் கைகலப்பு ஏற்பட்டு கலவரமாகி, ஊரடங்கு அமல் செய்யப்பட்டு, ராணுவம் வரவழைக்கப் பட்டது. முதல்வர் சிம்மன் பாய் ராஜினாமா செயதார். குஜராத்தில் ஏற்பட்ட போராட்டம், பிஹாருக்கும் பரவி அதனை ‘ஜெயப் பிரகாஷ் நாராயணன்’ தலைமையேற்று நாடெங்கும் நடத்தினார். இந்திரா காந்தி அரசு கவிழ்ந்து ஜனதா கட்சியின் பிரதமராக ‘மெராஜி தேசாய்’ பதவியேற்றார்.

இலங்கையில் இன்றைய போராட்டத்தின் பின்னெனி பார்ப்போமோயானால் இலங்கை வட கிழக்கு யாழ்ப்பாண மாகாணத்தில் விடுதலைப்புலிகள் ஒன்று பட்டு போராடும்போது அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் யார் பெரியவர் என்ற போராட்டத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னை ஒரு சர்வாதிகாரராக நினைத்துக் கொண்டு சகோதர இயக்க போராளி தலைவர்களான ஸ்ரீ சபா ரத்தினம், பத்மநாபா, மாத்தையா போன்றவர்களை ஒழித்துக் கட்டியதும், தனக்கு உறுதுணையாக இருந்த கருணாகரனை ஒழிக்க நினைத்த தருணத்தில் அவர் சுதாரித்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் தனி ராஜ்யமே நடத்தினார். அதேபோன்று டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார். தமிழர் தலைவர்களான அமிர்தலிங்கம், கதிர்காமர் போன்றவர்களை கொன்றது மூலம் ஈழ தமிழர் துணையையும் இழந்தார். .இந்தியா இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட 16 பேர்களை ஆள் அனுப்பி 21.5.1991 கொலை செய்தார். ஆகவே தமிழர் மற்றும் இந்தியர் துணையினை இழந்தார். அவர் ‘தேடப்படும் குற்றவாளி’ என்று இந்தியாவும் அறிவித்தது. இலங்கை முஸ்லிம்கள் அதிகாலை ‘காத்தான்குடி’ பள்ளிவாசலில்   பாஜ்ர் தொழுகை நடத்திக் கொண்டபோது குண்டு மாறி பொழிந்து 145 முஸ்லிம் சிறியவர் முதல் பெரியவர் வரை கொன்றதால் இலங்கை முஸ்லிம்கள் உறுதுணையும் இழந்தார். அவர் ஒரு பேட்டியில் நிருபருக்கு பதில் அளிக்கும்போது, 'ஈழ அரசு’ அமைத்தால் எந்தவிதமான ஆட்சியினை தருவீர்கள் என்று கேட்டபோது, தான் சர்வாதிகார ஆட்சி நடத்துவேன்' என்று அப்பட்டமாக கூறினார். இலங்கை பிரதமர் பிரேமதாசாவினையே வெடிகுண்டு வைத்து கொலை செய்தார். ஆகவே இலங்கை மக்கள் மற்றும் புத்தமததினர் ஒரு முடிவினை கொண்டு இருந்தனர்.

 

2009 ம் ஆண்டு விடுதலை புலிகள் ஒழிப்பிற்கு பின்னர் மஹிந்திரா ராஜபக்ஸா கை ஓங்கியது. 2015வரை அவர் ஆட்சி காலத்தில் சர்வாதிகார நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். தமிழ் ஈழ யுத்தத்தின் அத்துமீறலுக்கு எதிரான ஐநா சபையின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். அவருடைய ஆட்சியில் இன பாகுபாடு அதிகமானது. ஊழல் தலைவிரித்தாடியது. தவறான பொருளாதார நடவடிக்கைகைகள், சீர் கெட்ட நிர்வாகம் நடத்த ஆரம்பித்தார். ஆகவே 2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் தோக்கடிக்கப் பட்டார். விடுவார்களா மிகவும் பலம் பொருந்திய ராஜபக்ஸா குடும்பம். 2019ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 2009ல் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும்போது ராணுவ மந்திரியான மஹிந்திராவின் தம்பி கோத்தபாயா ராஜபக்ஸா ஜனாதிபதியாகவும் மஹிந்திரா ராஜபக்ஸா பிரதமராகவும் பதவி ஏற்றனர். அது மட்டுமா மஹிந்திராவின் இன்னொரு தம்பி பாசில் ராஜபக்ஸா பொருளாதார மந்திரி, ராஜபக்ஸா மகன் நமல் ராஜபக்ஸா இளைஞர், விளையாட்டு, நீர்ப்பாசன மந்திரியானார். நமல் ராஜபக்ஸா மகன் சசீந்திரா விவசாயம் மற்றும் உணவுத்துறை மந்திரி. ஆக மொத்த ராஜபக்ஸா குடும்ப ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் தங்களுக்குள்ளது என்று எண்ண ஆரம்பித்தனர்.

தவறான பொருளாதார கொள்கையால் ராஜபக்ஸா குடும்பத்தினrரால் பட்ஜெட் பற்றாக்குறை அதிகமாகி, வெளிநாட்டு கடன் சுமை கழுத்தை நெரித்தது. வெளிநாட்டின் கடன்களுக்குக் கூட வட்டி கட்டமுடியாத நிலை ஏற்பட்டது. ஆகவே எந்த நாடும் இந்தியாவினைத் தவிர கடன் கொடுக்க முன் வரவில்லை. ருசியா-உக்ரைன் போரால் பெட்ரோல், சமையல் ஏரி வாயு, உணவுப் பொருள் வரமுடியா நிலை ஏற்பட்டது. விவசாய உற்பத்தியும் இல்லை. சுற்றுலா சுருங்கி அந்த வருமானமும் இல்லை. விலைவாசி ஏற்றம் மக்கள் உணவுக்கு ஏங்கி தவித்தனர். வேலையில்லா திண்டாட்டமும் கூட வந்தது. ஆகவே மக்கள் குரல் வலையினை நெறிக்கும் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு மக்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்து அதன் பின் அது மஹிந்திரா ராஜ பாக்ஸவிற்கு எதிராக திரும்பியது. அவர் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர்கள் மற்றும் மகன்கள் ராஜினாமா செய்தனர். அதுமட்டுமல்லாமல் நாட்டினை விட்டும் ஓட எத்தனித்தும்  முடியவில்லை. அதன் பிறகு மக்கள் கோபம் ஜனாதிபதி கோத்தபய்யாவிற்கு எதிராக திரும்பி அவருடைய மாளிகைக்கு படையெடுத்து ஆக்ரமிப்பு செய்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். மாளிகையிலிருந்து சுரங்கம் வழியாக 11.7.2022 இரவு தப்பித்து மாலத் தீவிற்குப் பறந்து அங்கு அடைக்கலம் அடைய முடியாமல் சிங்கப்பூரில் தாற்காலியமாக உள்ளார். இவையெல்லாம் பார்க்கும்  போது மக்களை வெகுகாலம் ஏமாற்ற முடியாது, அல்லது ஆட்சியாளர் அடக்கி ஆள முடியாது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்தியாவில் வேலையில்லாதோர் 2014ம் ஆண்டு 5.6 சதவீதமாகும். அது படிப்படியாக உயர்ந்து 8.10 சாதமாக இன்று . ஒவ்வொரு வருடமும் வேலை தேடி அலையும் 35 வயதிற்குட்பட்டோர் 65 சதவீதமாம். அது கிட்டதட்ட ஒரு கோடியே 20 லட்சம் என்று பி.பி.சி. பொருளாதார அறிக்கை சொல்கிறது. 2017ம் ஆண்டு ரூ 1000/, ரூ 500/ செல்லாது என்று அறிவித்தபின்னர் பல தொழிற்சாலைகள் மூடு விழா நடத்திவிட்டன. அதனைத் தொடர்ந்து 2019முதல் கொரானா பாதிப்பால் பலர் பாதிக்கப் பட்டனர். GST (Goods service entry) புதிய திட்டம் அமல் படுத்திய பின்னர் வியாபாரங்கள் பாதிக்கப் பட்டது அனைவருக்கும் தெரியும். அது மட்டுமா பாக்கெட்டில் அடைக்கப் பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத GST என்று அறிவித்ததின் மூலம் ஆவின் பால், தயிர் உள்பட அனைத்து விதமான உணவுப் பொருள்களின் விலை உயர்ந்து மக்கள் அவதிப் படுகின்றனர். இன்றைய காலக் கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பு எரிய வேண்மென்றால் கேஸ் இருக்காமல் இல்லை. அந்த எரிவாயுக்கும் ருபாய் 1015லிருந்து ரூ 1065/ அதிகப் படுத்தியது மூலம் ஒவ்வொரு குடும்பத்தலைவிகளுக்கும் பெரிய தலையில் விழுந்த இடியாக கருதுகின்றனர். இலங்கை பரிதாபமான நிலை மற்ற நாடுகளுக்கு விடுக்கப் படும் ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக் கொண்டு அரசுகள் நியாயம், நேர்மை, ஊழல் அற்ற ஆட்சி, குடும்ப ஆட்சி ஒழித்து ஜனநாயக வழிமுறையில், நீதியான ஆட்சி தந்து மக்களின் பசி, பட்டினி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குதல், உணவுப் பொருட்கள் உற்பத்தியினை பெருக்குதல், இன, மத,மொழி, பகுதி போன்ற வேற்றுமையினை வேரறுத்து, மக்கள் விரும்பும் , மகாத்மா காந்தி குறிப்பிட்ட  கலீபா உமர்   நல்லாட்சி தருவது காலத்தின் கட்டாயமல்லவா சகோதர, சகோதரிகளே!

 

 

Sunday, 26 June 2022

பற்றி எரிகிறதா அக்னிபாத் திட்டம்?

 

                 

               டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

இந்திய முப்படைகளில் குறிகிய கால ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்துவது தான் அக்கினிபாத் திட்டமாம். அரசு அந்தத் திட்டத்தின் அடிப்படையே ராணுவ வீரர்களின் ஊதியம், ஓய்வூதியம் மற்ற செலவுகளை குறைக்கவே இந்த திட்டம் என்று சொல்கிறது. ஆனால் எதிர்ப்பாளர்கள் சொல்லும் காரணம் ஒரு தலைமுறையினர் உயர் பதவிக்கு செல்ல தடை செய்யும் திட்டமே இது, அதுவும் உயர் ஜாதியினர் தவிர மற்ற சமூக அமைப்புனர் ராணுவத்தில் நிரந்தர பணியாற்ற முடியாமால் செய்வதே இந்த திட்டம் என்கின்றனர். ஆகவே அக்கினிபாத் திட்டத்தின் பாதக, சாதக நிலையிகளை கீழே காணலாம்.

            ராணுவத்தில் நிரந்தர சேவை, குறுகிய கால சேவை என்ற 2 பிரிவுகளில் ஆட்களை தேர்வு செய்கின்றனர். குறுகிய கால சேவையில் 10 வருடம் முதல் 14 வருடங்கள் வரை பணியாற்றலாம். இவர்கள் அனைவருக்கும் ஓய்விற்குப் பின்னர் ஓய்யூதியம், ஓய்விற்குப் பின்னர் பென்ஷன் சலுகைகள் உண்டு. நடப்பு நிதியாண்டில்(2022-23)  ராணுவத்திற்கான செலவிற்காக ரூ 5,25,166 லட்சம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. அதில் ஓய்யூதியத்திற்காக  1,19, 696 லட்சம் கோடியும் ராணுவ வீரர்களின் ஊதியம் மற்றும் பராமரிப்பு செலவிற்கு ரூ 2,33,000 லட்சம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள தொகையினைக் கொண்டே ராணுவ தளவாடங்கள் மற்றும் பிற செயல்களுக்கு செலவழிக்கப் படுகிறது. சர்வதேச அளவிலும், அண்டை நாடுகளின் அச்சுறுத்துகளையும் சமாளிப்பதிற்காக இந்திய ராணுவத்தினை பலப் படுத்த தளவாடங்கள் தேவைப் படுவதால் பெரும்பகுதியினை அதற்கு செலவிட வேண்டும் என்ற நோக்கத்திலும், ஓய்யூதிய செலவுகளை நீக்குவதிற்காகவே அக்கினிபாத் திட்டமாம்.

            அக்கினிபாத் என்றால் 'turn of duty' என்ற புதிய வேலை தரும் திட்டமாம். இந்த திட்டத்தில் ஆண், பெண் இரு பாலாரும் 17-23 வயதுடைவர்களை வேளையில் சேர்ப்பார்களாம். அப்படி வேளையில் சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் 4 ஆண்டுகள் நியமிக்கப் படுவார்களாம். நடப்பு ஆண்டில் 46,000 பேர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். பயிற்சிக்குப் பின்னர் 2023 ஆம் ஆண்டு ஜூலையில் அவர்கள் பணியமர்த்தப் படுவார்கள். பணியில் சேர்ந்த முதல் மாதம் ரூ 30,000/ ஊதியம், இரண்டாம் ஆண்டு ரூ 33,000/ ஊதியம், மூன்றாம் ஆண்டு ரூ 36,000/ ஊதியம், நான்காம் ஆண்டு ரூ 40,000/ ஊதியமும் உண்டு. அப்படி கொடுக்கப் பட்ட ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்பு தொகையாக பிடிக்கப் படுமாம், மீதியுள்ள 70 சதவீதம் மட்டும் ஊதியமாக வழங்கப் படும். 

            ஒப்பந்தப் படி 4 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் அந்த வீரர்கள் நிரந்தர பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமாம். அப்படி விண்ணப் பித்தவர்களில் 25 சதவீத வீரர்களுக்கு மட்டும் நிரந்தர பணியில் அவர்கள் திறமைக்கேட்ப நியமிக்கப் படுவார்களாம். மற்ற 75 சதவீத ராணுவ வீரர்களுக்கு அவர்களுக்கு சேரவேண்டிய சேவா நிதி வழங்கப் பட்டு ராணுவத்திற்குப் ‘போன மச்சான் பெட்டி படுக்கையோடு திரும்பி வந்தான் பூ மணக்க’ என்று ஊர் திரும்புவார்களாம். ஓய்யூதிய அடைப்படையில் அவர்கள் வேலைக்கு அமர்த்தப் படுவதால் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு ஓய்யூதியம் இல்லை. பணிக்காலத்தில் மட்டும் பங்களிப்பில்லாத ரூ 48 லட்சத்தில் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். அதேபோன்று பணிகாலத்தில் காயமுற்று நிரந்தர ஊனமுற்றால் ரூ 44 லட்சமும், 75 சதவீத ஊனமுற்றாள் ரூ 25 லட்சமும், 50 சதவீத ஊனமுற்றால் ரூ 15 லட்சமும் கிடைக்கும். ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் எந்த சலுகையுமில்லை.

            நீங்கள் கேட்கலாம் இதுபோன்ற ராணுவ குறுகிய கால சேவை எப்போதுமே இருந்ததில்லையா என்று. 1962ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் OTA என்ற குறுகிய ராணுவ சேவை மையங்களை சென்னை பல்லாவரத்தில், பூனாவிலும் ஆரம்பிக்கப் பட்டது. சென்னை மையத்தினை அமைச்சர் சி சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். ஆனால் 1964ல் பூனா மையம் மூடப் பட்டு பல்லாவரம் OTA மட்டும் இன்றும் இயங்கிக் கொண்டுள்ளது. அவர்களுக்கு 48 வாரங்கள் பயிற்சியளிக்கப் படும். அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் பயிற்சி முடிந்த பின்பு ராணுவத்தில் சேராமல் வந்து விட்டாலும் அவர்களுக்கு மாதம் ரூ 30,000/ பென்ஷனாக கிடைக்கும்.

ராணுவத்தில் பென்ஷன் கிடைக்கவேண்டுமென்றால் குறைந்த பட்சம் 15 வருடங்கள் பணியாற்றிருக்க வேண்டும்.

           

சிவில் போலீசிற்கு உதவுவதிற்காக Home Guard(ஊர் காவல் படை) 1946ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1962ம் ஆண்டு சீன யுத்தத்திற்குப் பின்பு யுத்தத்தின் போது உள் நாட்டு பாதுகாப்பு பணியில் அவர்கள்  நியமிக்கப் பட்டார்கள்.

அவ்வாறு அவசரகால கால ராணுவ பணியாற்றி பின்னர் விலகி மத்திய ஐ.ஏ.எஸ்/ஐ.பீ.எஸ். மாநில சர்விஸ் கமிஷன் மூலம் வருவாய், காவல் துறையில் Lateral entry அடிப்படையில் வேலையில் சேர்ந்தார்கள். தமிழகத்தில் கூட இன்பசாகரன், மற்றும் கேப்டன் தங்கதுரை என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், முன்னாள் டிஜி.பி ஆர்.ஆர்.ராஜகோபாலனும், கேப்டன் இக்பாலும், மேஜர் ஹபிபுல்லாஹ் போன்றவர்களும் அப்படி தேர்வாளர்கள் தான்.

எல்லை ஓர மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மேகாலயா, திருப்பூரா, மேற்கு வங்கம் ஆகிய வற்றிற்கு ராணுவத்திற்கு உதவுவதிற்காக 15 படைகள் நியமனம் செய்யப் பட்டனர். அவர்களுக்கு நிறுவன மற்றும் ஆயுத பயிற்சி செலவிற்காக 25 சதவீதம் மாநில அரசுகளும், 75 சதவீதம் மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டன. அசாம் மாநிலம் மட்டும் 50-50 பங்களிப்புகள் மாநில அரசும், மத்திய  அரசும் ஏற்றுக் கொண்டன.

            உதாரணத்திற்கு 25.6.2022 அன்று தமிழக காவல் துறையில் S.I பணியில் காலியாக உள்ள 444 பதவிகளுக்கு 2.2 லட்சம் பேர்கள் விண்ணப்பித்தார்கள், சமீபத்தில் தமிழக தலைமை செயலகத்தில் கட நிலை ஊழியர் வேலைக்கு பல பட்டதாரிகள், பொறியாளர்கள் விண்ணப்பித்தார்கள் என்று அறியும் போது வேலையில்லா திண்டாட்டம் எவ்வளவு தலைவிரித்தாடுகிறது என்று தெரியவில்லையா. இந்தியாவில் வேலையில்லாதோர் 2014ம் ஆண்டு 5.6 சதவீதமாகும். அது படிப்படியாக உயர்ந்து 8.10 சாதமாக இன்று . ஒவ்வொரு வருடமும் வேலை தேடி அலையும் 35 வயதிற்குட்பட்டோர் 65 சதவீதமாம். அது கிட்டதட்ட ஒரு கோடியே 20 லட்சம் என்று பி.பி.சி. பொருளாதார அறிக்கை சொல்கிறது. 2017ம் ஆண்டு ரூ 1000/, ரூ 500/ செல்லாது என்று அறிவித்தபின்னர் பல தொழிற்சாலைகள் மூடு விழா நடத்திவிட்டன. அதனைத் தொடர்ந்து 2019முதல் கொரானா பாதிப்பால் பலர் பாதிக்கப் பட்டனர். GST (Goods service entry) புதிய திட்டம் அமல் படுத்திய பின்னர் வியாபாரங்கள் பாதிக்கப் பட்டது அனைவருக்கும் தெரியும்.

.

            Ex Service Men Board: இதனை ஹிந்தியில் Kendriy Sainik Board என்றும். இந்த அலுவலகம் முன்னால் ராணுவத்தினர், அவர்கள் குடும்பம், விதவைகள் நல் வாழ்விற்கும் வகை செய்கிறது. அந்த அலுவலகங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டத்திலும் இயங்குகின்றது. அவைகள் முன்னால் ராணுவத்தினர் பொது நிறுவனங்களில்  மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை ஆராய்ந்து அவர்களை பணியமர்த்த உதவி செய்கின்றது. மற்றும் அவர்கள் சுய வேலை தொடங்குவதற்கும் உதவி செய்கின்றது. ராணிவத்தினர் பயன் பாட்டிற்கு என்று ஸ்டோர்ஸ் உள்ளன, அதனில் ராணுவத்தினர் மற்றும் முன்னால் ராணுவத்தினருக்கு குறைந்த விலையில் பொருட்கள் கொடுக்கப் படுகின்றன. ஆனால் அது போன்ற சலுகைகள் அக்னி வீரர்கள் பெறமுடியாது என்பதும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் குற்றச் சாட்டாகும். அந்த குற்றச் சாட்டிற்கு வலிமை கூட்டுவதுபோல சில பி.ஜே.பி நேட்டாக்கள் கூறும் கருத்துக்கள் எரிகிற நெருப்பில் எண்ணெயினை ஊற்றுவது போல உள்ளது. அக்னிவீரர்கள் பயிற்சியின் போது மற்ற வேலைகளுடன் முடி வெட்டுதல், துணிமணிகளுக்கு இஸ்திரி போடுதல்,சமையல் செய்தல் போன்றவைகளும் போதிக்கப் படும் என்று ஒருவர் கூறுகிறார். இது குலத்தொழில் தொடர்பதிற்கான செயல் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். மற்றுமொருவரான விஜய் வர்ஜியா கூறும்போது, 'அவ்வாறு வேலையினை விட்டு வருகின்றவர்களுக்கு எங்கள் கட்சியில் வேலை கொடுக்கப் படும்' என்றும் கூறுகிறார். 

            உண்மையிலேயே ராணுவம், காவல் துறைகளில் முடி வெட்டுவோர், துணி துவைப்போர் மற்றும் சமையல் செய்வோருக்கு தனியான வேலை வாய்ப்புத் தேர்வு நடத்தப்படும். இதுபோன்ற வேலைகளுக்காக காவல் துறையிலும் தனியாக ஆட்கள் பணியமர்த்தப் படுகிறார்கள் அனால் சில நேட்டாக்கள் சொல்வது போல அவர்களை தரம் இறக்கி கூறும் போது கொதிப்பதாக சொல்கிறார்கள். இதுகாறும் கொரானாவில் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காத 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் போராட முற்பட்டுள்ளனர். அந்த போராட்டம் பிகாரில் ஆரம்பித்து, உ.பி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அமைதியாக நடை பெற்று பின்பு வன்முறையிக்கு வழிவகுத்துவிட்டது. ஜகானாபாத் எம்.எல் ஏ குமார் யாதவ், 'இதுகாறும் வேலைவாய்ப்பிற்காக ஏங்கி இருந்த இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது' என்று கூறியுள்ளார். பி.ஜே.பி எம்.பி.யும், இந்திரா காந்தியின் பேரனுமான வருண் காந்தி, 'பிரதமர் அவர்களே! நீங்கள் 2014ம் பதவியேற்ற போது 2 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம் என்றீர்கள் ஆனால் இப்போது அக்னிபாத் மூலம் 40000 பேர்களுக்கு வேலை என்கிறீர்கள் அதுவும் தற்காலிக வேலை என்கிறீர்கள், அப்படி என்றால் மீதியுள்ள இளைஞர்களுக்கு எப்போது வேலை கொடுக்கப் போகிறீர்கள்' என்ற கேள்வியினை காட்டமாக எழுப்பியுள்ளார். அக்னிபாத் திட்டத்தினை அறிவித்துவிட்டு இன்னொரு குண்டையும் போட்டுள்ளனர் என்று போராடக் காரர்கள் சொல்கின்றனர். அதுதான், 'No rank, No pension, No direct recruitment for army' இரண்டு வருசத்திக்கும் என்ற அறிவிப்பும் அவர்களை பயமுறுத்தியுள்ளது. பல காலம் ராணுவ பணிக்காக தங்களை தயார் செய்து வரும் வேலையில்லா இளைஞர்கள் தலையில் விழுந்த பெரிய அடி என்று கதறுகிறார்கள். இந்த அக்னிபாத் திட்டத்தினை பற்றி மேதகு மேகாலயா ஆளுநர் சத்திய பால் மாலிக் கூறும்போது, 'அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுதான் பணி என்றால் அக்னிவீரர்களுக்கு யார் தான் பெண் கொடுப்பார்கள். இது ராணுவ கவுரத்திற்கே எதிரானது. இதனால் ராணுவ கவுரவமும், மதிப்பும் பாதிக்கும்' என்கிறார்.

            ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் தன்னுடைய கட்சி இளைஞர் கொண்டு Saal Sahuty என்ற  படையினை ராணுவத்தில் சேர்த்தார். அதுபோல ஆர்.எஸ்.எஸ். இளைஞர்கள் கம்பு, கட்டத் துப்பாக்கி வைத்து முன்னாள் ராணுவ அதிகாரிகள் கொண்டு பயிற்சி எடுக்கும் இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவது தான் இந்த அக்னிபாத் திட்டம் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. ஆகவே தான் இளைஞர்கள் போராட்டத்தில் குதிர்த்துள்ளார்கள். அக்னிபாத் திட்டம் மூலம் பயிற்சிக்குப் பின்னர் ராணுவத்தில் சேர்பவர்கள் 25 சதவீதம் தான் என்று சொல்லும்போது மற்ற ஆயுத பயிற்சி எடுத்த 75 சத வீத வீரர்கள் வீடுகளுக்கு அனுப்பும்போது அவர்கள் தீவிர வாத வலைகளில் விழுவதற்கு வாய்ப்பு கொடுப்பது போல ஆகாதா என்று அரசு தீர சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை நடுநிலையாளர்கள் சொல்லுவதினையும், கணக்கில் எடுத்துக் கொண்டு அரசு செயலாற்றினால் நலமாக இருக்காதா?

           

Monday, 30 May 2022

மத துவேசம் உச்ச கட்டமா வன்முறை ?

 


( டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )

 

சமீப காலங்களில் மத துவேசத்தால் வன்முறைகள் ஏற்படுகின்றன. மதம் என்ற வார்த்தைக்கு எந்த ஒரு அறிவுபூர்வமான விளக்கமும் இல்லை. அது மேற்கத்திய கலாசாரத்தை ஒட்டிய வார்த்தையாகும். மதம் ஒரு நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது வேத புத்தகங்களை கொண்டதாகவோ, அல்லது வழிபாட்டு தளங்களைத் உள்ளடக்கியதாகவோ அமைந்துள்ளது. வன்முறை என்பது வேற்று சமூகத்தினர் உடலுக்கும் பொருளுக்கும் உலை வைப்பதாகும். எந்த ஒரு மதமும் வன்முறையினை அடுத்த மதத்தினரிடம் காட்டும்படி சொல்வதில்லை. ஆனால் உலகளவில் மத துவேஷ வன்முறைகள் நடந்து கொண்டு தான் உள்ளது. மத வன்முறை மத கோட்பாடுகளின் படியும்,  மதங்களை பின் பற்றும் அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகுமென்றால் மிகையில்லை.

            மதமென்ற சொல் பழைய கிருத்துவ ஏற்பாடுகளிலோ(old testament),திருகுரானிலோ, யூத ஹீப்ரு மொழியிலோ சொல்லப் படவில்லை. எப்போது புதிய ஏற்பாடு(Protestant) என்ற வழிபாடு நடந்ததோ மற்றும் எப்போது பிரிட்டிஷ் கும்பனி ஆட்சியின் காலனி ஆதிக்கம் அமல் ஆக்கப் பட்டதோ அதிலிருந்து மதங்கள் என்ற சொல் வேரூன்ற ஆரம்பித்தது. 19ம் நூற்றாண்டில் தான் புத்த மதம், ஹிந்து மதம், டாவோஸியம், கண்பூனிசம் என்ற சொற்கள் வெளி வந்தன.  மதங்களால் ஏற்படும் வன்முறைகள் உடலுக்கு பங்கமும், பொருளுக்கு சேதமும் மாட்டு விளைவிப்பதில்லை, மாறாக தனிப்பட்ட மனிதரின் உரிமைகளை சொல்லாலும், செயலாலும் தாக்கப் படுவதாக சமூக ஆராய்ச்சியாளர்கள்  ரால்ப் டென்னேர் (Raliph Tanner) மற்றும் டெரன்ஸ் பிரேதேய்ம்( Terence Fretheim ) சொல்கிறார்கள்.

            Religious persecution: மதத்தின் பெயரால் திட்டமிட்டு தனிப்பட்டவரையோ, அல்லது ஒரு பகுதியினரையோ, தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாக்குவது, அல்லது ஒரு சமூக அமைப்போ அல்லது அரசு தனது சட்டங்கள் மூலம் அல்லது அதிகார மமதைகள் மூலம் கொடுமைப் படுத்துவது மத துன்புறுத்துதல் ஆகும். உண்மையிலே உலகில் பல நாடுகளில் இது போன்ற மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழ்த்தப் படுகின்றன என்று அமெரிக்க சமூக கல்வியாளர் ஸ்மித் கூறுகின்றார். அவர் கூற்றினை உண்மைக்குவது போல கருப்பு இன அமெரிக்கர்களை திட்டுவது, அடிப்பது, கொடுமைக்கு ஆளாக்குவது, அல்லது அதிகார போதையில் கொலை பாதக செயல்களில் ஈடுபடுவது  போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் உள்ளது என்பதினை தொலைக்காட்சி மூலம் காணலாம்.

            முந்தைய வரலாற்றில் எகிப்து, கிரேக்கம், ரோம் போன்ற நாடுகள் வன்முறையில் ஈடுபட்ட செய்திகள் உள்ளன. அவையெல்லாம் அப்போதைய சட்டப் படி செல்லும் என்று ஆசிரியர் கிள்ளியன் கிளார்க்( Gillian clark) சொல்கிறார். அதேபோன்றே பாரசீக பேரரசு சைரஸ், டாரிஸ் காலங்களிலும் செயல் படுத்தப் பட்டன. பியூ(PEW) என்ற ஆராய்ச்சி மையம் சார்பாக 2017ல் நடத்தப் பட்ட ஆய்வில் முஸ்லிம்கள் துன்பத்திற்கு ஆளாகுவது உலகில் 125 நாடுகளிலும், 105 உலக அரசுகளாலும், 140 நாடுகளில் அரசு சார்ந்த சமூக அமைப்புகளாலும் உள்ளதாக கூறப் படுகிறது.

            Religious cleaning: ஒரு சமூதாயத்தினவரை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து வன்முறையால் இடம் பெயரச் செய்வது பொருளாதார மற்றும் அரசியல் காரணதிற்காக இடம் பெயரச்செய்வது ஆகும். உதாரணத்திற்கு கனடா நாட்டில் கமலோப் என்ற பகுதியின்  வாழும் அந்த நாட்டின் பழமைநாட்டு  மக்களையும் அவர்கள் குழந்தைகளையும் மலையடிவாரத்திற்கு கொண்டு சென்று ஆக்கிரமிப்பு பிரிட்டிஷ் படையினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவமும் 19ம் நூற்றாண்டில் நடந்திருக்கின்றது. அதேபோன்று ருவாண்டா நாட்டில் டுட்சி இனத்தினவரை கொலை செய்து விரட்டி படித்த சம்பவம் 21ம் நூற்றாண்டில் நடந்துள்ளது. அமெரிக்காவின் ராணுவத்தால் 29 டிசம்பர் மாதம் 1890ம் நூற்றாண்டில் டக்கோட்டா பகுதியில் வாழும் மக்களை விரட்டியடித்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்திற்கு 'battle of wounded knee' என்று அழைப்பார்கள். ஒட்டோமான் பேரரசு, பழைய யுகோஸ்லோவியா செர்பியா அரசுகளால் அர்மேனிய முஸ்லிம்களை இடம் பெயரச்செய்தது, அமெரிக்க 2001 செப்டம்பர் மாதம் 11ந்தேதி நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்பு Islamophobia என்ற முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு, அல்லது இஸ்லாத்தினை ஒழித்துக் கட்டுவது என்று கங்கணம் கட்டி ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா கூட்டுப் படை எடுத்த வன்முறை செயல்,  சீன ஜின்ஜியாங் மாநிலத்தில் உஜ்ஜார் இன முஸ்லிம்கள் மேல் காட்டிய அடக்குமுறை, பர்மியா அரசு ரொகிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்திய வன்முறைகள், 2002 ம் ஆண்டு குஜராத்தில் நடத்திய வன்முறை, 2013ல் உத்தர பிரதேசத்தில் முஸாபிர் நகரில் நடத்திய மத சார்ந்த வன்முறைகள், புது டெல்லியில் 2020 ல் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நடத்தப் பட்ட வன்முறைகள் அந்த religious cleansing மதத்தின் அடிப்படையில் ஒரு சமூகத்தினரை அவர்கள் பகுதியிலிருந்து விரட்டி அடிப்பது ஆகும்.

            வழிபாட்டு தளங்கள் இடிக்கப் படுதல்: ஐ.நா சபை அறிக்கையின் படி ஒரு மதத்தின் வழிபாட்டுத் தளங்களை இடிப்பது ஒரு முறையில் வன்முறையாகவும், மனித உரிமையினை மீறியதாகவும் கூறுகின்றது. உதாரணத்திற்கு லிபியாவில் 2011 அக்டொபர் மாதத்திலிருந்து 2012 ஆகஸ்ட் மாதம் வரை சூபி மத வழிபாடு தளங்கள், சூபிமத இமாம் ‘சிடி அப்துல் ஸலாம் அழ அஸ்னார்’ மற்றும் ‘அஃசாபி’ பள்ளிவாசல்களும் இடிக்கப் பட்டத்தினை கூறுகின்றது.அதற்கான காரணத்தினை நியுஜிலாந்து அக்லாண்ட் சமூகவியலாளர் அட்கின்சன் கூறும்போது, 'கல்வி அறிவு அதிமாகுதல், சமூகத்தில் ஏற்றத் தாழ்வு, சமூதாயத்தில் புறக்கணிக்கப் படுதல்' போன்றவைதான் என்று கூறுகின்றார்.

            அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஆய்வில் 20சதவீத அமெரிக்கர்கள் எந்தவொரு மாதாகோவிலிலும் உறுப்பினர்களாக இல்லையாம். ஆனால் 68 சதவீதம் பேர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும், 37 சதவீதம் மத நம்பிக்கை கொண்டவர்களாகவும், மற்றும் உலகினை வழிநடத்தும் ஓர் உந்துப் பொருள் உண்டு என்று நம்புகின்றனர்.

            நமது நாட்டில் 1992 ல் அயோத்யா பள்ளிவாசல் இடிப்பிற்குப் பின்பு 2020ல் டெல்லியில் நடந்த குடியுரிமை போராட்டத்தின்போது இடிக்கப்பட்ட பள்ளி, தர்காக்கள் 500 என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மாநிலம் மங்களூரில் 27.9.2021 உச்சமன்ற உத்தரவின்படி அரசு நிலங்களில் ஆக்கிரமித்துக் கட்டப் பட்ட கோவில்கள் 640 என்றும் அது இதுவரை இடிக்கப் படவில்லையாம். 2014ம் ஆண்டுகளுக்குப் பின்பு ஆர்.எஸ்.எஸ். விழிப்புப் படை நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்வதன் மூலம்  முஸ்லிம்களுக்கு எதிரான வன்மம் தெளிவாகின்றது. உதாரணத்திற்கு டெல்லி கூர்கோன் வெளி மைதானத்தில் வெள்ளி அன்று ஜும்மா தொழுகையினை அங்குள்ள தொழிலார்கள் தொழுவதிற்கும், கர்நாடகா ஈத்கா மைதானத்தில் வெள்ளி ஜும்மா தொழுகை நடத்துவதற்கும், பள்ளிகளில் தொழுகைக்கான அழைப்பினை அந்தப் பகுதி முஸ்லிம்களை ஒளி பெருக்கியில் மூலம் அழைப்பதிற்கும், பெண்கள் தங்கள் அங்கங்கள் வெளி ஆடவரின் கழுகுப் பார்வையிலிருந்து மறைப்பதிற்காக அணியப் படும்  புர்கா, ஹிஜாப் கூடாது என்றும், ஹஜ் பெருநாள் முன்னிட்டு குர்பானி கொடுப்பதற்கும் கூட அந்த வலதுசாரி அமைப்பினர் நீதிமன்றங்களை அணுகி தடை உத்தரவு வாங்கி விடுகின்றனர். அப்படி தடை உத்தரவுகள் கொடுப்பது மனித உரிமைகளை மீராதா என்று நீதி மன்றங்கள் தான் யோசிக்க வேண்டும். நமது நாட்டில் 1992 ல் அயோத்யா பள்ளிவாசல் இடிப்பிற்குப் பின்பு 2020ல் டெல்லியில் நடந்த குடியுரிமை போராட்டத்தின்போது இடிக்கப்பட்ட பள்ளி, தர்காக்கள் 500 என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மாநிலம் மங்களூரில் 27.9.2021 உச்சமன்ற உத்தரவின்படி அரசு நிலங்களில் ஆக்கிரமித்துக் கட்டப் பட்ட கோவில்கள் 640 என்றும் அது இதுவரை இடிக்கப் படவில்லையாம். 2014ம் ஆண்டுகளுக்குப் பின்பு ஆர்.எஸ்.எஸ். விழிப்புப் படை நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்வதன் மூலம்  முஸ்லிம்களுக்கு எதிரான வன்மம் தெளிவாகின்றது. உதாரணத்திற்கு டெல்லி கூர்கோன் வெளி மைதானத்தில் வெள்ளி அன்று ஜும்மா தொழுகையினை அங்குள்ள தொழிலார்கள் தொழுவதிற்கும், கர்நாடகா ஈத்கா மைதானத்தில் வெள்ளி ஜும்மா தொழுகை நடத்துவதற்கும், பள்ளிகளில் தொழுகைக்கான அழைப்பினை அந்தப் பகுதி முஸ்லிம்களை ஒளி பெருக்கியில் மூலம் அழைப்பதிற்கும், பெண்கள் தங்கள் அங்கங்கள் வெளி ஆடவரின் கழுகுப் பார்வையிலிருந்து மறைப்பதிற்காக அணியப் படும்  புர்கா, ஹிஜாப் கூடாது என்றும், ஹஜ் பெருநாள் முன்னிட்டு குர்பானி கொடுப்பதற்கும் கூட அந்த வலதுசாரி அமைப்பினர் நீதிமன்றங்களை அணுகி தடை உத்தரவு வாங்கி விடுகின்றனர். அப்படி தடை உத்தரவுகள் கொடுப்பது மனித உரிமைகளை மீராதா என்று நீதி மன்றங்கள் தான் யோசிக்க வேண்டும்.

            அயோத்யா பாபர் மஸ்ஜித் உச்சமன்ற தீர்ப்பினை சாதகமாக பயன்படுத்தி உ.பி. கியான்வாபி, மதுரா பள்ளி, குதுப் மினார் போன்றவற்றை இடிப்பதற்கு முன்னோட்டமாக நீதிமன்றங்களில் வலது சாரி அமைப்புகள் வழக்குகள் தொடங்கியுள்ளன  என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் சொல்லும் கூற்று மிகவும் வேடிக்கையானது. உ.பி. கியான்வாபி மஸ்ஜிதில் லிங்கம் இருக்கின்றதாம். அவர்கள் சொல்லுவது இதனை  தெரியுமா தோழர்களே? பள்ளிவாசல்களில் உள்ள அகல்களின் நடுவே இருக்கும் பவுண்டைன் என்ற நீரூற்று ஆகும். ஒரு பணக்கார வீட்டின் முன்பு அது போன்ற ஒரு நீரூற்று அழகுக்காக இருக்கும். அதுபோன்றதுதான். கியான்வாபி லிங்கம் என்று கூறுவதும்.  காமாலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் நோய் என்று சொல்லும் பழமொழிபோலதானே இந்த வாதமும் இருக்கின்றது. சில மஸ்ஜிதில் தூண்களில் சிலை வடிவு இருக்கலாம். அதற்குக் காரணம் அப்போதைய மெஜாரிட்டி சிற்பிகள் ஹிந்துக்கள் தான். அவர்கள் வடிவமைத்த கற்தூண்கள் தான் பள்ளிவாசல்களில் இருக்கும் அதற்காக அது கோவிலாகுமா? 800 வருடங்கள் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்தாலும், 80 சதவீத இந்துக்கள் உள்ள நாட்டில் அதுபோன்று கோவில்களை இடித்து பள்ளிவாசல்கள் கட்டமுடியுமா என்று அறிவு சான்றோர் கேள்வி எழுப்பாமல் இல்லை. இருந்தாலும் மத துவேசத்தாலும், அரசியல் மற்றும் பொருளாதார பொறாமையாலும் இது போன்ற செயல்களில் வலது சாரி அமைப்பினர் 2014ம் ஆண்டுக்குப் பின்பு ஈடுபட்டுள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாகின்றது.

            அவர்களின் கூற்றை பொய்யாக்குவதுபோல பத்ம பூஷன் விருது பெற்ற வரலாற்று பேராசிரியர் கூறும்போது, 'அக்காலங்களில் கட்டப் பட்ட கோவில்கள் மற்றும் மசூதிகள் புத்த விக்ரகங்கள் சிற்பங்களும், கற்களும் கிடைக்கின்றன. இதற்காகவா பள்ளிவாசல்கள் இடிக்கப் படவேண்டும். மதுரா கிருஷ்ணன் கோவில் பக்கத்தில் உள்ள ஷாயி ஈத்கா மஸ்ஜித் முகலாயர் காலத்தில் கட்டப் பட்டதுதான். ஆனால் கோவிலை இடித்து முஸ்லிம்கள் கட்டினார்கள் என்றால் எப்படி அந்த கிருஷணன் கோவில் மட்டும் இடிக்கப் படாமல் தப்பியது என்று ஏன் வலது சாரி அமைப்புகள் சிந்திக்கவில்லை என்று கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லைதானே. வலது சாரி அமைப்புகளின் வாதகங்களுக்கு வலிமை சேர்ப்பது போல பாபர் மஸ்ஜித் 1992ல் இடிப்பு வழக்கு வாதங்களைப் பற்றி உச்ச நீதி மன்றம் ஆராயாமல் இரவு முழுவதும் சிந்தித்து மத அடிப்படையில் அயோத்தியில் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தது தான் முன்னோடியாகும்.

அப்படியென்றால் ராஜஸ்தானில் மஹாராஜா ராணா பிரதாப் சிங் சித்தேரி கோட்டையில் கட்டிய பழங்கால மினார் உள்ளது. அதன் கீழ் பகுதியில் தேவதைகளும், மேல் பகுதியில் 'அல்லா, அல்லா' என்று அராபிய எழுத்துப் பொறிக்கப் பட்டுள்ளது. அதற்காக அந்த மினாரை முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாடமுடியுமா?

            கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'உண்மையில் தூங்குபவனை எழுப்பி விடலாம், ஆனால் தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியாது'. வலது சாரி அமைப்பினரின் அறிவு ஜீவிகளுக்கு இவையெல்லாம் தெரியும். இருந்தாலும் நாட்டில் அமைதியின்மையினை வன்முறை மூலம் நிலைநாட்டி, ஹிந்துக்களை ஒன்று திரட்டி மைனாரிட்டிகளை பல வழிகளில் பயமுறுத்தி தங்களுடைய அரசியல் நோக்கங்கள் நிறைவேற்ற வேண்டுமென்பதே அவர்களுடைய தலையாய செயலாகும். ஆகவே மைனாரிட்டி சமூதாயத்தினவரும் தங்கள் உரிமைகளை ஜனநாயக நாட்டில் நிலைநிறுத்திக்கொள்வதே சாலச் சிறந்தது என்றால் மிகையாகுமா? இனி வரும் காலங்களிலாவது பள்ளிகள் கட்டும்போது அதுபோன்ற பிற மத சின்னங்கள் இல்லா கட்டிட பொருட்களை பயன் படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் எந்த வில்லங்கம் இல்லாத இடமாக ஆராய்ந்து பள்ளிகளை கட்டுவது சாலச்சிறந்ததாகுமல்லவா? நீதிமன்றங்களில் தொடுக்கப் படும் வழக்குகளுக்கு வல்லமைவாய்ந்த வழக்கறிஞர்களை சமூதாயம் உருவாக்கி அவை ஒரு குழுவாக இயங்க வேண்டுமல்லவா?

           

           

           

Tuesday, 12 April 2022

காற்றில் பறந்த கீதமா அடிப்படை உரிமை!

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

இந்திய நாடு சுதந்திரத்தினை சுவைத்த பின்பு 20.08.1947 ஆம் தேதி அரசியலமைப்பு சபையினால் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் தலைமையில் முகமது சாதத்துல்லா உள்பட 6 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புக்கு வழி வகுத்தது. அந்த அமைப்பு ஜனநாயகத்தில் அடிப்படை உரிமை என்று அத்தியாயம் 12லிருந்தது 35 விரிவாக சொல்லப் பட்டுள்ளது. முக்கியமாக ஆறு அடிப்படை உரிமைகளாக1) சம உரிமை, 2) சுதந்திரம், 3) சுரண்டலுக்கு எதிரான உரிமை, 4) மதம், 5) கல்வி மற்றும் பண்பாடு, 6) அடிப்படை உரிமை கோரல்  போன்றவையாகும்.

            ஆனால் என்ன நடக்கின்றது இந்திய நாட்டில். முஸ்லிம்கள் தொழுகை நடத்த பள்ளிவாசல் தேவையில்லை என்று அயோத்தியில் மஸ்ஜித் இடிப்பை நியாயப் படுத்தியது நீதி மன்றம். ஹரியானா மாநிலம் குர்கோன் பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்கு கூடும் மைதானத்தில் தொழுகை நடத்தக் கூடாது என்ற ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டு நிறுத்தப் பட்டதும் ஒரு செய்தி. புது டெல்லியில் 'லால் கும்பத்' பஞ்சு ஷீல் என்க்ளேவ்' நில்லி மஸ்ஜித்' ஆகியவற்றில் தொழுகைகள் நிறுத்தப் பட்டத்திற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. மஹாராஷ்டிராவில் அரசியல் ரீதியாக வெல்ல முடியாத ராஜ் தாக்கரே முஸ்லிம்கள் தொழுகைக்கு அழைக்கும் ஆசான் ஒலி பெருக்கிகளை நிறுத்த வேண்டும் அல்லது நாங்கள் தெரு தோறும் அனுமான் பஜனை நடத்த ஒலி பெருக்கிக்கு அனுமதிக்க வேண்டும் என்று முண்டாசு கட்டுகிறார். அவரைத் தொடர்ந்து கர்நாடக பஜ்ரங் தால் மற்றும் ஸ்ரீ ராம் சேனா அமைப்பும் குரல் கொடுத்துள்ளது. முஸ்லிம்கள் தொழுகைக்கு அழைக்கும் பங்கு அதிகமாக 2 நிமிடமாகும். மாறாக அவர்கள் சொல்லும் பஜனை மணிக்கணக்கில் காதைப் பிளக்கும். அவைகளெல்லாம் பார்க்கும்போது நாட்டில் மத சுதந்திரம் பறி போகிறதோ என்று எண்ணத் தோன்றவில்லையா?

            முஸ்லிம் பெண்கள் வயதுக்கு வந்து விட்டால் ஹிஜாப் அணிந்து தங்களது அங்கங்கள் வெளி ஆடவர் கண்ணுக்கு இருக்க ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கலாட்சார பண்பாடு அதனை இந்திய அடிப்படை உரிமையும் அனுமதிக்கின்றது. அதுபோன்ற முக்காடுகளை வட மாநிலத்தில் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கிலும் கடைப் பிடிக்கப் படுவதினை நாம் பார்க்கலாம். ஏன் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி கூட முக்காடு அணிந்திருப்பதினை பலர் பார்த்திருப்பீர்கள். இதுகாறும் இதனை யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் கர்நாடகாவில் பி.ஜெ.பி அரசு பதவி ஏற்ற பின்னர் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப் பட்டுள்ளது. அது மட்டுமா? உணவு முறையும் விட்டு வைக்கவில்லை வலது சாரி அமைப்புகள். தெற்கு மற்றும் கிழக்கு டெல்லியில் அமாவாசை முந்திய, பிந்திய அமாவாசை அன்றும் இறைச்சி கடை திறந்திருக்க அனுமதியில்லை என்ற அறிவிப்பு சொல்லப் பட்டது. விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தால், இந்து ஜார்கன் வேதிகா அமைப்புகள் இந்துக்கள் முஸ்லிம் இறைச்சி கடைகளில் வாங்குவதினை தவிர்க்க அறைகூவல் விட்டுள்ளது, அதற்கு காரணமாக அது ஹலால் இறைச்சியாம். அந்த ஹலால் இறைச்சியில் எவ்வாறு விஞ்ஞானப் பூர்வமான செயல் இருக்கின்றது என்று அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் மத துவேசம் அவர்களை அப்படி சொல்ல வைக்கின்றது. ஒருவர் என்ன உணவு உண்ண வேண்டும், எந்தக் கடையில் என்ன வாங்க வேண்டும் என்ற உரிமையை அடுத்தவர் எந்த சட்டத்தில் அனுமதிக்கின்றது என்று தெரியவில்லை. ஏப்ரல் 10ந்தேதி இரவு டெல்லியிலுள்ள ஜவஹர்லால் பல்கலைக் கழக காவேரி விடுதியில் இரவு புலால் உணவு பரிமாறப் போகிறதை அறிந்த ஏ.பி.வி.பி(ஹிந்து மாணவர் அமைப்பினர்) உள்ளே புகுந்து தாக்கியுள்ளனர். அதில் பெண் மாணவர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். உங்களுக்கு எல்லாம் தெரியும் வண்டியில் வியாபாரத்துக்காக அல்லது வளர்ப்பதிற்காக பசு மாடுகளை ஏற்றிப் போனவர்களை அடிப்பதும், கொலை சமபவத்தில் ஈடுபடுவது. அதுபோன்ற Lynching சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ஏன் NIA  என்ற தேசிய காவல் படை நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் 1.4.2022ல் Lynching போன்ற குற்றங்கள் நடந்தால் அது தேசிய குற்றம் என்ற சட்டத்தில் கையொப்பம் இட்டுள்ளார்.  கர்நாடகாவில் உள்ள தார்வாடில் உள்ள கோவிலில் முஸ்லிம்கள் கடை வைக்கக் கூடாது என்று கூக்குரல் எழுப்பப் பட்டதாம். கர்நாடக முன்னாள் முதல்வர் எட்டி வீரப்பா கூட வலது சாரி அமைப்பினருக்கு 11.4.2022 அன்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிகள் நமது ஒரு தாய் மக்கள் அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். ஆனால் சில விஷமிகள் மத நல்லிணக்கத்தினை குழைப்பது நல்லதல்ல என்று அறிவுரை வழங்கியுள்ளார். நீங்கள் பழனி கோவிலுக்குப் போகும் வழியில் உள்ள கடைகள் பெரும்பாலும் பழனி பெரிய மசூதிக்கு சொந்தமாகும். அப்படியென்றால் அங்கே முஸ்லிம்கள் கடை வைக்கக் கூடாதா? அவ்வாறு செய்தால் அடிப்படை உரிமை மீறுவது ஆகாதா? டெல்லி சென்றவர்கள் குத்புதீன் ஐபக் என்ற முஸ்லிம் மன்னன் கட்டிய குதுப் மினாரை பார்க்காமல் வர மாட்டீர்கள். அந்த கோபுரம் 1993ம் ஆண்டு UNESCO ஐநா கலாச்சார மையத்தினால் பழமை வாய்ந்த கட்டிடக் கலை என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது. தற்போது VHP விஷ்வா ஹிந்து பாரிசாட் அதனை கடவுள் விஷ்ணு சிலம்பி என்றும் அதனை இடித்து விட்டு விஷ்ணு கோவில் கட்டவேண்டும் என்றும் சொல்வது என்ன நியாயம் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றவில்லையா?

            வட இந்தியாவில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் 2/2022ல் வலது சாரி சுவாமி மஹாசாவானந் இந்துக்கள் ஒவ்வொருவரும் ஆயுதம் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும்  அது தான் ஆர் எஸ் எஸ் அமைப்பு ஜக்கா என்ற பெயரில் கம்பு, கத்தி மற்றும் பெண்களுக்கு துப்பாக்கி பயிற்சியினை நாட்டில் பல இடங்களில் நடத்துகின்றன. உத்திரபிரதேச சுவாமி முனி  கெஜராபாதில் பேசும்போது முஸ்லிம் பெண்களை கற்பழிக்க வேண்டும் என்று முண்டாசு தட்டியுள்ளார். அவருக்குத் தெரியாது சீரிப் பாயும் புலியினை அரிசியில் உமியை பிரித்து எடுக்கும் சொளகு கொண்டு விரட்டும் வீரப்பெண்கள் நிறைந்த நாடு இந்திய மண் என்று. இப்படி மத, மற்றும் பண்பாடு, வன்முறை தூண்டுகிற பேச்சினை வலது சாரி அமைப்பு தலைவர்கள் எல்லாம் பேசிவருகிறார்கள், ஆனால் இம் என்றால் என்.ஐ.ஏ. என்று சொல்லும் அரசுகள் ஏன் இந்த செயல்களுக்கு மட்டும் கண்டும் காணாமல் உள்ளது என்று தெரியவில்லையே!

            அதற்கு ஒத்து ஊதுவதுபோல கர்நாடக உயர் நீதிமன்றமும் ஹிஜாப் அணிவது முஸ்லிம்களுக்கு கட்டாயமில்லை என்று கூறியுள்ளது. ஒரு மதத்தினர் பண்பாடு பற்றி கூறுவதற்கு யாருக்கு உரிமை உண்டு. பெண்கள் வன் முறை பற்றி பேசும் சட்டத்தில் மத வழி பாடுகளில் பெண்களை படுக்க வைத்து அவர்கள் முதுகில் ஆண்கள் நடக்க மட்டும் அனுமதியுண்டு. தூக்கு விழா என்று பச்சிளம் குழந்தைகள் கதற கதற உயரத்தில் ஒருவர் முதுகில் அலகு குத்திவிட்டு தூக்கும் அனுமதிக்கு யார் அனுமதி கொடுத்தது, பெண்களுக்கு தோசம் மற்றும் பேய் பிசாசு விரட்டுகிறேன் என்று சாட்டையால் பெண்களை சராமாரியாக அடிக்கும் வன்முறை செயல்  உரிமை எந்த சட்டத்தில் உள்ளது. அவையெல்லாம் அவர்கள் மத பண்பாடு, வழிபாடு தானே! ஏன் அதனையெல்லாம் பேசுவதில்லை, நீதிமன்றங்கள் கண்டும் காணாது உள்ளதே என்ற கேள்வி உங்களுக்கு தோன்றவில்லையா!

            நம் சமுதாயம் இது போன்ற கொடுமைகளை இதுவரை அனுபவிக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஏன் இல்லை ரசூலுல்லாஹ் காலத்திலிருந்து, சிலுவை யுத்தம் வரை எதிர் கொண்டுதான் எழுச்சி கண்டுள்ளது. 13ம் நூற்றாண்டில் மங்கோலிய பேரரசின்  செங்கிஸ்கான் பேரன் மொங்கோகான் பல நாடுகளை கைப்பற்றினான். 500 ஆண்டு பழமையான அப்பாஸிய ஆட்சிமீது மங்கோலியர் கவனம் திரும்பியது. தளபதி ஹுலாகு கான் தலைமையில் பாக்தாத்தை கைப்பற்றி சொல்லவொன்னா துன்பத்தினை முஸ்லிம்களுக்கு தந்தனர். அதன் பின்பு அவனுடைய பார்வை ஜெருசலம் மீது திரும்பியது. அப்போதைய மல்லுக்கு மன்னன் குத்தூஸ் ஜென் ஜலாலுதீன் தலைமையில் மங்கோலிய படையினை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டான். அதேபோன்று சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்கள் ரத்தம் ஜெருசலத்தில் கிரண்டை கால் அளவிற்கு சிந்தினாலும் மன்னன் சாலாவுதின் இறுதியில் வெற்றிகொண்டான். எத்தனை துன்பம் வந்தாலும் முஸ்லிம்களுக்கு வரும் துன்பங்களை கண்டு புறமுதுகிட்டு ஓடாது நேர் கோட்டில் எதிர்த்து நின்று வெற்றி கொள்வதே முஸ்லிம்கள் வரலாறு.

            டெல்லியில் நடந்த ஹிந்து மகாசபா பஞ்சாயத்தில் அர்ச்சகர் பதி நரசிம்மானந்தா பேசும்போது முஸ்லிம் ஒருவர் மட்டும் பிரதமரானால் 50 சதவீத ஹிந்துக்கள் முஸ்லிமாக்கப் படுவர் என்று கூறியுள்ளார். இந்தியாவினை 500 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் இருந்தும் முஸ்லிம்கள் ஜனத்தொகை 15 விழுக்காடு தாண்டாத போது ஒரு முஸ்லிம் பிரதமர் மட்டும் எப்படி அந்த காரியத்தினை செய்யமுடியும் என்று யாரும் கேள்வி கேட்கத்தானே செய்வார்கள். ஏன் முஸ்லிம்கள் எவருக்கும் இந்திய நாட்டின் பிரதமராகும் தகுதி இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். 8.8.2018ந்தேதி திபெத்தின் ஆன்மிக தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசினை வென்றவருமான  தலாய்லாமா அவர்கள் கோவாவில் உள்ள சாந்திநிகேதன் நகரத்தில் உள்ள கோவா இன்ஸ்டிடூட் ஆப் மானேஜிமென்டில் போசும்போது தேச பிதா மகாத்மா காந்தி அவர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தால் முகமது அலி ஜின்னா அவர்கள் தான் வரவேண்டும், ஏனென்றால் அவர்தான் தகுதியானவர் என்று சொன்னதாகவும், ஆனால் சில காரணங்களுக்காக அவருடைய ஆசையினை நிறைவேற்றுவதற்கு ஜவர்கர்லால் நேரு தடையாக இருந்து பின்பு அவரே முதல் பிரதமரானதும், நாடு பிரிவினைக்கும் அது தான் காரணம் என்று பேசியிருக்கும் போது முஸ்லிம்களை பிரிவினைக்கு முழுக்காரணம் என்று தற்போது சிலர் சொல்வது வரலாற்றை முழு சோற்றில் பூசணிக்காயை மறைக்கும் செயலாக உங்களுக்குத் தெரியவில்லையா?

            பிரிட்டிஷ் அரசிடம் இந்தியாவிற்காக ஆணித்தரமாக போராடிய தலைவர்களில் 1930ம் ஆண்டு லண்டனில் நடந்த முதல்  வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட அம்பேத்கார், முகமது அலி ஜின்னா, முகமது ஜபாருல்லா ஆகியோரும், 1931 ம் ஆண்டு லண்டனில் நடந்த இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட சுல்த்தான் அஹமத் கான், மிர்ஸா இஸ்மாயில், லியாகத் அலி கான், முகமது இக்பால், முகமது அலி ஜின்னா ஆகியோரும், மூன்றாம் வட்ட மேஜை மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட ஆகாகான், ஹஸ்னவி, ஹாபிஸ் கிகாயத், முகமது இக்பால் ஆகியோரும் முக்கியமானவர்கள். அப்படி இருந்தும் அவர்கள் எல்லோரும் பிரதமராகவில்லையே அதற்குக் காரணம் உள்ளடி வேலையா என்று தெரியவில்லையா உங்களுக்கு?

            இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள 'இந்தியா கேட்டில் உள்ள நினைவு சின்னத்தில்' இந்தியாவின் சுதந்தர போராட்டத்திற்காக உயிர் நீத்த 95300 தியாகிகளின் முஸ்லிம்கள் மட்டும் 61945 என்று குறிக்கப் பட்டிருக்கும் ஏதோ முஸ்லிம்கள் எல்லாம் அந்நியர் என்றும் அவர்களுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் இல்லை என்பது போல கூக்குரல் எழுப்புவது ஏன் என்று தெரியவில்லையா உங்களுக்கு!

            இந்தியாவில் இருக்கும் 15 சதவீத முஸ்லிம்களும் மற்றவர்கள் போல திராவிட மக்களை மொஹஞ்ஜோதாரா-ஹரப்பா நாகரீகத்திலிருந்து விரட்டிய நாடோடிகளா? இல்லையே! இந்திய மணணில் மண்ணோடு மண்ணாக உழைத்து முன்னேறிய இந்தியர் தானே! அவர்கள் இஸ்லாம் என்ற அமைதி மார்க்க அகிம்சை கொள்கையில் கவர்ந்து மாக்களை புனிதர் ஆக்கிய மார்க்கத்தினை தழுவிக்கொண்டதால் அவர்கள் எல்லோரும் அந்நியரா? 80 சதவீத கிராமங்களில் சென்று பார்த்தால் முஸ்லிம்களும் அந்நியோந்நியமாக, அண்ணன் தம்பியாக, மாமன் மச்சானாக வாழ்வதினை வலது சாரி கும்பலின் கண்களுக்குத் தெரியவில்லையா? 

            இந்திய சக்ரவர்த்தி அக்பர் அவர்கள் முஸ்லிமாக இருந்தும் அவர் ராஜபுத்ரர்களுடன் பழகியதால் அந்த இனப் பெண் ஜோது பாயினை திருமணம் செய்தார். அந்த இந்தப் பெண் பெற்றெடுத்த மகனே ஜஹாங்கிர் அவருடைய மகன்கள் தான் ஜாஜஹான், அவருடைய மகனார் தான் சக்ரவர்த்தி அவுரங்கசிப். அவர்கள் பெற்றறுத்த பிள்ளைகள் எல்லாம் ஹிந்து கொள்ளு பாட்டி பேரன்கள் தானே! ஏன் அவர்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள் என்றால் இஸ்லாம் திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, லஞ்சம், ஊழல் கூடாது, பதுக்கல்  கடத்தல் கூடாது, வட்டி கூடாது, கொலை கூடாது, கற்பழிப்பு கூடாது, பிறர் பொருளை அபகரிக்கக் கூடாது, மனிதர்களில் வேற்றுமை கூடாது, பிற மதத்தினை நிந்தனை செய்யக் கூடாது, நம்பிக்கை துரோகம், நாட்டினை துரோகம்செய்தல், பிறர் பொருளினை அபகரித்தல், அனாதையாய் விரட்டி அடித்தல், ஈகை குணம் கொள்ளல், தீமையினை சுட்டெரித்தல், மது, மாது, போதைப் பொருளுக்கு அடிமையாகிவிடக்கூடாது போன்ற 700 கட்டளைகளை போதித்ததால் தானே அவர்கள் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் எப்படி அன்னியவர் ஆவர். அதனைத் தானே கர்நாடக முன்னாள் முதல்வர் எட்டி வீரப்பா கூட சொல்லியுள்ளார். இப்படி சந்ததி சந்ததியாக வாழும் இந்தியாவில் புது புல்லாங்குழல் சில வலது சாரி அமைப்புகள் ஊதுவதினால்  அடிப்படை உரிமைகள் எல்லாம் ஒரு காலத்தில் காற்றில் பறந்து போய் விடுமா என்று காலம் தான் பதில் சொல்லவேண்டுமா?

           

           

Tuesday, 8 March 2022

‘யாம் அறிந்ததை நீயும் அறிவாயோ !’

 


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

‘கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு’ என்ற பழமொழி அனைவருக்கும் தெரியும். 'சீனாவிற்கு அந்தக் காலத்தில் பயணம் கடுமையாக இருந்தாலும் அங்கே சென்றாவது கல்வி கற்றுக் கொள்ளுங்கள்' என்றது இஸ்லாம். அகிலத்தில் எத்தனையோ அறியாத செய்திகள் உள்ளன. எந்த மனிதரும் முழுமையாக கற்றவரில்லை. ஆகவே தான் அறியாத சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த கட்டுரையினை வடியமைத்துள்ளேன்.

ஆங்கிலேய ஆட்சியில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும்போது அவர்களின் குழந்தைகள் விளையாடுவதிற்காக அடிமைப்பட்ட நாடுகளின் மக்களைக் கொன்று குவிக்கும்போது அவர்களின் தலைகளை கால் பந்து விளையாடுவதிற்காக கொடுப்பார்கள் என்ற செய்தி மிகைப்படுத்துதலாக இருக்குமோ என்று ஒரு பக்கம் எண்ணத் தோன்றும்போது, ஒரு செய்தியினை கண்டேன். 1932ம் ஆண்டு உலக முதல் கால் பந்தாட்டம் உருகுவேயில் நடந்த  நிகழ்ச்சியின் போது  காற்றடித்த பந்துகளுக்குப் பதிலாக குரங்குகளின் தலைகளைப் பயன் படுத்தினார்களாம். 2022ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கும் உலக கால்பந்தாட்டத்திற்கு வெள்ளை மற்றும் மஞ்சள் பந்துகளை உயபோகிக்கப் போகின்றார்களாம்.

வானத்தில் தவழும் சந்திரன் மற்றும் பூமிபோன்ற கோளங்கள் சூரியனை சுற்றும் என்று கேள்விப் பட்டுள்ளோம். ஆனால் சந்திரன் கிரகம் வியாழன்(Jupitar) கிரகத்தினை ஏழு மணிக்கு ஒருதடவை ஒரு மணிக்கு 70,400 மணி வேகத்தில் சுற்றுமாம். நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக் கோபுரங்களை 11.9.2001ல் இரு விமானங்கள் மோதி அதனை தகர்த்ததில் விளைவாக 2763 பேர்கள் உயிறிழிந்தனர் என்பதும் அதனைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் போர் தொடுத்தது உங்களுக்குத் தெரியும். அந்தக் கட்டிடங்களை நேரில் பார்ப்போமேயானால் அது ஒரு ‘பான் கேக்’ போன்று அடுக்கடுக்காக இருக்கும். ஒரு அடுக்கு கீழே விழுந்தால் அதற்கு அடுத்தாற்போல உள்ள அடுக்கு விழாதவாறு கட்டிடக் கலைஞர்களால் அமைக்கப் பட்டது. பின்பு எப்படி அந்த இரண்டு கோபுரங்களும் தரைமட்டமானது என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கை தானே. இரண்டு விமானங்களில் உள்ள ஏரி பொருட்களின் தீப்பிழம்பால் அந்த இரண்டு கட்டிடமும் தரைமட்டமானதாம். பழமொழி, 'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' தானே!

இந்தியாவில் எந்தப் பகுதியில் கொலை நடந்தாலும் ஆங்கிலேய அரசால் 1860ல்  ஆண்டு இயற்றப் பட்ட இந்திய தண்டனை சட்டம் 302 படி குற்றமாகும். ஆனால் அந்த கொலைக் குற்றம் அமெரிக்காவில் கூட்டாட்சியின் குற்றமாக (Federal offence)1963ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபர் ஜான் எப் கென்னடி கொலைக்குப் பின்புதான் குற்றமாக்கப் பட்டதாம்.

கொரானா நோய் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய காலத்தில் ஏன் அனைவரும் மாஸ்க்(முகத்திரை) அணிய வேண்டும், ஒருவருக்கொருவர் இடைவெளி விட வேண்டும் என்று சொல்லப் பட்டதாம் என்றால், புளு நோய் தொற்றுள்ள ஒருவர் இருமும்போது அந்த காற்றில் கிருமிகள் 60 மைல்கள் வேகத்தில் பரவக்கூடியது என்பதால் தான் அவ்வாறு சொல்லப் பட்டதாம்.

பத்தாம் நூற்றாண்டின் பாரசீக நாட்டின் தலைமை மந்திரி அபுல் காசம் இஸ்மாயில் எங்கு சென்றாலும் ஒட்டகங்களில் புத்தகங்களை தன்னுடன் எடுத்துச் செல்வாராம், ஆகவே அவர் நடமாடும் பல்கலைக் கழகம் என்று அழைக்கப் பட்டாராம். காரணம் ஒரு அறிவாளியினை சுற்றி மற்றவர்கள் இருந்தால் தான் சபை சிறக்கும் என்று சொல்வார்கள். அபுல் காசத்திற்கு புத்தகமே துணையாம்.

பெரும்பாலான குழந்தைகள் இரவில் தான் பிறக்குமாம்.ஏனென்றால் முன்னோர்கள் பகலில் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டுவிட்டு இரவில் ஓய்வு எடுப்பதால் பிரசவவலி பெரும்பாலும் பகலை விட இரவில் தான் வருமாம். தற்போது சாதகம் பார்த்து குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டுமென்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர்.

முற்காலத்தில் அமெரிக்க கண்டத்தின் மெக்சிகோ பகுதியின் பழங்குடியினர் சூரியனை வழிப் பட்டு வந்தார்களாம். சூரிய பகவானின் கோபத்திலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான ஆண்களை பலியிடும் பழக்கம் இருந்ததாம். உங்கள்  பலருக்குத் தெரியும் தொலைபேசியை 1876ம் ஆண்டு ‘அலெக்சாண்டர் கிரஹாம் பெல்’ கண்டு பிடித்தது. அந்த தொலை பேசி சாதனம் மேல்  பலருக்கு சந்தேகம் இருந்ததாம் , ஆகவே அவர் கண்டுபிடித்தபின் ஒரு மாதத்தில் 6 தொலை பேசிகள் தான் விற்கப் பட்டதாம். ஆனால் இன்று தொலைபேசி உபயோகிப்பர் எண்ணிக்கை 531 கோடியாம்.

பர்மா செல்(Burma Shell) என்ற எண்ணைக் கம்பனி உலகம் முழுவதும் இருப்பது உங்களுக்குத் தெரியும். அந்த கம்பனியை ஏன் அவ்வாறு அழைக்கின்றார்கள் என்றால் அந்தக் கம்பனி முதன் முதலில் இங்கிலாந்தில் கடலுக்கு அடியில் இருக்கும் 'கடல் ஓடுகளை' எடுத்து விற்பனை செய்து வந்ததால் அந்த பெயர் வந்ததாம். அதே போன்று தான் Zony கம்பனி டிவி, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்வது உங்களுக்குத் தெரியும். அந்தக் கம்பனி முதன் முதலில் 'Rice Cooker' தான் கண்டுபிடித்ததாம்.

மனிதனின் உடலில் உள்ள தசைகளில் மிகவும் பலமானது எலும்பில்லா நாக்குதானாம். பெரியோர் 'அந்த எலும்பில்லா நாக்கிலிருந்து புறப்படும் சொல் கூர்மையான வாலை விட  என்றும், ஆறாத காயத்தினை ஏற்படுத்தக் கூடியது என்றும் ஆகவே பேசும்போது நிதானம் தேவை என்றும் சொல்வர். காஃபி  சுவையானது தான் அதுவும் பில்டர் காஃபி என்றால் நாவில் நீர் சுரக்காதவர் யாருமிலர். உலகிலேயே காஃபி குடிப்பவர்கள் அமெரிக்கர்கள் தானாம். அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு ஒரு கோடி மூட்டை காஃபி தேவைப் படுகிறதாம். ஒரு இடத்தில் நில நடுக்கம் ஏற்படும்போது எத்தனை மைல் வரை அதன் தாக்கம் உணர முடியும் என்று நினைகிண்றீர்கள். 1755ம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டின் 'லிசபன்' நகரில் ஏற்பட்ட நில நடுக்கம் தாக்கம் 2771 ஸ்காட்லாண்ட் நாட்டின் 'லாட் நெஸ்' நகரில் உணரப்பட்டதாம்.

பிளாஸ்டிக் பொருட்களை ஏன் உபயோகிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா, அவை சீக்கிரமே மக்கி அழுகிபோகுமாம். ஆனால் கண்ணாடி எத்தனை தடவை மறு சுழற்சி செய்தாலும் கெட்டுப் போகாதாம். ஆகவே தான் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதினை தடை செய்துள்ளார்கள். அந்தக் காலத்தில் முஸ்லிம்கள் திருமண வைபவங்களில் மணமகனுக்கு பெரியோர் உபயோகிக்கும் துருக்கி தொப்பி என்ற சிகப்புக் கலர் கொண்ட நீண்ட குஞ்சம் வைத்ததினை அணிவார்கள். அது ஏன் தெரியுமாம் திருமணம் நடக்கும்போது கூட்ட நெரிசலில் மண மகன் தலையில் வேற்காது, காற்று வருவத்திற்காக அணிவார்களாம். அதேபோன்று தான் பெரிய ஸ்டார் ஹோட்டல் சமையலையில் சமையல்  கலைஞர்கள் நீண்ட வெள்ளை நிற தொப்பியும், வெள்ளை சட்டையும் அணிந்திருப்பதினை கண்டு இருப்பீர்கள். அவை எதற்கென்றால் சமையலறையில் ஏற்படும் வெட்ப தாக்கத்தினை தாங்குவதிற்காக கொடுக்கப் பட்டுள்ளதாம். திருக் குரான் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் ரசூலாவிற்கு 23 ஆண்டுகள் இடைவெளியில் அருளப்பட்டது என்று உங்களுக்குத் தெரியும். அதனை மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி) அவர்கள் காலத்தில் கைகளால் எழுதப் பட்டதாம். ஆனால் கிருத்துவர்களின் வேதமான பைபிள் 40 எழுத்தாளர்களால் 1500 ஆண்டுகளில் எழுதப் பட்டதாம்.

கம்ப்யூட்டர் இயக்குவபர்களோ, அல்லது இசை ரசிப்பவர்களோ இரண்டு காதுகளிலும் ஹெட் போன் மணிக்கணக்கில்மாட்டிக் கொண்டு  இருப்பதனை பார்த்திருப்பீர்கள். அவ்வாறு இடைவெளி இல்லாமல் மாட்டிக் கொள்ளும்போது பாக்ட்ரியா (நுண்ணுயிர்கள்) 700 மடங்கு அதிகமாகுமாம். ஆகவே அதனை உபயோகிக்காது நல்லது என்றே சொல்லப் படுகிறது.

ஆலிவ் எண்ணெய் மிகவும் நல்லது மற்றும் மருத்துவ குணம் கொண்டது என்று உங்களுக்குத் தெரியும். சமையல் செய்வதற்கு ஏற்ற எண்ணெய், ஒமேகா சத்து பொருட்கள் அமைந்தது, வைட்டமின் E மற்றும் K ஆன நோய் எதிர்ப்பு சக்தி குணம் கொண்டது, வாத நோய் போக்கக்கூடியது, உடல் பெருமானை கட்டுப்  படுத்தும், ரத்தம் உறையாமல் பார்த்துக் கொண்டும், இதய நோய் வராமலும் தடுக்கும், டைப் 2 சக்கரை குறைபாடுகள் கொண்டவர்களுக்கு நிவாரணியாகும். அந்த ஆலிவ் மரம் 1500 ஆண்டுகள் வரையும் வாழுமாம்.

பெரியவர்கள் சுவையான தகவல்கள் பார்த்தோம். அதே நேரத்தில் சிறுவர்களுக்கான சில தகவல்களை பகிரலாம் என எண்ணி கீழ் கண்ட செய்திகளை தருகின்றேன்:

1)    ஒரே இனத்தில் பிறந்த இரண்டு பாலின மக்கள், மிருகங்கள், பறவைகள் இணைந்து குழந்தைகள், குட்டிகள், குஞ்சுகள் பெற்றுக் கொள்வதினை உங்களுக்குத் தெரியும். ஆனால் காடுகளில் ஒரு ஆண் சிங்கமும், ஒரு பெண் புலியும் இணைந்து பெற்றுக் கொள்ளும் மிருகத்திற்கு என்ன பெயர் தெரியுமா? அதனை ''(Liger) லைகா  என்று அழைக்கப் படுமாம். டால்பின் மீன் கடலுக்கடியில் 50 அடிதூரத்தில் எழுப்பப் படும் ஒலியினை கண்டுபிடித்து விடுமாம். ஆண் சிங்கத்தின் கர்ச்சிப்பின் குரலை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கேட்கலாமாம். யானைக் கூட்டம் வனங்களில்  நீரின் ஆதாரத்தை மூன்று மைல்களுக்கு அப்பாலிருந்து கண்டு பிடித்துவிடுமாம். கடலில் உள்ள ப்ளூ வேல் என்ற திமிங்கலம் நீருக்கடியிலிருந்து எந்த நீர் விலங்குகளும் எழுப்பாத 188டெசிபெல் ஒரு ராக் இசை எழுப்பும் ஒலியினை ஒத்து இருக்கும்சப்தத்தினை எழுப்புமாம். ஆப்பிரிக்க காடுகளில் வாழும் Cape-water buffalo (நீர் எருமை) மூத்திரத்தினை உபயோகித்து ஆப்பிரிக்க பழங்குடியினர் ‘ஹரிகன்’ விளக்குகளை எரித்தார்களாம்.

2)    நமக்கெல்லாம் இதயம் இடது பக்கம் இருக்கும். ஆனால் இதயம் தலைப் பகுதியில் உள்ள பிராணி எது தெரியுமா? அது சுவையான உணவைத் தரும் இறால்  தானாம். நாம் சில நய வஞ்சகர்களை இதயம் இல்லாதவன் என்றும் கூறுவதுண்டு. முதன் முதலில் மனிதர்களுக்கு இரண்டு இதயம் இருக்கின்றது என்று உலகிற்கு அறிவித்தது இஸ்லாம் தான். பெரும்பாலான படித்த இளைஞர்கள் அது எப்படி சாத்தியம் என்று கூறுவர். மருத்துவ அறிஞர்கள் ஆராய்ந்து பெண்கள் குழந்தையினை வயிற்றில் தாங்கி இருக்கும்போது தாய்க்கும் அதன் சேய்க்கும் இரண்டு இதயம் இருப்பதனை ஒப்புக் கொண்டுள்ளனர்.

3)    கஷ்டப் பட்டு உழைத்து பொருள் சேர்த்தவர் சொல்லும்போது, நான் உழைத்து தேனீ போன்று சிறுக சிறுக பணம் சம்பாதித்தேன் என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கின்றார்கள் என்றால் ஒரு தேனீ இரு நூறு மலர்களை தேடி எடுத்தால் ஒரு சொட்டு  தேனும் 10 லட்சம் மலர்களிருந்து சேகரிக்கும் தேன் எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா, வெறும் 435 கிராம் தானாம். வாலை மீன் போன்று நீண்டு இருக்கும் ஈல் மீன் தனது இறையினை பிடிக்க அல்லது தன்னை கொல்லவரும் எதிரியினை விரட்டுவதிற்கும் 650 வாட்ஸ் மின்சாரத்தினை வெளிப் படுத்துமாம்.

4)    சிலர் தனது நிலையினை அடிக்கடி மாற்றிக் கொள்வதால் ‘பச்சோந்திப்’ பய என்று சொல்வது வழக்கம். காரணம் ஓனான் தனது நிறத்தினை மாற்றிக் கொள்வதால். அப்படி மாற்றிக் கொள்ளும்போது அது தனது சுற்றுப் புறத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஓனான் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பத்தான் தன்னை மாற்றிக் கொள்ளுமாம். 

5)    அதே போன்று தான் 'flipper fish' என்ற இறகுகள் கொண்ட மீனின் விஷம் ஒரு மனிதனை உயிரிழக்கச் செய்யக் கூடிய சயனைட் விட கொடிய விஷம் கொண்டதாம். அதனை உபயோகித்து தன்னிடம் நெருங்கும் மனிதனை செயலிழக்க செய்து விடுமாம்.

6)    முதன் முதலில் பல் துலக்கும் 'tooth brush' சீனாவில் தான் கண்டு பிடிக்கப் பட்டதாம். பிரஸ்ஸில் உள்ள நார் போன்ற பொருளுக்குப் பதிலாக குதிரை பிடரி மயிரை உபயோகித்தார்களாம்.

நான் மேற்கூறிய தகவல்கள் சில உங்களுக்குத் தெரிந்து இருக்கும் ஆனால் பலருக்கும், சிறார்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கும் நீங்கள் சொல்வது மூலம் பொது அறிவு விரிவடையும் என்பது உறுதிதானே!